Thursday, August 22, 2013

யாரிடமும் போருக்கு போக மாட்டேன். யாராவது, என்னிடம் வம்புக்கு இழுத்து அடிச்சாலும், பேசாமலே இருப்பேன். பேச்சு வார்த்தை மூலம், பிரச்னையை இழுத்தடிப்பேன்' என்று சொல்லும் ஒரு நாட்டிற்கு, எதற்கு, 3 லட்சம் கோடியில், மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்... அழகு பார்க்கவா?
இன்றைய சூழலில், நம்மை சுற்றி, பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம் உள்ளதால், அவர்களை ஒடுக்க, நமக்கு ஆயுத பலம் தேவை தான். ஆனால், வல்லரசு பலம் இருந்தும், சுண்டைக்காய் அளவில் இருக்கும் இலங்கையை, நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது, நமக்கு எதற்கு ஆயுதம்? தமிழக மீனவர்கள், 567 பேரை, குருவியை சுட்டுக் கொல்வதை போல், சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதே போல், அமெரிக்க மீனவர் ஒருவரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக, எந்த நாடாவது சுட்டு கொன்றிருந்தால், சுட்ட நாடு கருவாடு போல் ஆகியிருக்குமே... அவ்வளவு பயம், அமெரிக்கா மேல். அவர்களிடம் ஆயுதம் இருப்பதற்கு, அர்த்தம் உண்டு. கிள்ளினாலும், உடலை கூறு போட்டாலும், சொரணையின்றி, மானம் கெட்டு கிடக்கும் நமக்கு ஏன் ஆயுதம், விமானம் தாங்கி கப்பல்? ஓர் ஆண்டிற்கு முன், சீன நாட்டு மீனவர் ஒருவர், எல்லை தாண்டி, ஜப்பான் கடல் பகுதிக்கு சென்றதற்காக, அம்மீனவரை, ஜப்பான் அரசு கைது செய்தது. இதையறிந்த சீன அரசு, "எங்கள் நாட்டு மீனவரை விடுவிக்கா விட்டால், ஜப்பான் மிகப் பெரிய அழிவை சந்திக்கும்' என்று சொன்ன உடனே, மறுபேச்சு இல்லாமல், சீன மீனவரை விடுவித்தது, ஜப்பான். அமெரிக்காவிற்கு, நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சென்ற போதும்; முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசையும், அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றிய, மீராசங்கரை மிசிசிபி விமான நிலையத்தில், பெண் என்றும் பாராமல், சேலையை தடவி அவமானப்படுத்திய போதும்; ஐக்கிய நாடுகளின் சபையில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள, ஹர்தீப்சிங்கின் தலைப் பாகையை முற்றிலும் அவிழ்த்து காட்ட சொல்லி, வேண்டுமென்றே அவமான படுத்திய போதும், நாம் என்ன செய்தோம்? ஒப்புக்கு, ஒரு கண்டனத்தை அறிவித்தோம். ஈராக் அதிபர், சதாம் உசேனின் கதி, நமக்கும் வர வேண்டாம் என்று, நம் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பயந்து, அவமானத்தை விட, உயிர் பெரிது என்று மவுனம் காத்திருக்கலாம். தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் தந்து, நம் ராணுவ வீரர்களை, நம் எல்லைக்கே வந்து சுட்டு கொன்றதோடு அல்லாமல், கசாப்பு கடைக்காரன் போல் அவர்களின் தலையை அறுத்து எடுத்து, அத்தலையை சின்னாபின்னமாக்கி, கடந்த, ஒரு வாரத்திற்கு முன், மறுபடியும் ஐந்து இந்திய வீரர்களை சுட்டுக் கொன்ற கொலை பாதகர்களை, அடக்க வக்கில்லாத நமக்கு ஏன், விமானம் தாங்கி போர்க் கப்பலும், அணு சக்தி நீர்மூழ்கி கப்பலும்

No comments:

Post a Comment