Saturday, August 31, 2013

       கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர்"பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் நடக்கும் சண்டை சச்சரவுகளை, அமைதியான முறையில் பேசி, தீர்வு காண வேண்டும். ஒரு போதும், வன்முறை தீர்வாகாது' என்பது, இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், பேச்சு மூலம், இரு நாட்டு உறவுகள் பலப்படவில்லை. நாம் மட்டும் அமைதியாய் இருப்பதால் தான், பாக்., ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீதும், இந்திய ராணுவ வீரர்கள் மீதும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு.
உலகிலேயே, மக்கள் தொகையில், இரண்டாவது மிகப் பெரிய நாடு; சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ராணுவம்; மக்கள் தொகையில், 70 சதவீதம் இளைஞர்கள் என, இருக்கும் நாம் ஏன், பாக்., நம் மீது நடத்தும் தாக்குதலை, பொறுத்துக் கொள்ள வேண்டும்; அநியாயமாக, இந்திய வீரர்களை இழக்க வேண்டும்? அத்துமீறி தாக்குதல் தொடுக்கும் பாக்., மீது, நாம், அதிரடியாய் தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதலை பாக்., ராணுவம் எதிர்கொள்ள முடியாமல், பாக்., ராணுவமே நம்மை பேச்சுக்கு அழைத்தால் தான், அது உண்மையான பேச்சாக அமையும். அதுவரை, பாக்., நம்மை சீண்டியபடியே இருக்கும். கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர். இது தான் உலக இயல்பு! பொறுத்தது போதும். இந்திய ராணுவமே பொங்கி எழு; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடட்டும்.

No comments:

Post a Comment