Tuesday, August 13, 2013

நன்கொடையால் ஏற்பட்ட டென்ஷன்...!
ஊழலுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "ஜனதந்திரா' என்ற பெயரில், யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் போது, திடீர் திடீரென, டென்ஷனாகி, அன்னா ஹசாரே கோபப்படுவது, அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உ.பி., மாநிலம் வாரணாசிக்கு, அவரின் யாத்திரை சென்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அவர் பேசியபோது, கூட்டத்திலிருந்தவர்களிடம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒரு நோட்டீசை வினியோகித்தனர். அதில், அன்னா ஹசாரேயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அத்துடன், "ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு, உங்களால் முடிந்த அளவு நன்கொடை செலுத்துங்கள்' என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை வினியோகித்து, வேகம் வேகமாக, பணம் வசூலித்து கொண்டிருந்தனர். அன்னா ஹசாரே, இதைப் பார்த்து விட்டார். கடும் ஆத்திரமடைந்த அவர், "என்னை கேட்காமல், பணம் வசூலிக்க ஐடியா கொடுத்தது யார்? இங்கே இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது. வசூலித்த பணத்தை எல்லாம், உடனடியாக, திரும்ப கொடுங்கள். இல்லையேல், போலீசில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுப்பேன்' என, ஓபன் மைக்கிலேயே, எகிறினார். ஹசாரேயின் கோபத்தை பார்த்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வெல வெலத்து போயினர். "பெருசு தொல்லை தாங்க முடியவில்லையே. நன்கொடை வசூலிக்காமல், எப்படி கூட்டம் நடத்த முடியும். சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு, எங்களுக்கென்ன தலையெழுத்தா' என, புலம்பியபடியே, கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment