மத்திய திட்ட கமிஷன் அறிக்கையில், நம் நாட்டில், தனி நபர் வருவாய்
உயர்ந்து விட்டது; 27 ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஏழைகளாக கருதப்பட
மாட்டார்கள் என, தெரிவித்துள்ளது. இதே போல், மத்தியில், "மாண்புமிகு'
அமைச்சர்களும், "ஐந்து ரூபாய்க்கும், பன்னிரண்டு ரூபாய்க்கும், சாப்பாடு
கிடைக்கிறது. வறுமை நீங்கி, சுபிட்சமாக, நாட்டில் எல்லாரும் உள்ளனர்' எனக்
கூறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 ரூபாய்க்கு விற்ற, ஒரு
லிட்டர் பெட்ரோல், இப்போது, 70 ரூபாய்க்கு மேல் விற்கிறது. 15 ரூபாய்க்கு
விற்ற, ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல், மற்ற
அத்தியாவசியமான அனைத்து பொருட்களும், ஏழை, எளியவர்கள் வாங்க முடியாத
நிலையில் உயர்ந்து விட்டதை, மேற்குறிப்பிட்ட அறிவு ஜீவிகள், அறியவில்லை
போலும். அதிகாரத்தில் உள்ளவர்கள், நாட்டின் உண்மை நிலையை அறிந்து, எங்கு,
எதை பேச வேண்டும் என்பதை தெரிந்து, மக்கள் ஏற்றுக் கொள்ளும் கருத்துகளை,
சிந்தித்து பேச வேண்டும். "மாண்புமிகு' என்ற, மரியாதையான வார்த்தைக்கு
ஏற்றாற் போல், அதிகாரத்திலுள்ளவர்கள், நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு
அரசியல்வாதி களும், நாளிதழ்களை படிப்பார்களேயானால், நாட்டின் நிலைமையை,
ஓரளவிற்காவது புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment