Tuesday, August 27, 2013

சமீபகாலமாக, மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகள், கணக்கீடுகள், புள்ளி விவரங்கள் தவறானவையாக இருக்கின்றன. இவை, பாமர மக்களை ஏமாற்றுவதாக வேண்டுமானால் இருக்கலாம்; கணக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது. மொத்தம், 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 80 கோடி ஏழை களுக்கு, உணவு உத்தரவாதம் அளிக்க கூடிது தான், உணவு பாதுகாப்பு திட்டம் என்கிறது, மத்திய அரசு. கிட்டத்தட்ட, 3ல், 2 மடங்கு மக்கள், ஏழை
என்கின்றனர்.ஆனால், அதே அரசின், திட்டக் கமிஷன் தரும் புள்ளி விவரமோ, நாள் ஒன்றுக்கு, 32 ரூபாய் செலவழிக்க கூடியவர்கள் ஏழைகள் அல்ல என்கிறது. அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம், நாட்டில், ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி பார்த்தால், வெறும், 15 கோடிக்கும் குறைவான மக்களே, இத்திட்டத்தின் கீழ், பயன் பெற முடியும். முன்பு, அரசு சேமிப்பு கிடங்குகளில், வீணாகிக் கிடந்த, பல லட்சம் கோடி டன் உணவு தானியங்களை, நாட்டில் உள்ள, ஏழைகளுக்கு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதெல்லாம், காதில் வாங்காமல் இருந்து விட்டு, தற்போது, அசுர கதியில், இத்திட்டத்தை செயல்படுத்த துடிப்பது ஏன்? லோக்சபா தேர்தல் தானே...! அடுத்ததாக, திருவாளர் சிதம்பரத்தின் கணக்கு, இரண்டாம் வகுப்பு மாணவனின் கணக்கை விட, மோசமாக உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு, 35 சதவீதம் வரி விதிக்கப் போகிறாராம். அது தான், ஏற்கனவே, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக் கூடியவர்களுக்கு, 30 சதவீத வருமான வரியின் அடிப்படையில், கூடுதலாக, 10 சதவீதம் சேர்த்து, ஆக, 33 சதவீதமாகி விட்டதே. இவர் அறிவித்துள்ள புதிய பிரிவு, 10 கோடி வரை 30 சதவீதம்; 10 கோடிக்கு மேல், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், 35 சதவீதம் தான். யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்?
இதை நன்கு உற்றுப் பார்த்தால், பெரும் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, வரிச் சலுகை என்று தான் கருத முடியும். ஆக, 100 கோடி ரூபாய் சம்பாதிப்பவனுக்கு, 35 சதவீத வரி என்பது, பெரிய விஷயமில்லை. உண்மையிலேயே, பெரும் பணக்காரர்களுக்கு, கூடுதல் வரி விதிக்க நினைத்திருந்தால், 1 கோடி முதல், 10 கோடி வரை, 35 சதவீதமும்; 10 முதல், 50 கோடி வரை, 40 சதவீதமும்; 50 கோடிக்கு மேல் எவ்வளவு வருவாய் ஈட்டினாலும், 50 சதவீதம் வரி விதிக்க துணிந்திருக்க வேண்டும்.
முடியாது... சிதம்பரம் தான், பணக்காரர்களின் தோழனாயிற்றே! அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தன் சிறப்பு பிரதிநிதியாக, அஸ்வனி குமாரை நியமித்துள்ளார். யார் இந்த அஸ்வனி குமார்... நிலக்கரி சுரங்கங்களுக்கு ஊழல் குறித்த, சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை திருத்திய சர்ச்சையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியவர்.
இதற்காகவே, மூன்று மாதத்திற்கு முன், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர். அவர், இன்று, பிரதமரின் சிறப்பு பிரதிநிதி. என்ன கொடுமை இதெல்லாம்... நாடு எங்கே உருப்பட

No comments:

Post a Comment