Sunday, August 25, 2013

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவோம் என்றும் இது அரசியலுக்கு அப்பாற்பட்டு கலாச்சாரம் தொடர்பான விவகாரமாக பார்க்கிறோம் என்றும் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார். முன்னதாக உ .பி.,யில் இன்று நடக்கவிருந்த யாத்திரை போலீசாரால் நடத்தவிடாமல் தடுக்கப்பட்டு விட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத்சிங் அயோத்தியில் ரத யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடை சரியல்ல இது தவறானது. ராமர் கோயில் விவகாரம் அரசியல் கலந்தது அல்ல. இது கலாச்சார பிரச்சனை . அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்தே தீரும். அங்கு பிரமாண்ட கோயில் கட்டுவோம். உ பி., மாநில அரசும், காங்கிரஸ் அரசும் இதில் அரசியல் விளையாட்டு நடத்தி விட்டது. மோடியை பொறுத்தவரை அவர் சந்தேகத்திற்கிடமின்றி நாடு முழுவதும் ஒரு பிரபலமான பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment