Tuesday, August 13, 2013

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார். மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்திக் கொண்டு ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்காக மானிய விலையிலான உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வர அவசரம் காட்டுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த மாதம் இத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால் பார்லி.,யில் 6 வாரங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும். பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முலாயம் சிங் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு அளித்ததால் பிற கட்சிகளில் ஒப்புதலை பெறாமல் இம்மசோதாவை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மசோதா மீது பார்லி‌.,யில் விவாதம் நடத்தி விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக பார்லி.,யில் தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சில உறுப்பினர்களும், சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த சில உறுப்பினர்களும் குரல் எழுப்பி அவையை முடக்கி வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் முடிவில் அரசு உறுதியாக இருந்தால் அனைத்து மாநில முதல்வர்களையும் அழைத்து மசோதா குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு சட்டத்தால் அரசுக்கு ரூ.1.25 லட்சம் கோடி செலவு ஏற்படும். நாடு முழுவதும் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு ரூ.2க்கு கோதுமையும், ரூ.3 க்கு அரிசியும் மானிய விலையில் வழங்கடுவதே உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment