Friday, August 9, 2013

குஜராத் தொழில்துறை முதலீட்டிலும் முதலிடத்தை பிடித்து, முன்னேடியாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா முழுவதும் ரூ.219,628 கோடி அளவிற்கு தொழிற்துறை முதலீட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மே மாத இறுதி வரை 1149 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விபர அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுவரை நிறைவுபெற்றுள்ள மொத்த தொழில்துறை திட்டங்களில் 25 சதவீதம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது. அதே சமயம் 18க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வெறும் 1 சதவீதம் தொழில்துறை திட்டங்களை நிறைவு செய்துள்ளன. இத்தகைய மாநிலங்களில் மிகக் குறைந்த அள‌வே தொழில்துறை வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டின் வர்த்தக தலைநகரைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா,தொழில்துறை முதலீட்டு திட்டங்களை நிறைவேற்றிய 2வது மாநிலமாக திகழ்கிறது. நடப்பு ஆண்டில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து, பூஜ்ஜிய அளவிலான முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. மற்ற வட கிழக்கு மாநிலங்கள் சொற்ப அளவிலான முதலீடுகளையே கொண்டுள்ளன. மிசோரம் 0.01 சதவீதமும், மேகாலயா 0.04 சதவீதமும், மணிப்பூர் 0.01 சதவீதமும், சிக்கிம் 0.05 சதவீதமும், அருணாச்சல பிரதேசம் 0.16 சதவீதமும், அசாம் 0.52 சதவீதமும், திரிபுரா 0.02 சதவீதமும் முதலீடுகளை செய்துள்ளன. சட்டீஸ்கர் மாநிலம் 13.39 சதவீதம் தொழில்துறை முதலீடுகளை மேற்கொண்டு கிழக்கிந்திய மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, முதலீடுகள் செய்ய சிறந்த இடம் மேற்வங்கம் என சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்குவங்க வங்கத்தில் தொழில்துறை முதலீட்டின் எதிர்காலம் என்பது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருண்ட நிலையிலேயே உள்ளன. இம்மாநிலத்தில் 2005 ம் ஆண்ட 5 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின் மேற்குவங்கத்தில் தொழில்துறை முதலீடு படிப்படியாக சரிவையே சந்தித்து வந்துள்ளது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை மேற்குவங்கத்தில் 1.35 சதவீதம் மட்டுமே ‌தொழில்துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 2012ம் ஆண்டு 11.20 சதவீதமாக இருந்த முதலீட்டு அளவு நடப்பு ஆண்டின் மே மாதம் வரை 3.19 சதவீதம் என்ற அளவையே எட்டி உள்ளது. பீகாரை பொருத்த வரை மற்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தொழில்துறை வளர்ச்சி என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் 0.45 சதவீதம் என்ற அளவிலேயே தொழில்துறை முதலீடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் 1.87 சதவீதம் முதலீடுகளை பெற்றுள்ளது.

2012ம் ஆண்டில் இந்தியாவில் ரூ.567,868 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொழில்துறை திட்டங்களில் செய்யப்பட்டன. கடந்த ஆண்டும் குஜராத், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்ளே தொழில்துறை முதலீட்டில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன

No comments:

Post a Comment