Saturday, August 31, 2013

       கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர்"பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் நடக்கும் சண்டை சச்சரவுகளை, அமைதியான முறையில் பேசி, தீர்வு காண வேண்டும். ஒரு போதும், வன்முறை தீர்வாகாது' என்பது, இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், பேச்சு மூலம், இரு நாட்டு உறவுகள் பலப்படவில்லை. நாம் மட்டும் அமைதியாய் இருப்பதால் தான், பாக்., ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீதும், இந்திய ராணுவ வீரர்கள் மீதும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு.
உலகிலேயே, மக்கள் தொகையில், இரண்டாவது மிகப் பெரிய நாடு; சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ராணுவம்; மக்கள் தொகையில், 70 சதவீதம் இளைஞர்கள் என, இருக்கும் நாம் ஏன், பாக்., நம் மீது நடத்தும் தாக்குதலை, பொறுத்துக் கொள்ள வேண்டும்; அநியாயமாக, இந்திய வீரர்களை இழக்க வேண்டும்? அத்துமீறி தாக்குதல் தொடுக்கும் பாக்., மீது, நாம், அதிரடியாய் தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதலை பாக்., ராணுவம் எதிர்கொள்ள முடியாமல், பாக்., ராணுவமே நம்மை பேச்சுக்கு அழைத்தால் தான், அது உண்மையான பேச்சாக அமையும். அதுவரை, பாக்., நம்மை சீண்டியபடியே இருக்கும். கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர். இது தான் உலக இயல்பு! பொறுத்தது போதும். இந்திய ராணுவமே பொங்கி எழு; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடட்டும்.
                                              
                                 நாடு பாதாளம் நோக்கி செல்கிறது
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூ.1,80,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மானிய விலை எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Friday, August 30, 2013

பிரதமரின் கண்காணிப்பில் இருந்த துறையில் ஊழல் நடந்துள்ளதாகச் சொல்லப்படுவதும், அது சம்பந்தப்பட்ட, 257 கோப்புகள், ஒட்டு மொத்தமாக காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுவதும், எந்த அளவிற்கு, தவறு நடந்துள்ளது என்பதை, படம் பிடித்துக் காட்டி விட்டது. பிரதமர் நேர்மையானவராக இருந்தால், உடனடியாக, பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சி காலங்களில், வரலாறு காணாத ஊழல்களை செய்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பதவியை விட்டு விடாமல், ஒட்டிக் கொண்டிருப்பது, நிச்சயம், மன்மோகனுக்கு பெருமை சேர்க்காது. அன்று, ஆதர்ஷ் ஊழலில் முக்கிய கோப்புகள், கடலில் தூக்கி வீசப்பட்டதும், எரிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. எனவே, அதை விட பெரிய ஊழலான, நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதால், நிச்சயம், இந்த, 257 கோப்பு களும் எரிந்து, சாம்பல் ஆக்கப்பட்டிருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து கிடையாது.
           நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ., உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ; 2013ம் ஆண்டிலேயே லோக்சபா தேர்தல் நடத்த வேண்டும் எனவும், அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசே காரணம் . மாநில சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகள் மற்றும் வெளிநாட்டு காரணிகள் மீது பழி போடும் விளையாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அத்வானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரைக்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அவையில் அவர் பேசியதாவது : உலக நாடுகளை அமெரிக்க எச்சரித்த போது அதனை மத்திய அரசு புறக்கணித்துள்ளது; நாட்டில் நடக்கும் ஊழல்களை பொருளாதார மந்தநிலைக்கு காரணம்; பிரதமரின் பேச்சு நம்பிக்கை அளிக்கவில்லை; அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது; அரசின் தவறான கொள்கைகளால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 27, 2013

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
Skyline of
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
அமைவு: 11.68,
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
நிறுவப்பட்டது 1956-11-01
தலைநகர் போர்ட் பிளேர்
மாவட்டங்கள் 3
பரப்பளவு
 - நகரம் 8,250 கிமீ²  (3,185.3 ச. மைல்)
மக்கள் தொகை (2011)[1]
 - நகரம் 379
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
HDI Green Arrow Up Darker.svg0.778 (உயர்வு)
Official languages ஹிந்தி, ஆங்கிலம்[2]
இணையத்தளம்: www.and.nic.in
அந்தமான் நிக்கோபார் தீவுகள், போர்ட் பிளேரைச் சுற்றியுள்ள பகுதி பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572. இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [3]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 356,152 100%
இந்துகள் 246,589 69.24%
இசுலாமியர் 29,265 8.22%
கிறித்தவர் 77,178 21.67%
சீக்கியர் 1,587 0.45%
பௌத்தர் 421 0.12%
சமணர் 23 0.01%
ஏனைய 238 0.07%
குறிப்பிடாதோர் 851 0.24%

மேற்கோள்கள்

  1. Census of India, 2011. Census Data Online, Population.
  2. "Most of Indian languages are spoken in Andaman and Nicobar Islands because of its cosmopolitan nature. The common language is Hindi whereas English and Hindi are used in official correspondence." Andaman District Administration, Profile, retrieved 2007-06-06
  3. Census of india , 2001

வெளி இணைப்புகள்

சமீபகாலமாக, மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகள், கணக்கீடுகள், புள்ளி விவரங்கள் தவறானவையாக இருக்கின்றன. இவை, பாமர மக்களை ஏமாற்றுவதாக வேண்டுமானால் இருக்கலாம்; கணக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது. மொத்தம், 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 80 கோடி ஏழை களுக்கு, உணவு உத்தரவாதம் அளிக்க கூடிது தான், உணவு பாதுகாப்பு திட்டம் என்கிறது, மத்திய அரசு. கிட்டத்தட்ட, 3ல், 2 மடங்கு மக்கள், ஏழை
என்கின்றனர்.ஆனால், அதே அரசின், திட்டக் கமிஷன் தரும் புள்ளி விவரமோ, நாள் ஒன்றுக்கு, 32 ரூபாய் செலவழிக்க கூடியவர்கள் ஏழைகள் அல்ல என்கிறது. அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம், நாட்டில், ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி பார்த்தால், வெறும், 15 கோடிக்கும் குறைவான மக்களே, இத்திட்டத்தின் கீழ், பயன் பெற முடியும். முன்பு, அரசு சேமிப்பு கிடங்குகளில், வீணாகிக் கிடந்த, பல லட்சம் கோடி டன் உணவு தானியங்களை, நாட்டில் உள்ள, ஏழைகளுக்கு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதெல்லாம், காதில் வாங்காமல் இருந்து விட்டு, தற்போது, அசுர கதியில், இத்திட்டத்தை செயல்படுத்த துடிப்பது ஏன்? லோக்சபா தேர்தல் தானே...! அடுத்ததாக, திருவாளர் சிதம்பரத்தின் கணக்கு, இரண்டாம் வகுப்பு மாணவனின் கணக்கை விட, மோசமாக உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு, 35 சதவீதம் வரி விதிக்கப் போகிறாராம். அது தான், ஏற்கனவே, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக் கூடியவர்களுக்கு, 30 சதவீத வருமான வரியின் அடிப்படையில், கூடுதலாக, 10 சதவீதம் சேர்த்து, ஆக, 33 சதவீதமாகி விட்டதே. இவர் அறிவித்துள்ள புதிய பிரிவு, 10 கோடி வரை 30 சதவீதம்; 10 கோடிக்கு மேல், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், 35 சதவீதம் தான். யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்?
இதை நன்கு உற்றுப் பார்த்தால், பெரும் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, வரிச் சலுகை என்று தான் கருத முடியும். ஆக, 100 கோடி ரூபாய் சம்பாதிப்பவனுக்கு, 35 சதவீத வரி என்பது, பெரிய விஷயமில்லை. உண்மையிலேயே, பெரும் பணக்காரர்களுக்கு, கூடுதல் வரி விதிக்க நினைத்திருந்தால், 1 கோடி முதல், 10 கோடி வரை, 35 சதவீதமும்; 10 முதல், 50 கோடி வரை, 40 சதவீதமும்; 50 கோடிக்கு மேல் எவ்வளவு வருவாய் ஈட்டினாலும், 50 சதவீதம் வரி விதிக்க துணிந்திருக்க வேண்டும்.
முடியாது... சிதம்பரம் தான், பணக்காரர்களின் தோழனாயிற்றே! அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தன் சிறப்பு பிரதிநிதியாக, அஸ்வனி குமாரை நியமித்துள்ளார். யார் இந்த அஸ்வனி குமார்... நிலக்கரி சுரங்கங்களுக்கு ஊழல் குறித்த, சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை திருத்திய சர்ச்சையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியவர்.
இதற்காகவே, மூன்று மாதத்திற்கு முன், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர். அவர், இன்று, பிரதமரின் சிறப்பு பிரதிநிதி. என்ன கொடுமை இதெல்லாம்... நாடு எங்கே உருப்பட
இந்திய கல்வி முறை பிரிட்டிஷ் முறைப்படியே உள்ளதாகவும், இது இந்தியர்களின் மனநிலையை பாழ்படுத்தி வருவதாகவும் பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இத்தகைய பிரிட்டிஷ் கல்வி முறை இந்திய கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சிகளும் பிரிட்டிஷ் முறைப்படியே நடத்தப்பட்டு வருவதாகவும், ஆங்கில மொழி மீதான மோகம் இந்திய மொழிகளின் மீதுள்ள ஆர்வத்தை குறைத்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

Sunday, August 25, 2013

பா.ஜ.க இளைஞர் அணி இளந் தாமரை மாநாடு செப்டம்பர் 26–ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்தமாநாட்டில் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் உள்பட 1 லட்சம்பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு கோவையில் நடத்த முதலில் முடிவுசெய்து இருந்தோம். அங்கு இடத்தை பொருட் காட்சி நடத்த முன்பதிவு செய்துவிட்டதால் சென்னை அல்லது திருச்சியில் மாநாட்டை நடத்த முடிவுசெய்து இடத்தை தேர்வுசெய்து நாளை அல்லது நாளை மறுநாள் மாநாடு நடைபெறும் இடத்தை அறிவிப்போம்.
சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக இடத்தை மாற்றி விட்டோம் என்பது சரியல்ல. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நான் கூறமாட்டேன். ஒருஅரசு பொதுமக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு பாதுகாப்புகொடுக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் அரசு பெண்கள்மானத்தை காப்பாற்ற முடியாததற்காகவும் தேசத்தை அவமானப்படுத்தும் அரசாகவும் இருந்துவருகிறது. வருகிறதேர்தலில் காங்கிரசை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஓட்டுவங்கி 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் நாட்டில் பா. ஜ.க அமைக்கும் கூட்டணியை மக்கள் ஆதரிப்பார்கள். மற்றகட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதை போல பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டால் பா.ஜ.க.,வும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என தமிழ் நாட்டில் முதன் முதலில் வலியுறுத்தியது பா.ஜ.க.,தான். இந்தியா சார்பில் யாரும் பங்கேற்ககூடாது. என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவோம் என்றும் இது அரசியலுக்கு அப்பாற்பட்டு கலாச்சாரம் தொடர்பான விவகாரமாக பார்க்கிறோம் என்றும் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் இன்று கூறியுள்ளார். முன்னதாக உ .பி.,யில் இன்று நடக்கவிருந்த யாத்திரை போலீசாரால் நடத்தவிடாமல் தடுக்கப்பட்டு விட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத்சிங் அயோத்தியில் ரத யாத்திரைக்கு மாநில அரசு விதித்த தடை சரியல்ல இது தவறானது. ராமர் கோயில் விவகாரம் அரசியல் கலந்தது அல்ல. இது கலாச்சார பிரச்சனை . அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்தே தீரும். அங்கு பிரமாண்ட கோயில் கட்டுவோம். உ பி., மாநில அரசும், காங்கிரஸ் அரசும் இதில் அரசியல் விளையாட்டு நடத்தி விட்டது. மோடியை பொறுத்தவரை அவர் சந்தேகத்திற்கிடமின்றி நாடு முழுவதும் ஒரு பிரபலமான பெரும் தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, August 24, 2013



ஆதிமதுரை கலாச்சார மையம் – சக்குடி
மதுரை மாவட்டம், மதுரை – 625020
1600 ஆண்டுகளுக்கு மேல் ஆன ஆதிசொக்கநாதர் மீனாட்சி அம்மன் கோவில் விரைவில் 09 – 09 – 2013 அன்று புனரமைப்பு காண உள்ளது அதில் ஆர்வம் மிக்க அனைத்து மக்களும் பங்குகொள்ளலாம்.

மேலும் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் எவரொருவர் இக்கோவிலை பாதுகாத்தலிலும், திருப்பணி செய்தும் உதவிகள் செய்திட்டால் அவரின் திருபாதங்களை என்சிரம்மேல் வைத்து பேற்றுவேன் என்று மன்னர் வரகுணபாண்டியன் கூறியதாக உள்ளது..

இக்கோவிலின் தகவல் அறிய இந்த லிங்க் சென்று பார்க்கவும் http://sakkudi.blogspot.in/2012/02/sakkudi-siva-temple.html?showComment=1375876870638
உதவிகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி என் : 99520 88420 , 94421 06170 ,9655925277

Indian overseas bank current account (NO : 065102000003333), IFSC IOBA 0000651, SWIFT IOBAI NBB651)
விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் வரும் 09 – 09 – 2013 அன்று பூமி பூஜை நடக்க உள்ளது ,                        
                                                                                        அன்புடன் ,சக்குடி ஸ்ரீனிவாசன்
                                                                                           
சீனாவைத் தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்...
வருஷம் முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்... அப்பப்போ சீனா ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்துகிறது...இப்போது மியான்மர் ராணுவம் எல்லை தாண்டி கூடாரம் அமைக்கிறது...அடுத்த மாதம் பங்களாதேஷ் ராணுவம் இந்திய எல்லையை தாண்டும்...இலங்கை தன் பங்கிற்கு தீவிரவாதிகளை ஊடுருவ செய்கிறது...போதாக்குறைக்கு உள்நாட்டிலேயே பயங்கரவாதிகளை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிறது... நாட்டின் வளர்ச்சியை தடுக்க மத்திய அரசின் நிர்வாக திறமை....
இதை எல்லாம் பார்த்தபின் சுயமாக சிந்திப்பவன் காங்கிரசை ஆதரிப்பானா?

Thursday, August 22, 2013

யாரிடமும் போருக்கு போக மாட்டேன். யாராவது, என்னிடம் வம்புக்கு இழுத்து அடிச்சாலும், பேசாமலே இருப்பேன். பேச்சு வார்த்தை மூலம், பிரச்னையை இழுத்தடிப்பேன்' என்று சொல்லும் ஒரு நாட்டிற்கு, எதற்கு, 3 லட்சம் கோடியில், மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல்... அழகு பார்க்கவா?
இன்றைய சூழலில், நம்மை சுற்றி, பிணம் தின்னும் கழுகுகள் கூட்டம் உள்ளதால், அவர்களை ஒடுக்க, நமக்கு ஆயுத பலம் தேவை தான். ஆனால், வல்லரசு பலம் இருந்தும், சுண்டைக்காய் அளவில் இருக்கும் இலங்கையை, நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது, நமக்கு எதற்கு ஆயுதம்? தமிழக மீனவர்கள், 567 பேரை, குருவியை சுட்டுக் கொல்வதை போல், சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதே போல், அமெரிக்க மீனவர் ஒருவரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக, எந்த நாடாவது சுட்டு கொன்றிருந்தால், சுட்ட நாடு கருவாடு போல் ஆகியிருக்குமே... அவ்வளவு பயம், அமெரிக்கா மேல். அவர்களிடம் ஆயுதம் இருப்பதற்கு, அர்த்தம் உண்டு. கிள்ளினாலும், உடலை கூறு போட்டாலும், சொரணையின்றி, மானம் கெட்டு கிடக்கும் நமக்கு ஏன் ஆயுதம், விமானம் தாங்கி கப்பல்? ஓர் ஆண்டிற்கு முன், சீன நாட்டு மீனவர் ஒருவர், எல்லை தாண்டி, ஜப்பான் கடல் பகுதிக்கு சென்றதற்காக, அம்மீனவரை, ஜப்பான் அரசு கைது செய்தது. இதையறிந்த சீன அரசு, "எங்கள் நாட்டு மீனவரை விடுவிக்கா விட்டால், ஜப்பான் மிகப் பெரிய அழிவை சந்திக்கும்' என்று சொன்ன உடனே, மறுபேச்சு இல்லாமல், சீன மீனவரை விடுவித்தது, ஜப்பான். அமெரிக்காவிற்கு, நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சென்ற போதும்; முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசையும், அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றிய, மீராசங்கரை மிசிசிபி விமான நிலையத்தில், பெண் என்றும் பாராமல், சேலையை தடவி அவமானப்படுத்திய போதும்; ஐக்கிய நாடுகளின் சபையில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள, ஹர்தீப்சிங்கின் தலைப் பாகையை முற்றிலும் அவிழ்த்து காட்ட சொல்லி, வேண்டுமென்றே அவமான படுத்திய போதும், நாம் என்ன செய்தோம்? ஒப்புக்கு, ஒரு கண்டனத்தை அறிவித்தோம். ஈராக் அதிபர், சதாம் உசேனின் கதி, நமக்கும் வர வேண்டாம் என்று, நம் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பயந்து, அவமானத்தை விட, உயிர் பெரிது என்று மவுனம் காத்திருக்கலாம். தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் தந்து, நம் ராணுவ வீரர்களை, நம் எல்லைக்கே வந்து சுட்டு கொன்றதோடு அல்லாமல், கசாப்பு கடைக்காரன் போல் அவர்களின் தலையை அறுத்து எடுத்து, அத்தலையை சின்னாபின்னமாக்கி, கடந்த, ஒரு வாரத்திற்கு முன், மறுபடியும் ஐந்து இந்திய வீரர்களை சுட்டுக் கொன்ற கொலை பாதகர்களை, அடக்க வக்கில்லாத நமக்கு ஏன், விமானம் தாங்கி போர்க் கப்பலும், அணு சக்தி நீர்மூழ்கி கப்பலும்

Tuesday, August 20, 2013

பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சி பெற்ற 8 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தென்னிந்தியாவை தாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை மூலம் மகாராஷ்டிர போலீசுக்கு பெறப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாக்.,கில் பயிற்சி இந்த பயங்கரவாதிகளில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜாப்னா நகரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் முகாமிட்டுள்ள இவர்கள் தமிழகத்தின் மயிலாடுதுறை அல்லது மதுரை நகரங்களை குறித்திருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படலாம் எனவும், பாக்., நாட்டைச் சேர்ந்த சிலர் இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை மற்றும் திருவனந்தபுரத்திற்கு வந்து சென்றதாக இலங்கை உளவுத்துறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அயோத்யாவிற்கு நடத்த இருந்த யாத்திரைக்கு உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச அரசின் இந்த தடை உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங். தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா புகார் தெரிவித்த சில நாட்களிலேயே அவர் மீதான செக் மோசடி விவகாரமும் அம்பலத்திற்கு வந்துள்ளது. ராபர்ட் வ‌தேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய நிலத்திற்கு பணம் ஏதும் வழங்கவில்லை. டி.எல்.எஃப்., நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.7.5 கோடி தரப்படாததால் அந்நிறுவனம் நெருக்கடி அளித்துள்ளது. இதனையடுத்து டில்லியைச் சேர்ந்த கோவாப்பரேட்டிவ் வங்கி மூலம் செக் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரித்த போது அந்த வங்கியில், ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்கு எந்த ஒரு வங்கி கணக்கும் இல்லை என தெரியவந்தது. இந்த விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, எல்லையில் நடந்து வரும் தாக்குதல், ஆகிய காரணங்களால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது செல்வாக்கினை இழந்துவிட்டது. கூட்டணியில் உள்ள தலைவர்களும், பிரதமரும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கவலையில்லாமல் உள்ளனர் என்றார்.

Monday, August 19, 2013

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகளுக்காக சட்ட விரோதமாக அரபு நாடுகளில் இருந்து நிதி திரட்டி, அதற்காக ஃபெரா சட்டப்படி ஒரு வருடகாலம் சிறைத்தண்டனை பெற்று, தற்போது பரோலில் இருப்பவன் ஜவாஹிருல்லா…….
அந்த கிரிமினலை கூட்டணியில் சேர்த்து, எம் . எல் ஏ வாக்கி , முதல்வருக்கு ச‌மமாக உட்காரவைத்தால் வேறு என்ன நடக்கும்?
அவன் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பது நமக்கே தெரியும்போது ,
கூட்டணி வைத்த ஜெ க்கு அது தெரியாதா?
தெரிந்துதானே கூட்டணி வைத்தார்?
நரிக்கு நாட்டாமை கிடைத்தால் , அது கிடைக்கு எட்டு ஆடு கேட்கத்தானே செய்யும்?
கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல அப்போது நமக்கு கருணாநிதியின் தோல்வி மட்டுமே முக்கியமாகப்பட்டது…….. எண்ணைச்சட்டிக்கு தப்பி அடுப்புக்குள் குதிப்பதே ஹிந்துக்களின் தலையெழுத்தாகிவிட்டது….
விஸ்வரூபம் பட விவகாரத்திலும் ,
அமெரிக்க தூத‌ரக விவகாரத்திலும்
இஸ்லாமியர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது யார்?
ஆட்டை கடித்து , மாட்டை கடித்து , தற்போது ஆளையே கடிக்கிறார்கள்……
நாம் யாரிடம் சென்று அழுவது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…….
நம்மை யாரும் காப்பாற்றப்போவதில்லை……..
நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டியதுதான்……..
அது முடியாவிட்டால் , நிரந்தரமாக பல அஞ்சலி போஸ்டர்கள் அடித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான் …….
பெயரையும் ,புகைப்படத்தையும் மட்டும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம்……………@nithya sri
காங்கிரஸ் ஊழல்களை வரிசைப்படுத்திய சாமி
டெல்லி: மத்திய அரசின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி வரிசைப்படுத்தியுள்ளார்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி பிஜேபி யில் இணைந்த செய்தி நம் எல்லாரும் அறிந்ததே ,அவர் ஆங்கிலத்தில் உள்ள ஏ,பி,சி,டி என்று இசட் வரை உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
ஏ- ஆதர்ஷ் ஊழல்
பி - போபர்ஸ் ஊழல்
சி - சிடபுள்யூஜி ஊழல்
டி- தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஊழல்
இ- இஜிஎஸ்(எம்ப்ளாயி கியாரண்டி ஸ்கீம்) ஊழல்
எஃப்- ஃபோடர் ஊழல்(தீவன ஊழல்)
ஜி - காசியாபாத் பிராவிடன்ட் பன்ட் ஊழல்
ஹெச் - ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல்
ஐ - ஐபிஎல் ஊழல்
ஜே - ஜூனியர் பேசிக் ட்ரெய்ன்ட் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் ஊழல்(ஆசிரியர் நியமன ஊழல்)
கே- கேத்தன் பாரேக் பங்குச் சந்தை ஊழல்
எல்- எல்ஐசி ஹவுசிங் ஊழல்
எம் - மதுகோடா ஊழல்
என் - நிதி நிறுவனங்கள் ஊழல்
ஓ- ஓரியன்டல் வங்கி ஊழல்
பி - பஞ்சாப் மாநில கல்விக் கவுன்சில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஊழல்
க்யூ - க்வெஸ்ட் ஃபார் கோல்டு ஊழல்(தங்க ஊழல்)
ஆர்- ரேஷன் அட்டை ஊழல்
எஸ்- சத்யம் ஊழல்
டி - தொலைத்தொடர்பு 2ஜி ஊழல்
யு - யுடிஐ ஊழல்
வி - ஃபோக்ஸ்வேகன் ஈக்விட்டி ஊழல்
டபுள்யூ- மேற்கு வங்க தொலைத்தொடர்பு ஊழல்
எக்ஸ், ஒய், இசட்- போராடி இறக்க வேண்டியது தான்.

புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் கட்சி அலுவலர்கள் மற்றும் தேசிய தேர்தல் பிரசார குழு கூட்டத்தில் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, August 18, 2013

மத்திய அரசு, அதன் திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையை முறையாக பயன்படுத்தவில்லை எனவும், அத்தொகை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருப்பதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பார்லிமென்ட்டில் சிஏஜி இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து, அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது பார்லி.,யில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

அரசின் செலவுத் தொகை :

2011-12ம் நிதியாண்டில் மத்திய அரசு பல்வேறு துறைகளில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் தணிக்கை விபரங்களையும், அதில் காணப்படும் முரண்பாடுகளையும் சிஏஜி அறிக்கையாக பார்லி.,யில் தாக்கல் செய்தது. இதில் நிதி கணக்கு விவரப்படி, திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2,41,668 கோடி. இ-லேகா புள்ளி விபரத்தின்படி செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.2,93,481 கோடி ஆகும். மத்திய திட்ட கண்காணிப்பு அமைப்பின் திட்ட செலவு ரூ.3,27,011 கோடி. முரண்பாடான இந்த புள்ளி விபரங்கள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த அனைத்து புள்ளி விபரங்களும் நிதி‌த்துறை அமைச்சகத்தின் நிதி கட்டுப்பாட்டு பிரிவால் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசால் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட உண்மையான தொகை எவ்வளவு, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து உண்மை விபரம் தெரியவில்லை.

சிஏஜி தகவல் :

சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இந்த 3 புள்ளி விபர அறிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக உள்ளது; இவைகள் அனைத்தும் திட்ட செலவுகள் குறித்து அளிக்கும் தகவலில் குறைபாடுகளை கொண்டதாகவும் உள்ளன; 2011-2012ம் ஆண்டில் அரசு திட்ட செலவு 76 சதவீதம் ஆகும்; இதற்காக ரூ.4,12,394 கோடி செலவிடப்பட்டுள்ளது; ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4,41,547 கோடி ஆகும்; இதில் பெரும்பகுதியான தொகை எந்தவொரு மாநிலத்தின் மாவட்ட அமைப்பிற்கோ அல்லது யூனியன் பிரதேசங்களுக்கோ நேரடியாக ஒதுக்கப்பட்டதற்கான எந்தவொரு விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை; அளிக்கப்பட்ட நிதி, அதற்கான காரணம், அது செலவிடப்பட்ட துறை, திட்டம் ஆகியன போன்ற முக்கிய விபரங்கள் ஏதும் தெளிவுபடுத்தப்படவில்லை; இதனை திட்ட கண்காணிப்பு குழுவும் சரிபார்க்கவில்லை; நிதித்துறை அமைச்சகத்தின் செலவு புள்ளி விபரங்களும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவ்வாறு சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் செலவு கணக்குகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சகத்தின் கணக்கு கண்காணிப்பு அமைப்பாலேயே கண்காணிக்கப்படுகிறது. இந்த கணக்குகள் அனைத்தும் சிஏஜி.,யால் தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பிறகே பார்லி.,யில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் விபரம், அதற்கான ரசீதுகள் உள்ளிட்டவைகள் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Saturday, August 17, 2013

பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து பெண்ணின் கிளிட்டொரியஸ், உள் மற்றும் வெளி லாபியா மற்றும் பிறப்புறப்பின் உள் சுவர்களை சுரண்டியெடுத்துவிட்டு, பின்னர் அவளது கால்களை ஒட்டித் தைத்துவிடுவது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை.

இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமையான முறை பற்றி குரானில் சொல்லப்படாவிட்டாலும், தங்களின் பெண்கள் வீட்டுச் சுவருக்கு வெளியே சென்று தங்களின் குடும்பத்திற்கு அவமான ஏற்படுத்துவதை தவிர்க்கிறது என்ற காரணத்தினாலேயே பரவலாக நடைமுறையில் இருக்கிறது. ஒரு பழங்குடி முறையாக ஆரம்பித்த இந்தச் செயல் இன்று ஒரு மதச் சடங்காகவே மாறியிருக்கிறது.

முகம்மது நபியின் காலத்திலேயே இந்த முறை இருந்ததைச் சுட்டிக்காட்டும் இஸ்லாமிய கல்வியாளர்கள், முகம்மது நபி அதனைத் தடை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்
மன்மோகன் மண் அரசு மௌனம் களையவேண்டும்  இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் சிந்துரக்ஷக் கப்பல் தீ விபத்திற்குள்ளான சம்பவத்திற்கு கோளாறு காரணம் அல்ல எனவும், அவ்வாறு ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவ தாங்கள் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.  ஆகவே மன்மோகன் மண் அரசு மௌனம் களையவேண்டும்
எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - நிர்மலா சீதாராமன்
பாரதிய ஜனதா கட்சியில் சமீப காலமாய்
சக்கை போடு போடும் பெண் வேங்கைகளில்
ஒருவர் "நிர்மலா சீதாராமன்"
நம் தமிழ்நாட்டில் நாம் அன்றாடம் கடைத்தெருவில்
அல்லது கோவில்களில் பார்க்கும், ஒப்பனைகள்
அதிகம் செய்துக் கொள்ளாத ஒரு சராசரி இந்திய
குடும்ப பெண்ணின் தோற்றம். அசாத்திய அறிவு,
பேச்சுத் திறன். எதிர்த்து பேசுபவர்களின்
கருத்துக்களை, புண்ணகையோடு அமைதியாக
கேட்டு, உடைத்தெறியும் திறமை. இவரின்
ஆங்கில பேட்டிகள் ஆகட்டும், தமிழ் நேர்காணல்
ஆகட்டும். பேச்சும் மொழி சுத்தமும், கச்சிதமாய்
இருக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும்.
குறிப்பாக கருத்தாழமிக்கதாக இருக்கும். பாரதிய
ஜனதாவின் அலுவல் ரீதியான பேச்சாளராக இவர்,
மிக இக்கட்டான சூழ்நிலைகளை கூட, இயல்பாக
கையாளும் விதம், அசாத்தியமானது.
நிர்மலா சீதாராமன் திருச்சியில் பட்டப்
படிப்பை முடித்தவர், ஜவஹர்லால்
நேரு பல்கலை கழகத்தில் எம் பில் முடித்தார்.
குறிப்பாக, உலகப் புகழ் வாய்ந்த
பன்னாட்டு தனிக்கை நிறுவணமான "ப்ரைஸ்வாட்டர்
ஹவுஸில்" (pricewater house) ஆராய்ச்சி பிரிவில்
மேலதிகாரியாக பணிபுரிந்து, பின் சில காலம்
பி.பி.சி. யிலும் பணிபுரிந்தவர். தங்கள்
குழந்தை லண்டனில் பிறக்காமல் இந்தியாவில்
பிறக்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே தன்
பொருளாதார வல்லுனரான
கணவரோடு இந்தியாவுக்கு திரும்பியவர்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் முகமாய் இவர்
அணல் பறக்க பேசும் போதெல்லாம் நாம் பெருமிதம்
கொள்ளலாம். நாளை பா ஜ க ஆட்சி அமைத்தால்,
(இவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்)
இவருக்கு மிகப்பெரும் பதவிகள் கிடைக்க
வேண்டும் என்று விரும்புகிறேன். கிடைக்க
போகின்றன என்று உறுதியாக நம்புகிறேன்.
இரண்டு வருடம்
முன்பு இவரை ஹிந்து பத்திரிகையில்
பேட்டி எடுத்த போது, நீங்கள் பா ஜ கவில்
எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள், அதற்கு அவர்
"நான் தாமரையில் தண்ணீராக உள்ளேன்"
என்று தத்துவார்த்தமாக பதில்
சொன்னதை படித்து வியந்திருக்கிறேன்.
பா ஜ க வின் தொண்டர்கள் ஒவ்வொருவரும்
இவரை போல் தாமரை இலை தண்ணீராக எதையும்
எதிர்ப்பார்க்காமல் கடமையாற்றி வந்தால், கட்சி மிகச்
சிறப்பான வகையில் வளர்ச்சி பெறும் என்பதில்
சந்தேகம் இல்லை. —
சுதந்தினதன்று எழுதி வைத்த உரையை இந்த தேசத்து மக்களுக்கு படித்து காண்பித்தார் பிரதமர். அதை சூனியா எழுதி கொடுத்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கூற காங்கிரஸ் கட்சியில் உள்ள அல்ல கைகள் எதாவுது எழுதி கொடுத்திருக்கும்.
இதற்க்கு நேர்மாறாக திரு. மோடி அவர்கள் சுமார் ஒருமணி நேரம் இந்த தேசத்தை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன என்ன திட்டங்கள் தேவை என்பதை விவரித்துள்ளார், எழுதி வைத்து அடிக்க வில்லை தன மனம் திறந்து பேசியுள்ளார்.
மக்கள் நிலையை புரிந்தவர்களால் மட்டுமே நல்ல தரமான ஆட்சியை தர முடியும். எழுதி வைத்ததை படித்து காண்பிக்க நமக்கு போஸ்ட் மென் மட்டுமே போதுமானது.

Friday, August 16, 2013

"சமீபத்தில் செல்சியாவின் அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர்
இதில் 5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது
இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.”
வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இதுதான். ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம் கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று அகிம்சையால் மட்டும் சாத்தியமானது என்று கூறி நாட்டை விட்டு வெளியேறியது.
@@@ NETHA MTP

Thursday, August 15, 2013

காங்கிரஸ். எத்தனை முறை மூக்குடைபட்டாலும், தன் முயற்சியில், மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, விடா முயற்சியோடு, தொடர்ந்து, அதே காரியத்தைச் செய்து வருகிறது. நரேந்திர மோடி, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதை விரும்பாத சிலர், மோடிக்கு எதிராக, அறிக்கை விடுவதோடு, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை, மோடியோடு ஒப்பிட்டுப் பேசி, சவுகானுக்கு கொம்பு சீவத் துவங்கியுள்ளனர். ஆனால், சவுகானோ, "மோடியின் மகத்தான பணிகளை, நம் நாட்டின் இரும்பு மனிதர் என, அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் செயல்பாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்; படேலை போன்றவர் மோடி' என, பாராட்டி, "பேஸ்புக்'கில், குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாகவே குதிக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு, சவுகான், மோடியை, படேலுடன் ஒப்பிட்டதும், பொங்கி எழுந்து விட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ரஷீத் ஆல்வி, "சர்தார் படேல், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். நாட்டு மக்களின் நலனுக்காக சிறை சென்றவர். மோடியை, படேலுடன் ஒப்பிடுவது, படேலை களங்கப்படுத்தும் செயல்' என்று, எகிறி எகிறி குதித்திருக்கிறார். படேல், வெள்ளையர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற போராடினார் என்றால், மோடி கொள்ளையர்களிடமிருந்து, நாட்டை மீட்க, தற்போது, போராட்டத்தைத் துவங்கி இருக்கிறார். ரஷீத் ஆல்வி உட்பட, நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரிந்த உண்மை இது. சரி இருக்கட்டும். மோடியை, சர்தார் படேலுடன் ஒப்பிட்டதற்கு, இந்த குதி குதிக்கின்றனரே, நாட்டில், காந்தி என்று சொன்னாலே, அது, பொக்கை வாய் புன்னகையோடும், கையில் ஒரு தடியோடும், முழங்கால் வரை தெரியும் பஞ்சகச்சம் கட்டிய, தேசத் தந்தை காந்தியை மட்டுமே குறிக்கும். ஆனால், அந்த காந்தி என்ற பெயரை, காங்கிரசார் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றனர்! இந்திரா பிரியதர்ஷினி என்ற பெயர் கொண்ட நேருவின் மகள், பெரோஸ் காந்தியை மணம் முடித்துக் கொண்டதால், இந்திரா காந்தி ஆனார். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு, ராஜிவ், சஞ்சய் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், ராஜிவ் காந்தி, சஞ்சய் காந்தி என்றே அழைத்து புளகாங்கிதமடைந்தனர். ராஜிவை கரம் பிடித்த காரணத்தால், சோனியா, சோனியா காந்தி ஆனார். நியாயமாக சோனியா ராஜிவ் என்றல்லவா அழைக்க வேண்டும். அதோடு விட்டனரா? ராஜிவ் - சோனியா தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளையும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்றே அழைத்து, ஆனந்தக் கூத்தாடி கொண்டிருக்கின்றனர். யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால், ராபர்ட் வதேராவைக் கூட, வதேரா காந்தி என்றோ, ராபர்ட் காந்தி என்றோ அழைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. காந்தி பெயரை, இப்படி இந்திரா பிரியதர்ஷினியின் வழித்தோன்றல்கள், "காபிரைட்' எடுத்து, சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க, மோடியை, படேலுடன் ஒப்பிட்டால் மட்டும், காங்கிரஸ்காரர்களுக்குப் பொத்துக் கொண்டு வருகிறதோ...!


""நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'' என, பிரதமர் மன்மோகனுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படும், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, குஜராத்தில் புஜ் நகரில் நடந்த, சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். பிரதமரின் சுதந்திர தின உரைக்கு, பதிலளிக்கும் வகையில், மோடி பங்கேற்கும் விழா அமைக்கப்பட்டு இருந்தது.

"கண்டுக்கலையே':

விழாவில் உரையாற்றிய, நரேந்திர மோடி கூறியதாவது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன் தினம், தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய போது, எல்லையில், அத்துமீறி வரும் பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டித்து இருந்தார். ஆனால், பிரதமர், தன் சுதந்திர தின உரையில், பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டிக்கவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல் குறித்து, பிரதமர் பேசிய விதம் கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக, பிரதமர், கடுமையாக பேசியிருக்க வேண்டும். ஆனாலும், ஏன் பேச பயப்படுகிறார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் நம் வீரர்களை, உற்சாகப்படுத்தும் வகையிலாவது பேசியிருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம், நம் எல்லைக்குள் புகுந்து, நம் வீரர்களை சுட்டுக் கொன்று விட்டு போகிறது. மத்திய அரசு இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது; மத்திய அரசின் பொறுமை, நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பார்லிமென்ட் முடங்கிப் போய் உள்ளது. நான், பிரதமரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... "நீங்கள் ஒரு பெரிய நாட்டையே ஆளுகிறீர்கள்; நாங்கள் சிறிய மாநிலத்தை ஆட்சி செய்கிறோம். நாட்டின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இதுவரை சாதித்தது என்ன என்பது குறித்தும், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'

நாட்டை மீட்கணும்:

குஜராத்தின் வளர்ச்சி நம் நாட்டின் வளர்ச்சி; இதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். சுதந்திர தின உரையில், ஒரு குடும்பத்தைப் பற்றி
மட்டுமே, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நினைவுகூர தகுதியற்றவர்களா? இவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தானே? பிரதமரின் பேச்சில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. முதலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, நாட்டை மீட்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன், நடந்த நேருவின் உரை பற்றி, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த, 60 ஆண்டுகளில், காங்கிரஸ் என்ன செய்துள்ளது? நிலைமை மாறிய மாதிரி தெரியவில்லை? தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின்தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம். சீன விவகாரத்தில், பிரதமர் பின்வாங்குகிறார்; வெளியுறவு கொள்கைகளின் அம்சங்கள் சரியில்லை. பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மக்கள் முன் எடுத்து வைக்க, மன்மோகன் சிங் தவறிவிட்டார்.

ஜனாதிபதி தன் சுதந்திர தின உரையில், அதிகரித்து வரும் ஊழல் பற்றி கவலை தெரிவித்து இருந்தார்; ஆனால், பிரதமர் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா, மக்களின் உணவைப் பிடுங்கும் மசோதாவாக உள்ளது. இந்த மசோதா குறித்து, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. ஊழலுக்கு முடிவு கட்ட, வாக்காளர்கள் வரும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Tuesday, August 13, 2013

ஆபத்தான வகாபி பிரிவு
------------------
மொராதாபாத்: "இந்திய முஸ்லிம்கள் அனைவரும், சவுதியினர் நடைமுறையான வகாபி பிரிவை நிராகரிக்க வேண்டும். மதரசாக்களுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியுதவிகளை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் மத்திய அரசு, ஒரு வாரியத்தை அமைக்க வேண்டும்' என, அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரிய பொதுச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில், இஸ்லாத்தின் சூபி பிரிவைச் சேர்ந்த அகில இந்திய உலாமா மற்றும் மஷைக் வாரியத்தின் (ஏ.ஐ.யு.எம்.பி.,) முஸ்லிம் மகா பஞ்சாயத்து என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஏ.ஐ.யு.எம்.பி.,யின் பொதுச் செயலர் மவுலானா சையது முகமது அஷ்ரப் கிச்சவுச்வி கூறியதாவது:
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், வகாபி பிரிவு கருத்துக்களை நிராகரித்து ஒதுக்க வேண்டும். அதன் மூலம் தான், இஸ்லாம் தனது இயல்பான சகிப்புத் தன்மையை உள்ளடக்கிய சூபி பிரிவுக்கு திரும்ப இயலும்.
நாட்டில் உள்ள மதரசாக்கள், தர்காக்கள், வக்பு வாரிய சொத்துக்கள் ஆகியவை வகாபி மற்றும் தியோபந்த் பிரிவினர் கைகளில் தான் உள்ளன. எங்களுக்குச் சொந்தமான மசூதிகள், மதரசாக்களைக் கூட மத்திய அரசு அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறது. மதரசாக்களுக்கு வரும் நிதியுதவி தணிக்கை செய்யப்படும் வகையிலும், அவற்றுக்கு சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியுதவிகளைக் கண்காணிக்கும் வகையிலும் மத்திய மதரசா வாரியம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு பயங்கரவாதி உங்கள் ஆதரவை நாடுவார் என்றால், அல்லது உங்களை யாராவது ஒருவர் பயங்கரவாதியாக்க முயல்கிறார் என்றால், உடனடியாக அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பிடித்துக் கொடுங்கள்.
இப்போது நமது உரிமைகளைக் கோர வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வகாபி பிரிவை ஆதரிக்க மாட்டோம் என நாம் உறுதி பூண வேண்டும். நம் தாய்நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என உறுதி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மவுலானா கிச்சவுச்வி தெரிவித்தார்.
மகா பஞ்சாயத்தில் பேசிய வாரிய உறுப்பினர்கள், வகாபி பிரிவு கருத்துக்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். அதோடு, அந்தப் பிரிவைச் சேர்ந்த சிலரால் ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் களங்கம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மவுலானா கிச்சவுச்வி,"இன்று நாட்டின் மதரசாக்கள், சவுதி பணத்தில் இயங்கக் கூடிய வகாபி அமைப்புகளின் பிடியில் சிக்கியுள்ளன. அவர்கள் அதிக கட்டுப்பாடு கொண்ட வகாபி பிரிவு நெறிகளை மட்டுமே போதிக்கின்றனர்' என்றார்.
சோனியா மருமகன் வதேரா மீதான நிலமோசடி குறித்து பார்லி.யில் காரசார விவாதம் நடந்தது. இதில் வதேரா நிலமோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும்அதுவரை கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ஜ. பார்லி.எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 5-ம் தேதி துவங்கியது. சுமூகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் கோரிக்கை விடுத்தார். ஆனாலும் இதுவரை எந்த அலுவல்களும் சுமூகமாக நடக்கவில்லை. எல்லையில் 5 இந்திய வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, காஷ்மீரின் கீ்ஷ்த்வார் கலவரம், தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் அமளி ஏற்பட்டு முடங்கி உள்ளது.
வதேரா நிலமோசடி
இந்நிலையில் அரியானாவில் குர்கான் நகரில், சோனியா மருமகன் ராபர்ட் வதேரா, டி.எல்.எப், நிறுவனத்துடன் மேற்கொண்ட டீலிங் மூலம் 3.5 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, நிலமோசடி செய்ததாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கெம்கா , அறிக்கையாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். பார்லி.யிலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியுள்ளதால் காங். பீதியில் உள்ளது. இதனை பா.ஜ.எம்.பி.க்கள் கையில் எடுத்தனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார். மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்திக் கொண்டு ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்காக மானிய விலையிலான உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வர அவசரம் காட்டுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த மாதம் இத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால் பார்லி.,யில் 6 வாரங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும். பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முலாயம் சிங் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு அளித்ததால் பிற கட்சிகளில் ஒப்புதலை பெறாமல் இம்மசோதாவை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மசோதா மீது பார்லி‌.,யில் விவாதம் நடத்தி விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக பார்லி.,யில் தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சில உறுப்பினர்களும், சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த சில உறுப்பினர்களும் குரல் எழுப்பி அவையை முடக்கி வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் முடிவில் அரசு உறுதியாக இருந்தால் அனைத்து மாநில முதல்வர்களையும் அழைத்து மசோதா குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு சட்டத்தால் அரசுக்கு ரூ.1.25 லட்சம் கோடி செலவு ஏற்படும். நாடு முழுவதும் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு ரூ.2க்கு கோதுமையும், ரூ.3 க்கு அரிசியும் மானிய விலையில் வழங்கடுவதே உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கமாகும்.
நன்கொடையால் ஏற்பட்ட டென்ஷன்...!
ஊழலுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "ஜனதந்திரா' என்ற பெயரில், யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் போது, திடீர் திடீரென, டென்ஷனாகி, அன்னா ஹசாரே கோபப்படுவது, அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உ.பி., மாநிலம் வாரணாசிக்கு, அவரின் யாத்திரை சென்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அவர் பேசியபோது, கூட்டத்திலிருந்தவர்களிடம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒரு நோட்டீசை வினியோகித்தனர். அதில், அன்னா ஹசாரேயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அத்துடன், "ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு, உங்களால் முடிந்த அளவு நன்கொடை செலுத்துங்கள்' என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை வினியோகித்து, வேகம் வேகமாக, பணம் வசூலித்து கொண்டிருந்தனர். அன்னா ஹசாரே, இதைப் பார்த்து விட்டார். கடும் ஆத்திரமடைந்த அவர், "என்னை கேட்காமல், பணம் வசூலிக்க ஐடியா கொடுத்தது யார்? இங்கே இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது. வசூலித்த பணத்தை எல்லாம், உடனடியாக, திரும்ப கொடுங்கள். இல்லையேல், போலீசில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுப்பேன்' என, ஓபன் மைக்கிலேயே, எகிறினார். ஹசாரேயின் கோபத்தை பார்த்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வெல வெலத்து போயினர். "பெருசு தொல்லை தாங்க முடியவில்லையே. நன்கொடை வசூலிக்காமல், எப்படி கூட்டம் நடத்த முடியும். சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு, எங்களுக்கென்ன தலையெழுத்தா' என, புலம்பியபடியே, கலைந்து சென்றனர்

Monday, August 12, 2013

நம் பாரத தேசத்தை காக்க வந்த சர்தார் வல்லபாய் பட்டேல் நரேந்திர மோதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர் புகழாரம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போனாலும் ஆச்சிரியம் இல்லை.
http://www.ndtv.com/article/india/now-shivraj-singh-chouhan-says-narendra-modi-can-only-be-compared-to-sardar-patel-404119?pfrom=home-lateststories

Thankful to Hyderabad for the warm welcome. Will now address Nava Bharat Yuva Bheri (Youth Convention). Join LIVE http://nm4.in/16RZnOk
Heartfelt thanks to the incredible & huge audience at LB Stadium in Hyderabad. Their participation displays the mood of the country! Congratulations to AP BJP leaders who organized it & youth who registered to have got involved in Uttarakhand relief work through this rally.

Our country is going through a troubled situation. China intrudes our borders, Pakistan kills our soldiers time & again but Centre doesn’t act! The root of all the problems is Congress lacks seriousness o...See More
Had a memorable day at Hyderabad. Sharing some glimpses of Nava Bharat Yuva Bheri http://nm4.in/14zWbo9
பா.ஜ.க-வில் இணைகிறார் எடியூரப்பா?
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டவிரோத சுரங்க முறைகேடு புகாரால் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா பாரதிய ஜனதாவிலிருந்து பிரிந்து கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அவரது விலகலுக்கு பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற, எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது அவசியம் என அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடியூரப்பா பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நரேந்திர மோடியிடம் எடியூரப்பா தொலைபேசி மூலம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ள து
நரேந்திர மோடியின் பேச்சை நேரடியாக கேட்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் விரும்பினார், அவர் தன் மகனிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். லட்ச கணக்கான கூட்டத்தில் எப்படி தனது தாயாரை அழைத்து செல்வது என்று தயங்கிய அவரது மகன் , நரேந்திர மோடிக்கே நேரடியாக ட்வீட் செய்தார் , அதனை தொடர்ந்து அந்த பெண்மணி அழைத்து வரும் பொறுப்பை ஆந்திர மாநில பாஜக.,விடம் நரேந்திர மோடி வழங்கினார் , மேலும் நரேந்திர மோடியின் மேடை பேச்சை நேரடியாக கேட்க்க வேண்டும் என்று விரும்பியவருக்கு, மேடை ஏறி அவரை தொட்டுப்பார்த்து ஆசி வழங்கும் வாய்ப்பே கிடைத்துவிட்டது

Saturday, August 10, 2013

முத்துப்பேட்டை - அல்லாவின் ரம்ஜான் பரிசு - பாஜகவினர் நடத்திய இலவச ரத்ததான முகாமில் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய முஸ்லீம் கும்பல், போலீஸ் தடியடி!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவான் ஓடையில் பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம் வசித்து வருகிறார். நேற்று அவருடைய பிறந்தநாளை முத்துப்பேட்டை குமரன் கடைத்தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாட பா.ஜனதா கட்சியினர் முடிவு செய்தனர்.
இதையொட்டி நேற்று ஜாம்புவான் ஓடையில் இருந்து மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தை அழைத்து கொண்டு பா.ஜனதா கட்சியினர் ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்குச் சென்றனர்.
கல்வீச்சு – போலீஸ் தடியடி
ஊர்வலத்தின்போது முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் பட்டாசு வெடித்தனர். பா.ஜனதா கட்சியினர் விழா மண்டபத்திற்குச் சென்ற சிறிது நேரத்தில் 50 பேர் கொண்ட கும்பல் பா.ஜனதா கட்சியினர் விழா நடத்தி கொண்டிருந்த மண்டபத்தை நோக்கிச் சென்றது. அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலை மண்டபத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் 50–க்கும் மேற்பட்ட போலீசார் பழைய பஸ் நிலையம், குமரன் கடைத்தெரு, ஆசாத்நகர் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு முத்துப்பேட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் கடைகள் மீது கும்பல் ஒன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்து அப்பகுதி கடைகாரர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூப்பிரண்டு, வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடைகளை திறக்குமாறு கூறினார். அப்போது வர்த்தக சங்கத்தினர் முத்துப்பேட்டை பகுதிகளில் கடைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் முத்துப்பேட்டை பகுதி கடைகள் உடனடியாக திறக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை
முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகே கும்பல் நடத்திய கல்வீச்சு சம்பவத்தின்போது குணசேகரன், பாஸ்கரன், சாகுல்அமீது, சரவணன் ஆகிய 4 பேரின் கடைகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து சேதப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் 4 பேரும் முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பல் ஒன்று திடீரென கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday, August 9, 2013

வாழ்க பண நாயகம்!"100 கோடி ரூபாய் இருந்தால் போதும்; ராஜ்யசபா எம்.பி, ஆகிடலாம்; பேரம் பேசி, 80கோடி ரூபாய் கொடுத்து தான் நான், எம்.பி., ஆனேன்; 20 கோடி ரூபாய் மிச்சம் பிடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பீரேந்திர சிங்.
அதோடு, "இந்த உண்மையை, வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியதில், எனக்குப் பயமே இல்லை. கட்சியின் நடவடிக்கைக்கு, பயப்படப் போவதும் இல்லை. பெரும்பாலான எம்.பி.,க்களின் மனக்குமுறலைத் தான், நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என்று, மனம் திறந்து சொல்லியிருக்கிறார். இவர், துணிந்து, இப்படி வெளிப்படையாகப் பேசியதை, நாம் பாராட்டி யே ஆக வேண்டும். "ராஜ்யசபா எம்.பி., யாக, 100 கோடி; லோக்சபா எம்.பி.,யாக, 200 கோடி; பிரதமராக, 500 கோடி; துணை ஜனாதிபதியாக, 1,000 கோடி; ஜனாதிபதியாக, 2,000 கோடி' என, இப்படியொரு, "லிஸ்டை' பார்லிமென்டில் விளம்பரம் செய்து விட்டால் போதும்; அரசுக்கு கணிசமான வருமானம் வரும். அம்பானி சகோதரர் களுக்கு, இந்த தொகையெல்லாம் வெறும் ஜுஜுபி தான். கோடீஸ்வரர்களான டாடா, பிர்லா குடும்பத்தில், வேலைக்காரர்கள் கூட பணம் கொடுத்து எம்.பி., அமைச்சர் ஆகி விடலாம். சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஜனநாயக வியாபாரம், இன்று, கோடிக்கணக்கில் நடப்பதைப் பார்த்து, ஒவ்வொரு இந்தியனும், நிச்சயம் "பெருமைப்'பட வேண்டும். மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், அவர் எம்.பி., ஆக முடியாது. ராஜாஜி, படேல், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோர், அரசியலுக்கு வந்திருக்க முடியாது.
"பாருக்குள்ளே நல்ல நாடு; எங்கள் பாரத நாடு' என்று பாடிய பாரதியார், இந்த ஜனநாயக வியாபாரத்தைப் கண்டால், மனம் நொந்து, "நூடுல்ஸ்' ஆகியிருப்பார்.
தனலட்சுமியின் கருணை இல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது. "பணம் பார்லிமென்ட்டிலே; குணம் கூவம் நதிக்கரையிலே' என்று பாடி, மனம் நொந்திருப்பார் கவியரசு கண்ணதாசன். வாழ்க பண நாயகம்!
குஜராத் தொழில்துறை முதலீட்டிலும் முதலிடத்தை பிடித்து, முன்னேடியாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா முழுவதும் ரூ.219,628 கோடி அளவிற்கு தொழிற்துறை முதலீட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மே மாத இறுதி வரை 1149 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விபர அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுவரை நிறைவுபெற்றுள்ள மொத்த தொழில்துறை திட்டங்களில் 25 சதவீதம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது. அதே சமயம் 18க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வெறும் 1 சதவீதம் தொழில்துறை திட்டங்களை நிறைவு செய்துள்ளன. இத்தகைய மாநிலங்களில் மிகக் குறைந்த அள‌வே தொழில்துறை வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டின் வர்த்தக தலைநகரைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா,தொழில்துறை முதலீட்டு திட்டங்களை நிறைவேற்றிய 2வது மாநிலமாக திகழ்கிறது. நடப்பு ஆண்டில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து, பூஜ்ஜிய அளவிலான முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. மற்ற வட கிழக்கு மாநிலங்கள் சொற்ப அளவிலான முதலீடுகளையே கொண்டுள்ளன. மிசோரம் 0.01 சதவீதமும், மேகாலயா 0.04 சதவீதமும், மணிப்பூர் 0.01 சதவீதமும், சிக்கிம் 0.05 சதவீதமும், அருணாச்சல பிரதேசம் 0.16 சதவீதமும், அசாம் 0.52 சதவீதமும், திரிபுரா 0.02 சதவீதமும் முதலீடுகளை செய்துள்ளன. சட்டீஸ்கர் மாநிலம் 13.39 சதவீதம் தொழில்துறை முதலீடுகளை மேற்கொண்டு கிழக்கிந்திய மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, முதலீடுகள் செய்ய சிறந்த இடம் மேற்வங்கம் என சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்குவங்க வங்கத்தில் தொழில்துறை முதலீட்டின் எதிர்காலம் என்பது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருண்ட நிலையிலேயே உள்ளன. இம்மாநிலத்தில் 2005 ம் ஆண்ட 5 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின் மேற்குவங்கத்தில் தொழில்துறை முதலீடு படிப்படியாக சரிவையே சந்தித்து வந்துள்ளது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை மேற்குவங்கத்தில் 1.35 சதவீதம் மட்டுமே ‌தொழில்துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 2012ம் ஆண்டு 11.20 சதவீதமாக இருந்த முதலீட்டு அளவு நடப்பு ஆண்டின் மே மாதம் வரை 3.19 சதவீதம் என்ற அளவையே எட்டி உள்ளது. பீகாரை பொருத்த வரை மற்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தொழில்துறை வளர்ச்சி என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் 0.45 சதவீதம் என்ற அளவிலேயே தொழில்துறை முதலீடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் 1.87 சதவீதம் முதலீடுகளை பெற்றுள்ளது.

2012ம் ஆண்டில் இந்தியாவில் ரூ.567,868 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொழில்துறை திட்டங்களில் செய்யப்பட்டன. கடந்த ஆண்டும் குஜராத், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்ளே தொழில்துறை முதலீட்டில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன