Saturday, August 17, 2013

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - நிர்மலா சீதாராமன்
பாரதிய ஜனதா கட்சியில் சமீப காலமாய்
சக்கை போடு போடும் பெண் வேங்கைகளில்
ஒருவர் "நிர்மலா சீதாராமன்"
நம் தமிழ்நாட்டில் நாம் அன்றாடம் கடைத்தெருவில்
அல்லது கோவில்களில் பார்க்கும், ஒப்பனைகள்
அதிகம் செய்துக் கொள்ளாத ஒரு சராசரி இந்திய
குடும்ப பெண்ணின் தோற்றம். அசாத்திய அறிவு,
பேச்சுத் திறன். எதிர்த்து பேசுபவர்களின்
கருத்துக்களை, புண்ணகையோடு அமைதியாக
கேட்டு, உடைத்தெறியும் திறமை. இவரின்
ஆங்கில பேட்டிகள் ஆகட்டும், தமிழ் நேர்காணல்
ஆகட்டும். பேச்சும் மொழி சுத்தமும், கச்சிதமாய்
இருக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக கருத்தாழமிக்கதாக இருக்கும். பாரதிய
ஜனதாவின் அலுவல் ரீதியான பேச்சாளராக இவர்,
மிக இக்கட்டான சூழ்நிலைகளை கூட, இயல்பாக
கையாளும் விதம், அசாத்தியமானது.
நிர்மலா சீதாராமன் திருச்சியில் பட்டப்
படிப்பை முடித்தவர், ஜவஹர்லால்
நேரு பல்கலை கழகத்தில் எம் பில் முடித்தார்.
குறிப்பாக, உலகப் புகழ் வாய்ந்த
பன்னாட்டு தனிக்கை நிறுவணமான "ப்ரைஸ்வாட்டர்
ஹவுஸில்" (pricewater house) ஆராய்ச்சி பிரிவில்
மேலதிகாரியாக பணிபுரிந்து, பின் சில காலம்
பி.பி.சி. யிலும் பணிபுரிந்தவர். தங்கள்
குழந்தை லண்டனில் பிறக்காமல் இந்தியாவில்
பிறக்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே தன்
பொருளாதார வல்லுனரான
கணவரோடு இந்தியாவுக்கு திரும்பியவர்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் முகமாய் இவர்
அணல் பறக்க பேசும் போதெல்லாம் நாம் பெருமிதம்
கொள்ளலாம். நாளை பா ஜ க ஆட்சி அமைத்தால்,
(இவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்)
இவருக்கு மிகப்பெரும் பதவிகள் கிடைக்க
வேண்டும் என்று விரும்புகிறேன். கிடைக்க
போகின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.
இரண்டு வருடம்
முன்பு இவரை ஹிந்து பத்திரிகையில்
பேட்டி எடுத்த போது, நீங்கள் பா ஜ கவில்
எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள், அதற்கு அவர்
"நான் தாமரையில் தண்ணீராக உள்ளேன்"
என்று தத்துவார்த்தமாக பதில்
சொன்னதை படித்து வியந்திருக்கிறேன்.
பா ஜ க வின் தொண்டர்கள் ஒவ்வொருவரும்
இவரை போல் தாமரை இலை தண்ணீராக எதையும்
எதிர்ப்பார்க்காமல் கடமையாற்றி வந்தால், கட்சி மிகச்
சிறப்பான வகையில் வளர்ச்சி பெறும் என்பதில்
சந்தேகம் இல்லை. —

No comments:

Post a Comment