Tuesday, August 13, 2013

சோனியா மருமகன் வதேரா மீதான நிலமோசடி குறித்து பார்லி.யில் காரசார விவாதம் நடந்தது. இதில் வதேரா நிலமோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும்அதுவரை கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ஜ. பார்லி.எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5-ம் தேதி துவங்கியது. சுமூகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் கோரிக்கை விடுத்தார். ஆனாலும் இதுவரை எந்த அலுவல்களும் சுமூகமாக நடக்கவில்லை. எல்லையில் 5 இந்திய வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, காஷ்மீரின் கீ்ஷ்த்வார் கலவரம், தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் அமளி ஏற்பட்டு முடங்கி உள்ளது.
வதேரா நிலமோசடி
இந்நிலையில் அரியானாவில் குர்கான் நகரில், சோனியா மருமகன் ராபர்ட் வதேரா, டி.எல்.எப், நிறுவனத்துடன் மேற்கொண்ட டீலிங் மூலம் 3.5 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, நிலமோசடி செய்ததாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கெம்கா , அறிக்கையாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். பார்லி.யிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியுள்ளதால் காங். பீதியில் உள்ளது. இதனை பா.ஜ.எம்.பி.க்கள் கையில் எடுத்தனர்.

No comments:

Post a Comment