Sunday, August 25, 2013

பா.ஜ.க இளைஞர் அணி இளந் தாமரை மாநாடு செப்டம்பர் 26–ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்தமாநாட்டில் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் உள்பட 1 லட்சம்பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு கோவையில் நடத்த முதலில் முடிவுசெய்து இருந்தோம். அங்கு இடத்தை பொருட் காட்சி நடத்த முன்பதிவு செய்துவிட்டதால் சென்னை அல்லது திருச்சியில் மாநாட்டை நடத்த முடிவுசெய்து இடத்தை தேர்வுசெய்து நாளை அல்லது நாளை மறுநாள் மாநாடு நடைபெறும் இடத்தை அறிவிப்போம்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக இடத்தை மாற்றி விட்டோம் என்பது சரியல்ல. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நான் கூறமாட்டேன். ஒருஅரசு பொதுமக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு பாதுகாப்புகொடுக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் அரசு பெண்கள்மானத்தை காப்பாற்ற முடியாததற்காகவும் தேசத்தை அவமானப்படுத்தும் அரசாகவும் இருந்துவருகிறது. வருகிறதேர்தலில் காங்கிரசை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஓட்டுவங்கி 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் நாட்டில் பா. ஜ.க அமைக்கும் கூட்டணியை மக்கள் ஆதரிப்பார்கள். மற்றகட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதை போல பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டால் பா.ஜ.க.,வும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என தமிழ் நாட்டில் முதன் முதலில் வலியுறுத்தியது பா.ஜ.க.,தான். இந்தியா சார்பில் யாரும் பங்கேற்ககூடாது. என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்

No comments:

Post a Comment