Friday, October 25, 2013


போலி கோஷங்களும் பொய்மை வேஷங்களும்...

First Published : 25 October 2013
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர்.
ஒரு பக்கம் "மதச்சார்பின்மை' என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கையில் பிடித்துக் கொண்டது. மறுபக்கம் வகுப்பு வெறியை வளர்த்தெடுக்கும் சக்திகளை முறியடிக்க நம் காம்ரேடுகள் சுத்தியலும் அரிவாளும் சுமந்தபடி மூன்றாவது அணியமைக்கும் பணியில் முனைப்புடன் இறங்கிவிட்டனர்.
இந்த வகுப்புவாத எதிர்ப்பாளர்கள் உண்மையில் சிறுபான்மையினர் நலனில் நாட்டமுள்ளவர்களா? அல்லது அவர்களது வாக்கு வங்கியை தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த வெறும் "வாய் வேதாந்தம்' பேசுபவர்களா?
மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துவிட்டது. ராகுலை பகிரங்கமாக அறிவிக்க ஆசையிருந்தாலும் அறிவித்தால் வெற்றி மங்கை மாலை சூட்ட வருவாளா என்ற அச்சம் காங்கிரûஸ அலைக்கழிக்கிறது. ஒருவர் பெயரை முன்மொழிந்தால் மற்றவர்கள் ஓடிவிடுவார்கள் என்ற கவலை காம்ரேடுகளை ஆட்டிப் படைக்கிறது. பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது இந்திய ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்று இருதரப்பும் அறிவித்துவிட்டன. ஜனநாயக நடைமுறையை பழுதுபடாமல் பராமரிக்கும் காங்கிரûஸயும் காம்ரேடுகளையும் நினைக்கும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறது.
ஜெயலலிதா, முலாயம்சிங், நிதிஷ்
குமார், நவீன் பட்நாயக், தேவகவுடா, ஜகன்மோகன் ரெட்டி போன்ற மாநிலத் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணிதான் நாடு காக்கும், மதச்சார்பற்ற, சிறுபான்மையினர் நலம் காக்கும் நல்லரசை உருவாக்கக் கூடியது என்று மார்க்சியர்கள் முடிவெடித்துவிட்டனர்.
மூன்றாவது அணியில் இடம்பெறவேண்டும் என்று காம்ரேடுகள் அடையாளம் காட்டும் மாநிலத் தலைவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடித்து வளர்வதற்கு முதலில் வேண்டிய நீர் ஊற்றியவர் ஜெயலலிதா. பின்பு அதற்கு உரமிட்டு மரமாக்கி மகிழ்ந்தவர் கருணாநிதி.
1998-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு ராகம் வாசித்தவர் ஜெயலலிதா. அப்போது, "அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதவாத நச்சரவத்தைக் கொண்டு வந்து சேர்ந்தவர் ஜெயலலிதா' என்றும், "பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ்' என்றும், "பா.ஜ.க.வில் உள்ளவர்கள் பண்டாரம், பரதேசிகள்' என்றும் கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் கருணாநிதி. ஆனால் அடுத்த ஆண்டிலேயே தேர்தல் திருமணத்தில் பா.ஜ.க.வின் மாப்பிள்ளைத் தோழனாக அவர் அவதாரம் எடுத்தார்.
மோடியின் நிர்வாகத்தில் 2002-இல் முஸ்லிம் சமுதாயம் பேரழிவைச் சந்தித்ததாகக் கூறப்படும்போது, மத்திய அரசில் வாஜ்பாய் பக்கத்தில் ஆதரவுக் கரம் நீட்டியபடி அமர்ந்திருந்தவர்தான் கருணாநிதி. குஜராத் படுகொலை பற்றிய கேள்விக்கு, "அது ஒரு மாநிலத்தின் பிரச்னை' என்று கருத்து வழங்கி நழுவிக் கொண்டவர்கள்தான்
திமுகவினர். குஜராத் படுகொலைக்குப் பின்பும் மோடியிடம் நல்லன்புடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதா, அவர் மீண்டும் முதல்வரானதும் தனிவிமானத்தில் சென்று நேரில் நல்வாழ்த்து வழங்கி மகிழ்ந்ததை புதிய அம்மா பக்தர்கள் மறைக்கப் பார்க்கலாம். ஆனால் மார்க்சியர்கள் மறக்கக் கூடுமா?
மாயாவதியும், முலாயம்சிங்கும் பிறவி பா.ஜ.க. எதிர்ப்பாளர்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவருடைய ஆசியுடன்தான் அந்த கயமைத்தனம் அன்று அரங்கேறியது. "பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு' என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியபோது, பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை விரிவாக்க அவரை அரவணைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் முலாயம்சிங். இதைவிட மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் வேறுண்டா?
பா.ஜ.க.வோடு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர் மாயாவதி. பா.ஜ.க. துணையோடு ஒடிஸா முதல்வராக வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிகாரில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிகளில் பா.ஜ.க. ஆதரவோடு வெற்றிக் கனியைச் சுவைத்தவர் நிதிஷ்குமார்.
அவருக்கு மோடிதான் பிரச்சினை, பா.ஜ.க. அல்ல. "சாறுவேண்டும்' இறைச்சி வேண்டாம் என்பவர் வள்ளலார் வாரிசு என்றால், நிதிஷ்குமாரும் வகுப்புவாத எதிர்ப்பாளர்கள்தான்.
தேவகவுடா சந்தர்ப்பவாத அரசியலில் கருணாநிதியையும் மிஞ்சியவர். மதசார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.க. உதவியோடு, தன் மகன் குமாரசாமியை முதல்வராக்கிய கொள்கை வேந்தர் அவர். இவர்கள்தான் மார்க்சியர்கள் திரட்டும் பரிவாரத்துக்கு வீரத்தளபதிகளாக விளங்கப் போகின்றவர்கள்.
போகட்டும், இந்த மூன்றாவது அணியில் இடம் பெறுபவர்கள் ஊழல் காங்கிரûஸ வீழ்த்துவதற்கான தார்மிக தகுதியுள்ள நெறிசார்ந்த நேர்மையாளர்களா?
மாயாவதி ஒரு தபால்துறை ஊழியருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். இன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தும் அரசியல் தலைவராக வளர்ந்து நிற்பவர். அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு உருவாக்கிய அணுக்கொள்கையை எதிர்த்து ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிய பிரகாஷ் காரத் இந்த மாயாவதியைதான் இந்தியப் பிரதமராக்க முயன்றார். மார்க்சும் ஏங்கல்சும் ஊழல்வாதிகளுக்குப் பதவி நாற்காலியைப் பரிசாகத் தரவேண்டுமென்று பரிந்துரைத்தார்களா? நமக்குப் புரியவில்லை.
யாதவர்களின் சாதிவாக்கையும், இஸ்லாமியரின் மதவாக்கையும் பெற்றப் பெரிய மனிதராக அரசியலரங்கில் காட்சி தரும் முலாயம்சிங் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, லோகியா, சரண்சிங் நிழலில் வளர்ந்து இன்று குபேர வசதிகளுடன் வாழ்ந்து வருபவர். பெரியாரின் பெயர் சொல்லும் கருணாநிதியும், லோகியாவின் பெருமை பேசும் முலாயம்சிங்கும் எல்லா வகையிலும் ஒரு பறவையின் இருசிறகுகள் என்பதுதான் உண்மை. இந்த முலாமைத்தான் மூன்றாவது அணியமைக்க நம் காம்ரேடுகள் முழுமையாக நம்பியுள்ளனர்.
ஊழலில் ஊறித் திளைக்கும் தேவகவுடா, ஊழலின் மறுவடிவமான மாயாவதி, ஊழலுக்கு உற்சவம் நடத்திப் பலநூறு கோடியைத் திரட்டி வைத்த ராஜசேகர ரெட்டியின் திருமகன் ஜெகன்மோகன்ரெட்டி, பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்குக் காத்திருக்கும் ஜெயலலிதா, தமிழகத்தையே ஊழல் மாயமாக்கிய கருணாநிதி... இவர்கள்தான் மதவாத எதிர்ப்பாளர்களா? நேற்று பா.ஜ.க.வோடு இருந்த இவர்கள், தேர்தலுக்குப் பின்பு பா.ஜ.க.வின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டோம் என்று மார்க்சியர்கள் நீட்டிய பத்திரத்தில் கையொப்பமிட்டு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்களா? அது போகட்டும், மதச்சார்பற்ற மம்தாவை ஏன் சேர்க்காமல் விட்டுவிட்டீர்கள்?
தான் பிரதமராக வரும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஜெயலலிதா மோடியின் பக்கம் நின்றால், அப்போது மதச்சார்பின்மை கொடி பிடித்து மோடியின் ரத்தம் படிந்த முகத்தைக் காட்டி ஓலமிடும் 14 காரட் காம்ரேடுகள் என்ன செய்வார்கள்? இரண்டு எம்.பி. தொகுதிகளுக்கு போயஸ் தோட்டத்தில் தவமிருக்கும் காம்ரேடுகளுக்கு, சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காகவே அதிமுக இப்போது பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்கிறது என்பது தெரியாதா? அந்த அளவுக்கு இடதுசாரிகள் அரசியல் அப்பாவிகளா?
எதற்கும் இருக்கட்டும் என்று கருணாநிதி கடிதம் ஒன்று வரைந்து ஆதரவு கேட்கும் சாக்கில் பா.ஜ.க. திண்ணையில் இப்போதே ஒரு துண்டு போட்டு வைத்திருப்பதன் நோக்கம் என்ன? 1996 முதல் மிக நீண்டகாலம் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத ஒரே மாநிலக் கட்சி தி.மு.கழகம்தான் தெரியுமா? இந்திரர்கள் மாறுவார்கள். இந்திராணி மாறுவதில்லை என்ற புராண வாசகத்தை அரசியலில் உண்மையாக்கிய கருணாநிதி நாளை பா.ஜ.க.வோடு போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்? விவஸ்தை கெட்ட அரசியலில் விவேகத்திற்கு இடமுண்டா? சிறுபான்மையினர் விழித்துக் கொள்ளவேண்டும்.
கடந்த ஒன்பதாண்டுகளில் காங்கிரஸ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊழலில் உச்சம் தொட்டது. ஆட்சியைத் தக்கவைக்க எம்.பி.க்களை ஏலம் எடுத்தது. தன்னோடு இணங்கி வராத கட்சிகளை சி.பி.ஐ. மூலம் வளைத்துப் போட்டது. கிரிமினல் தலைவர்களின் பதவியைப் பாதுகாக்க அவசரசட்டம் தீட்ட முயன்றது.
நிலக்கரி ஊழலில் நீதியைத் தடுக்க ஆவணங்களை மறைத்து வைத்தது. கார்பரேட் நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையானது. பொம்மை பிரதமரை முன் நிறுத்தி ஒரு குடும்பம் அதிகாரத்தை முற்றுரிமையாக்க அனுமதித்தது.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிக்க உதவி செய்தது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்களரால் துன்புறுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறது.
இந்த மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணியில், சிறுபான்மையினரை எப்பொழுதும் வெறும் வாக்கு வங்கியாகவே பயன்படுத்திக் கொள்ளும் சுயநலக் கட்சிகள், போலி கோஷத்தோடும் பொய்மை வேஷத்தோடும் "மதச்சார்பின்மை நவீன நாடகம்' நடத்தும் நோக்கில் இணையவிருக்கின்றன. 1996 முதல்
1999 வரை இது போன்ற மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன. மூன்றாண்டுகளில் மூன்று பிரதமர்கள் பரிபாலனம் செய்தனர். இடதுசாரிகளால் இந்த மோசமான வரலாறு மீண்டும் திரும்பினால் இந்தியா தாங்காது.
கட்டுரையாளர்:
தலைவர், காந்தி மக்கள் இயக்கம்

Monday, October 21, 2013


மோடியின் கேள்விகள்

சென்னையில் "இந்தியாவும் உலகமும்' என்கிற தலைப்பில் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்த வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்ட இரண்டு கருத்துகள் சிந்தனைக்குரியவை. நரேந்திர மோடி கூறியிருக்கிறார் என்பதாலேயே அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது விதண்டாவாதமாக இருக்குமே தவிர, புத்திசாலித்தனமாகாது.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார் நரேந்திர மோடி? முதலாவதாக, அவர் குறிப்பிட்டிருப்பது "இந்தியா என்பது தில்லி மட்டுமே அல்ல' என்பது. அதாவது, முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்புதான் இந்தியாவே தவிர, மொகலாய சாம்ராஜ்ய, பிரிட்டிஷ் காலனிய நடைமுறையிலான, தில்லியின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் குறுநில நாடுகளாக செயல்படும் அமைப்பல்ல இந்தியா என்பதை வலியுறுத்துகிறார் மோடி.
இந்தக் கருத்தைத்தான் முன்பு சோஷலிஸ்டுகளும், கூட்டணி ஆட்சிகள் அமையத் தொடங்கியது முதல் இடதுசாரிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதால், மோடியின் கருத்தை மறுதலிப்பது சரியாகாது. மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் என்கிற, மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான் நரேந்திர மோடியின் கூற்றும்.
எத்தனையோ சர்வதேச நிகழ்வுகள் நடக்கின்றன. பிற நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள், இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
"இவையெல்லாம் ஏன் தில்லியிலேயே நடைபெற வேண்டும்? மதுரையிலோ, மைசூரிலோ, புவனேஸ்வரத்திலோ, வடேதராவிலோ, குவாஹாட்டியிலோ, கோலாப்பூரிலோ நடக்கக் கூடாதா? அப்படி சர்வதேச நிகழ்வுகள் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களிலும், பிற முக்கியமான நகரங்களிலும் நடைபெற்றால்தானே, அந்தந்தப் பகுதிகளின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்? எல்லா மாநிலங்களிலும் உள்ளவர்கள் இந்தியா என்பது எங்கேயோ தூரத்தில் இருக்கும் தில்லி மட்டுமல்ல, நமது மாநிலமும்தான் என்கிற உணர்வுடன் இருப்பார்கள்?' என்பதுதான் நரேந்திர மோடி எழுப்பி இருக்கும் நியாயமான கேள்வி.
வெளிநாடுகளில் நரேந்திர மோடி குறிப்பிடும் முறைதான் கையாளப்படுகிறது. ஜப்பானில் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த ஜி-20 மாநாடு டோக்கியோவில் நடைபெறவில்லை. ஹொக்கைடோ என்கிற நகரத்தில்தான் நடந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியனின் மாநாடு, தலைநகர் பாரீசில் நடத்தப்படவில்லை, மார்செய்ல்ஸ் நகரத்தில்தான் நடந்தது. அதுபோல, பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய யூனியனில் ஏன் மாநிலங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்கிற நரேந்திர மோடியின் கேள்வி சிந்தனைக்குரியது மட்டுமல்ல, செயல்படுத்தப்பட வேண்டியதுமாகும்.
நரேந்திர மோடி வெளிப்படுத்திய இரண்டாவது கருத்து, இந்திய நிர்வாகத்தில் நிலவும் மெத்தனப்போக்கும், பொறுப்பின்மையும் பற்றியது. கோப்புகள் காணாமல் போகின்றன. பிரதமர், "கோப்புகளைக் காவல் காப்பது எனது வேலையல்ல' என்று சர்வ சாதாரணமாக பதிலளிக்கிறார்.
மீனவர்கள் அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்படுகிறார்கள், மத்திய அரசு பிரச்னைக்குத் தீர்வு காணாமல் சமரசம் பேசுகிறோம் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், "அதற்கும் பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தொடர்பில்லை' என்று பாதுகாப்பு அமைச்சரே நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
ஆயுதங்களுடன் ஒரு கப்பல் கடலோரக் காவல் படையினரால் பிடிக்கப்படுகிறது, தேசியப் பாதுகாப்பு அலுவலக அதிகாரி, "12 கடல் மைல்களுக்கு அப்பால் கப்பல் நின்று கொண்டிருந்ததால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்று அறிக்கை விடுக்கிறார்.
இப்படி, யாருக்குமே தேசப்பற்றோ, நிர்வாகத்தின் மீது கட்டுப்பாடோ, பொறுப்போ இல்லாத தன்மை இந்தியாவைப் பற்றியிருக்கும் மிகப்பெரிய புற்றுநோய். பிரதமர் அலுவலகத்தில் தொடங்கி பஞ்சாயத்து அலுவலகம் வரை எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்காத நிலைமை. எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் பொதுநலன் கருதியும், தொலைநோக்குப் பார்வையுடனும் உடனடியகாத் தீர்வு காணத் தயாராக இல்லாத நிலையில் இயங்குகிறது நமது நிர்வாக இயந்திரம். இந்த மெத்தனப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி எந்த சார்பைச் சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன? அவரது கருத்தில் நியாயம் இருக்கிறதா, தேசத்தின் நலன் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இன்றைய இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தத் தெரியாமல், ஆனால் எழுப்ப நினைக்கும் இரண்டு கேள்விகளை நரேந்திர மோடி எழுப்பி இருக்கிறார். இவற்றுக்கான விடை காணப்பட்டாலே போதும். வலிமை மிக்க இந்தியா உருவாகிவிடும்!

Sunday, October 20, 2013

20-10-2013 அன்று மதுரையில் ஹிந்துமுன்னணி சார்பாக, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்பட்டம் நடை பெற்றது .
20-10-2013 அன்று மதுரையில் ஹிந்துமுன்னணி சார்பாக, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்பட்டம் நடை பெற்றது .

Thursday, October 17, 2013

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.

இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.

தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.

தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்

Tuesday, October 15, 2013

                               மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, முஸ்லிம் அமைப்பான, ஜமாத் - இ - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா, எம்.பி.யுமான, முகமது மதானி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை, கடுமையாக சாடினார். இந்த இரு கட்சிகளுமே, தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதக் கலவரங்களை தடுப்பதில், தங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக கண்டித்துள்ளார்.

இது குறித்து மதானி பேசியதாவது:மக்களிடையே மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களின் என்னென்ன நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளன, என்ன சாதனை படைத்துள்ளன போன்றவற்றை கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். ஒரு தனிப் பட்ட நபர் (மோடி) ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, பயத்தை ஏற்படுத்தி, மக்களிடையே பிரசாரம் செய்யக் கூடாது.மதச்சார் பற்றவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், ராஜஸ்தானில் மதக் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது. சமாஜ்வாதி, முசாபர்நகர் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக மதச்சார்பின்மை பேசும் காங்., மத நல்லிணக்கத்திற்காக, என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்ய வேண்டும்.மேற்குறிப்பிட்ட இரு மாநிலங்களிலும், முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவேஉள்ளது.இவ்வாறு முகமது மதானி கூறிஉள்ளார்.

மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி, ''காங்., எப்போதும் பிரித்தாளும் கொள்கையை கையாள்வதில் விருப்பம் உடையது. அவர்கள், இந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்,'' எனக் கூறியுள்ளார்

தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கும் R.S.S.இயக்கம் ------------------------- அனைத்து ஹிந்துக்களையும் பூசகர்கள் ஆகும் செயல்திட்ட்த்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் திராவிட அமைப்புகளோ அல்லது ஈ.வெ.ராமசாமியோ அல்ல. சுதந்திரவீர விநாயக தமோதர சாவர்க்கரே அதற்கான செயல்திட்டத்துக்கு 1929 இல் அடிக்கல் இட்டார். தனது கோவில்களை பாதுகாக்க முடியாத ஒரு சமுதாயத்துக்கு (உயர்சாதியினருக்கு)புதிய கோவில்களைக் கட்ட உரிமை இல்லை; ஆனால் அனைத்து இந்துக்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு கோவில் நுழைவு உரிமை உண்டு என்பதை உணர்த்தவே இந்த (புதிய)கோவில் கட்டப்படுகிறது என்றார் வீர சாவர்க்கர். இன்று திராவிட இயக்கத்தவர் தாம் செய்த்தாக உரிமை கோரும் பல முற்போக்கு செயல்களை வெறுப்பு இல்லாமல் செய்த முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகள் இந்துத்துவர்களே ஆவார்கள். பிறப்படிப்படையிலான புரோகிதர்கள் தேவைப்படாத இந்து திருமண சட்டத்தை ஹிந்துத்துவரான நாராயண் பாஸ்கர் காரேயே முதலில் கொண்டு வந்தார். ஹிந்துத்துவரான ஹர்பிலாஸ் சாரதாவே குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் காரே அவர்களே தலித்தான அக்னி போஜ் என்பவரை தமது அரசில் அமைச்சராக்கி அதனால் காங்கிரஸின் மேல்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அனைத்து ஹிந்துக்களும் இணைந்து உணவருந்தும் ஒரு விராட ஹிந்து உணவகத்தை வீர சாவர்க்கர் உருவாக்கி அதில் கட்டாயமாக ஒரு தலித் சமைக்கும் உணவை/தேநீரை தன்னை சந்திக்க வருவோர் அருந்த வேண்டும் என கூறினார். எனவே ஹிந்துத்துவத்துக்கு இவ்விஷயத்தில் திராவிட இயக்கதவர்களைக் காட்டிலும் நீண்ட சிறந்த பாரம்பரியம் உண்டு

Saturday, October 12, 2013

மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கேந்திர நிர்வாகிகள் கூட்டம் :

மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கேந்திர நிர்வாகிகள் கூட்டம் இன்று ( 12.10.13 ) திருமங்கலத்தில் உள்ள ரங்கவிலாஸ் மகாலில் நடைபெற்றது.. கூட்டதிற்க்கு மாவட்ட தலைவர் திரு.M .H .ஹரி கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்,மாநில பொது செயலாளர் திரு.S .R .சரவணா பெருமாள் அவர்கள் கேந்திர நிர்வாகிகளுக்கு சிறப்புரையாற்றினார், மாநில துணை தலைவர் திரு.சுரேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மேலும் மாநில செயலாளர் திரு.பழனிவேல்சாமி மற்றும் கோட்ட அமைப்பு செயலாளர் திரு.அழகர்சாமி, மாவட்ட பொதுசெயலாளர் திரு. மகா.சுசீந்திரன் மாவட்ட அமைப்புசெயலாளர் திரு.சிவலிங்கம் மாவட்டதுனைதலைவர் சக்குடி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டனர்.மாவட்ட பொருளாளர் திரு.ரவீந்திரன் , திருமங்கலம் ஒன்றிய தலைவர் திரு.சரவண குமார் , மாவட்ட IT பிரிவு தலைவர் திரு.வேல்முருகன் ஆகியோர் கூட்டதிற்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். . கூட்டதிற்க்கு மதுரை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட கேந்திர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Friday, October 11, 2013

பிராமணர்களை எதிர்கிறார்கள்.! ஆர் எஸ் எஸ் இயக்கத்தை எதிர்கிறார்கள்! விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தை எதிர்க்கிறார்கள்.! பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கிறார்கள்.! ஹிந்து முன்னணியை எதிர்கிறார்கள்! பற்றும் பல ஹிந்து அமைப்புக்களை எதிர்க்கிறார்கள். இவைகள் அனைத்தும் அழிய வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். இந்த இயக்கங்களை பற்றி, இவர்களின் செயல்களை பற்றி நாள்தோறும் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர்... ஏன்? என்ன காரணம்? ஆயிரம் காரணங்கள் இவர்கள் சொல்லலாம்... ஆனால், இந்த இயக்கங்கள் அழிய வேண்டும் ஒழிக்க படவேண்டும் என்று அலையாய் அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு இருப்பது ஒரே நோக்கம்தான்... ஒன்றே ஒன்றுதான்.! அது... நம் இந்தியாவில் ஹிந்து தர்மம் அழிய வேண்டும்.. முற்றிலும் தொடைதொழிக்க பட வேண்டும்.. இது மட்டுமே... இவர்களின் நோக்கம்.. யார் இவர்கள்.... ஒன்று... இஸ்லாமிய அடிப்படைவாதிகள்..இவர்களின் கனவு தருள் இஸ்லாம்.. பாரதத்தை இஸ்லாமிய மயமாக்க வேண்டும்..! இரண்டு...கிறிஸ்துவ மதமாற்று வியாபாரிகள். மிஷினரிகள். இவர்களுக்கு பாரதத்தை கிருஸ்துவ மயமாக்க வேண்டும். மூன்று.. பொதுவுடைமை கம்யுனிஸ்ட் வாதிகள்.. இவர்களுக்கு... இந்தியாவை கம்யுனிஸ்ட் நாடாக்க வேண்டும். இவர்கள் முதலாளி சீனாவின் வெகுநாள் பேராசையான , இந்தியாவை உடைத்து தனி தனி நாடாக்க வேண்டும். நான்கு... தமிழ் நாட்டு திராவிட இயக்கவாதிகள்.. இவர்கள் இன மொழி வெறியர்கள்..இவர்களுக்கு தமிழ் நாடு தனி நாடாக வேண்டும். அதன் பிறகு..தமிழ் ஈழத்தை அதனுடன் இணைக்க வேண்டும்.. அகண்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும்.. இப்படியாக, நோக்கங்கள் கொண்டவர்கள்தான்.பாரதத்தில் .ஹிந்து மதம் ஏன் அழிய வேண்டும் என்று விரும்புகிறார்கள்? காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... பல இனங்கள் பல மொழிகள் பல கலாச்சாரங்கள் இருப்பினும்... அனைத்து ஹிந்துக்களையும் இணைப்பது.. ஹிந்து மதம் என்ற ஒன்று மட்டுமே.. அந்த மதத்தை அழித்தால்.. இவர்கள் நோக்கங்களை நிறைவேற்றி விடலாம்.. மேலே நான் குறிபிட்ட இயக்கங்கள் அனைத்தும்.. நம் சனாதன தர்ம்மத்தின் காவலர்கள்.. இவர்களை மீறி, , நம் தர்மத்தை எவராலும் அழித்து விட முடியாது.. ஒழித்து விட முடியாது.! இந்த மதவெறியர்கள், மதவியாபாரிகள், இன மொழி வெறியர்கள் பிரிவினைவாதிகள்,அனைவருக்கும் சிம்ம சொப்பனம் இந்த இயக்கங்கள்தான்..இவர்களின் தீய நோக்கங்களுக்கு பெரும் தடை கல் இந்த இயக்கங்கள்தான்.. அதனால்தான் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்.. ! நான் சுருக்கமாகவே எழுதி உள்ளேன்.. அனைவரும் புரிந்துகொள்ளுங்கள்.. நம் முன்னோர்களின் ஆதி தர்மத்தை காக்க வேண்டியது நம் கடமை. நம் பாரத தேசத்தை இந்த அயோக்கியர்களிடம் இருந்தும் காக்க வேண்டியதும் நம் கடமை.. இவர்களின் தீய நோக்கத்தை அறியாமல், இவர்களின் பொய் பிரசாரங்களுக்கு பலியாகி கொண்டும் உள்ளனர் நம் ஹிந்துக்கள்.. அவர்களுக்கு இந்த அயோக்கியர்களின் தீய எண்ணங்களை எடுத்து கூறி, அவர்களை விழிப்படைய வைப்பதும் நம் கடமை!
- Via friend......

Wednesday, October 9, 2013

நாத்திகன் என் பெயரில் நாட்டையே சுடுகாடாக மற்றத்துடிக்கும்
நாசமாய் போனவர்களே


என் தாய் மொழியாம் தமிழ் மொழியை என் தமிழ் தாயை
கூட அடகு வைக்க
முறயச்சிக்கும் அசிங்க பிறவிகளே

உங்கள் வீட்டில்
உன்னைத்தவிர
எத்தனை பேர் நாத்திகராக வாழ்ந்துள்ளீர்கள்

கடவுளே இல்லை என்று கூறும் காட்டான் களே
உங்கள் பெயர்களிலே
கடவுள் பெயர் இருப்பதற்க்கு காரணம் கூற முடியுமா


பெரியார் என்ற பெரிய முட்டாள்
சொல்லிக்கொடுத்த பாடம் தான
கடவுள் இல்லை என்று

அட மிருக பிறவி களே
அவரே கோவிலில் சாமி கும்பிட்ட சரித்திரம் உண்டு உங்களுக்கு தெரியுமா

திராவிட கட்சிகளில் கோவில் வாசல் மிதிக்காதவர்கள் எத்தனை பேர்கள்
உங்களால் கூற இயலுமா
அட எறனம் கெட்ட நாயிங்களா

உங்கள் மனை கூட உங்கள் பேச்சைக் கேட்பதில்லை நீங்கள் நாட்டை திருத்துகீறீர்களா
மானங்கெட்ட மனித பிறவியே

உன் அப்பாவின் ஆசைக்கு இணங்கிய தாய் அதனால் நீ உருவாகினாயா
சரி அது எப்படி சாத்தியம்

நீ ஆணாக பிறப்பதும் பெண்ணாக பிறப்பதும் உன் தாயும் தந்தையுமா தீர்மானிக்குறார்கள்


கர்பபையில் நீ எப்படி வந்தாய்
உனக்கு அழகு கலர்
முகம்
முக்கு கண்
இவை அனைத்து எப்படி உருவானது அந்த நாலு சொட்டு திரவத்தால் எப்படி
உருவக்க முடியும்
அப்படி உருவாகும்
அப்படி உருவாகினாலும்

ஒரு தாயின் கர்ப பையில் பத்து மாதம் வசிக்கும் உடன் பிறந்த சகோதரர்கள்
ஒரே போல தோற்றம் தானே இருக்க வேண்டும்
ஏன் இல்லை அட திராவிடா

உங்களை திட்டும் போது எனக்கு வலிக்கீறது
உன் தாய் எத்தனை தவம் இருந்த உன்ப் பெற்று இருப்பாள்
அட ஈனப் பிறவகளே
நீ இந்த உலகத்தில் உயிரோடு பிறக்கும் தருணத்தில்
உன் தாய் அழைப்பது கடவுளைத்தாண்டா

நீ பிறந்த நேரத்தில்
அந்த தாயின் வேண்டுதல்
என்னவாக இருந்திருக்கும்
அந்த தாயின் மானத்தை அடகு வைத்தி நாத்திக நாடகம்
அடுகிறாயே

நாத்தகனை பெற்ற தாய் மார்களே
என்னை மன்னியுங்கள்
கடவுளே இல்லை என்று கூறும் மக்களை பெற்ற மகராசிகளே
நீங்கள் புண்ணியம் செய்ய தவறியவர்கள்
இந்தியன் முஜாஹிதீன் உருவான நிகழ்வுகள் - இந்திய பயங்கரவாத இயக்கம் - ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து இதை முழுவதும் படியுங்கள் நண்பரே !!

இந்தியாவில் உருவாகிய பயங்கரவாத அமைப்பு. ஷகீல் அகமது கூறியது போல் 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உருவான அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது வெடி குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்தவர்கள். இஸ்லாத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் மீது ஜிகாத் தொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே துவக்கப்பட்டது சிமி அமைப்பாகும். 1977-ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பினர், 1941-ம் ஆண்டு லாகூரில் இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் (Jamaat-e-Islami Hind )என்ற அமைப்புடன், 1981-ம் ஆண்டு வரை நல்ல நெருக்கத்துடன் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவிற்கு பாலஸ்தீன அதிபர் யாசா அராபத் விஜயம் செய்த போது, இந்த விஜயத்திற்கு சிமி இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர், சிமி இயக்த்தின் கருத்துக்கு மாறாக ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினர் கருத்து தெரிவித்தார்கள், இந்த கருத்து வேறுபாடு காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் அமைப்பினர், சிமிக்கு மாற்றாக Students Islamic Organization என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆகவே அப்போதே தீவிரவாத மாணவர் அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினருக்க ஏற்பட்டது.

2001-ல் சிமி இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்ட பின்னர், சிமி இயக்கத்தினர் மறைமுகமாக தங்களது சந்திப்புகளை தொடர்ந்தார்கள், இந்த சந்திப்புகளில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அதாவது ஒரு பிரிவினர் தீவிரவாத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முகமது இஸ்லாம் என்பவர் இவ்வாறு தீவிரவாத எண்ணங்களை கொண்டதால் ஒரு புதிய இயக்கம் உதயமானது, அது இந்தியன் முஜாஹிதீன் என்றும் கூறப்பட்டது. இந்தியாவிலேயே உள்ள தீவிரவாதிகளை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உருவானது என்றும் பல ஆய்வாளாகள் கூறுகிறர்கள். ரோகித் சிங் என்பவர் தனது ஆய்வு கட்டுரையில் The IM hsd mutated into a radical extremist organization, with pan-Indian spread. என்று குறிப்பிட்டுள்ளார் ( ஆதாரம் Understanding the Indian Mujahideen by Rohit Singh page no.2 ) இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் ஏற்படுத்தப்பட்டது என்பதை கூட மறந்து விட்டு ஷகீல் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.

im03சிமி இயக்கத்தின் மறு அவதாரம் என்பதால், ஏற்கனவே சிமி இயக்கத்திலிருந்த அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qureshi ) மற்றும் Riyaz Ismail Shahbandri என்ற இருவரும் இந்தியன் முஜர்ஹிதீன் என்ற அமைப்பை துவக்கியவர்கள். தெற்கு குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மற்றும் மகாராஷ்ட்ராவில் இயங்கி வந்த தியோபந்தி மதராஸாக்களில் ( Deobandi madrasas )படித்துக்கொண்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்களில் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வெடி குண்டுகள் கையாளுவது, பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது சம்பந்தமான பயிற்சிகளை பாகிஸ்தானில் பெறுவதற்காக சென்றவர்கள். 2006-ல் குஜராத்தில் உள்ள மதரஸாவில் 30 மாணவர்கள் மாயமானதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது, ஆனால் தீவிர விசாரணையில் மாயமான 30 மாணவர்களும், பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே பாகிஸ்தான் சென்றவர்கள் என்பது பின்னர் தெரியவந்த்து. 2009-ம் ஆண்டு வரை பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாக மாறியது. 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ந் தேதி சூரத்தில் உள்ள மதரஸாவில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கோத்ராவில் நடந்த சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காகவே, லஷ்கர்-இ-தொய்பாவில் மதரஸா மாணவர்களை சேர்க்கும் பொறுப்பை ஏற்று, அவ்வாறு சேருபவர்களை இந்தியாவிலிருந்து பங்களா தேஷ் வழியாக பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்படும் பணியினை செய்தவர்கள் இந்த கைது சம்பவத்திற்கு பின் இந்தியாவில் உள்ள தியோபந்த் இஸ்லாமியர்களின் முழு ஆதரவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு இருப்பது தெரியவந்தது. இறுதியாக சிமி இயக்கத்தை உருவாக்க எவ்வாறு ஜமாத்-இ-இஸ்லாமி முக்கியமான காரணியாக இருந்த்தோ அதே போல் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஏற்பட ஜமாத்-இ-இஸ்லாமி காரணமாக அமைந்த்து.

நோக்கம்

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு இருக்கின்ற அதே நோக்கம் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கும் இருந்தது. ஆனால் வார்த்தைகள் மட்டுமே மாறியிருந்தன. மேற்கத்திய பொருள் சார்ந்த பண்பாடு கொண்ட இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது மட்டுமே முதன்மையான நோக்கமாகும். இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால், இந்தியாவில் தியோபந்தி சித்தாந்த்தை செயல்படுத்துவது என்றும், இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தீவிரவாத தன்மையை மேற்கொள்வதும் முக்கியமானதாகும். ஆனால் 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே வாரனாசி, பைசாபாத் போன்ற நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு தாக்குதல்களை நடத்திய பின்னர், இந்தியன் முஜாஹிதீன் வெளியிட்ட தங்களது அறிக்கையில் குறிப்பிட்டது வேறுவிதமானது. அவர்களின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும் ” The pathetic conditions of Muslims in India that idol worshippers can kill our brothers, sisters and outrage the dignity of our sisters at any time and place ” என்றும் பின்னர் நாகரீகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் என்றும் தெரிவித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று அவாகள் தெரிவித்த கருத்துதான் ” Only Islam has the power to establish a civilize society and this could be only possible in Islamic rule which could be achieved by only one path, Jihad-Fee-Sabililah (Which means jihad in Islam) ”. ஆகவே எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாலும் இறுதியில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது தான் இறுதி தீர்வு என்ற முறையில் தங்களது செயல்பாடுகளை அமைத்திருந்தார்கள்.

தலைமை

im062001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின்னர், 2008-ம் ஆண்டு மார்சு மாதம் 27ந் தேதி சிமியின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி கைது செய்யப்பட்டார், அதே ஆண்டு ஜீலை மாதம் 28ந் தேதி டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்த சிமியின் தலைவர் டாக்டர் ஷாகித் பதார் ஜலால் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இருந்த்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு கூட்டு நிறுவனராக இருந்த Riyaz Ismail Shahbandri என்பவரும், அப்துஸ் சுபான் குரேஷி என்பவரும் முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் டெல்லியில் உள்ள காவல் துறையினர் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்கண்ட இருவரும் இருந்தார்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் நாட்டில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்ட நடத்தியவர்கள் என குறிப்பிட்டால், அது இருவரை மட்டுமே குறிக்கும், ஒருவர் ரியாஸ் பட்கல் ( Riyaz Bhatkal ) மற்றெருவர் அப்துல் சுபான் குரேஷி. இதில் ரியாஸ் பட்கல் என்பவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் வெடி குண்டு தயாரிக்கும் பணியினை கவனித்து கொண்டவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் சின்னத்தை உருவாக்கி கொடுத்தவன் பீர்பாய் (Peerbhoy ) என்பவன், இவன் சாப்ட்வேர் பொறியாளர், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் முன் அனைத்து மீடியக்களுக்கும் இ-மெயில் மூலம் தகவல்களை அனுப்பியவன்.

im05தென்னக பகுதிகளில் இந்தியன் முஜாஹிதீனுக்கு ஆட்கள் சேர்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கேரளத்தை சார்ந்த அப்துல் சத்தார், நசீர் ( Abdul Sattar alis Saibuddin, Nasir )என்பவர்கள், இவர்கள் இருவரும் கேரளத்தில் உள்ள அப்துல் மதானியுடன் ரகசிய உறவு கொண்டவர்கள். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட பைப் வெடி குண்டை தயாரித்தவன் அப்துல் சத்தார். இவர்கள் குஜராத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு, ரியாஸ் பட்கலுக்காக அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடி குண்டு தயாரித்து கொடுத்தவர்கள். பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதற்காக 40 க்கு மேற்பட்டவர்களை அனுப்பி வைத்தவன் பட்கல் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதுவும் எப்போது தெரியவந்த்து என்றால், வடக்கு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி கேரளத்தில் உள்ள அப்துல் சத்தாரின் மருமகன் என தெரியவந்த்து.

டெல்லியில் ஜாம்யா என்கவுன்டரில் கொல்லப்பட்ட அடிப் அமீன் ( ) என்பவனால் நியமிக்கப்பட்ட முகமது சாதிக் ஷேக் என்பவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் முக்கியமானவன், 2006-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளியாக பாகிஸ்தானியர்கள் உண்டு என்றாலும், பெரும்பாலனவர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள ஆஸம்காட் பகுதியில் செயல்பட்ட இந்தியன் முஜாஹிதீன் செல் என்றார்கள், இந்த செல்லில் இருந்த முக்கியமானவன் முகமது சாதிக் ஷேக் . இந்த அமைப்பில் பட்கல் சகோதர்கள் மற்றும் அப்துல் சுபான் குரேஷியை போலவே இன்னும் பலர் அமைப்பாளராக இருந்தார்கள். கூலி வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் குரேஷி , தொழிற்சாலையில் எலக்ட்ராணிக் பொறியளாராக 1995-ல் தனது படிப்பை முடித்துவிட்டு, மும்பையில் பல்வேறு கன்னி நிறுவனத்தில் பணியில் புரிந்தவன். 2001-ல் சிமி அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவன். 2008-ல் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு திட்டம் வகுத்து செயல்படுத்தியவன்.

ஆயுதங்கள் தொடர்பு மற்றும் பயிற்சி முகாம்கள்

2007-ல் இந்தியாவில் உள்ள காடுகளில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாம்களில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு ஐ.ஈ.டி வெடி(IED ) குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்துவது சம்பந்தமான வழி முறைகளையும், அப்பொழுது பயன்படுத்த வேண்டிய வேதிய பொருள்களான அமோனியம் நைட்ரேட் (Ammonium nitrate ) , ஹைட்ரஜன் பாராக்சைட் ( Hydrogen peroxide)போன்றவற்றை பயன்படுத்துவது சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளுரில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு வெடி குண்டுகள் தயாரிப்பதிலும், உதரி பாகங்களை இணைப்பதிலும் வல்லுநர்களாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மாறினார்கள். இதிலும் குறிப்பாக வெடி குண்டுகளில் பால் பேரிங் மற்றும் இரும்பு துகள்கள் சேர்ப்பதிலும் பயிற்சி பெறுவதற்காக, ஐ.எஸ்.ஐ உதவியுடன் பாகிஸ்தானில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி அளிப்பதற்காகவே லாகூர் பல்கலைகழகத்தில் கெமிஸ்ட்ரி பேராசிரியாக பணியாற்றிய அசீம் சீமா ( Azam Cheema ) என்பவன் நியமிக்கப்பட்டார். இவர் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்த பயிற்சி அளித்துள்ளார், குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜீ முகமது, ஹஜ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் அடங்கும். ஜமாத்-உத்-தாவாவின் கட்டளைப்படி தனது பேராசிரியர் பதவியை ராஜினமா செய்து விட்டு, பைசலாபாத் (Faisalabad ) நகரில் ஒரு புதிய ஆய்வு கூடத்தை நிர்மாணித்து, வெடி குண்டுகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் வெடி குண்டுகளின் மூலப் பொருட்களை கொண்டு இணைக்கும் தொழில் நுடபத்தையும் பயங்கரவாதிகளுக்கு கற்றுக் கொடுக்க தொடங்கினார். இவ்வாறு பயிற்சி பெற்ற இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

im077.3.2008ந் தேதி கைது செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி விசாரனையின் போது தெரிவித்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானதாகும். 2005-ம் ஆண்டு ஜீலை மாதம் 7ந்தேதி லண்டன் மாநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது வெடி குண்டுக்கு பயன்படுத்தபட்ட வேதியியல் பொருள் ப்ராக்சைட் (peroxide ) என்பதாகும். இம் மாதிரியான குண்டுகளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தங்களது வீட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்தான். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ரியாசூதின் நசார் என்பவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் 15 முதல் 20 பேர்கள் வீட்டிலேயே வெடி குண்டு தயாரிக்கிறார்கள் என்ற தகவலை உறுதி செய்தான். இவ்வாறு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் பயிற்சி பெற்றாலும், இன்னும் குறிப்பாக சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காகவே கேரளத்தில் சில பகுதிகள் உள்ளன, அவை Vagamon, Pavagarh, Vododara என்றும் உளவு துறையினர் தெரிவித்தார்கள்.

தலைமைக்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்பதில், இந்தியன் முஜாஹிதீன் சிரமப்படவில்லை, ஏன் என்றால் உஜ்ஜயின், ஆஸம்காட், ஷஹகரன்புர் மற்றும் பல இடங்களில் செயல்படும் தியோபந்தி மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த மதரஸாக்களுக்கு நிதி உதவி செய்வது சவுதி அரேபியா என்றும், இவர்களின் நிதி உதவியால் உலகம் முழுவதும், 1,500 மசூதிகளும், 10,000க்கு மேற்பட்ட மதரஸாக்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. நிதி உதவி அளிப்பது மட்டுமில்லாமல், இமாம்களுக்கு பயிற்சி கொடுப்பதும், செய்தி துறையில் ஆதிக்கம் செலுத்துவது, வாகாபி இலக்கியங்கள் உருவாக்குவது, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் வாகாபி இஸ்லாமிய பயிற்சியாளர்கள நியமிக்க வைப்பது போன்ற செயல்பாடுகளையும் செய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் பெட்ரேலிய பொருட்களை கொண்டும் தங்களது செயல்பாடுகளை ஊக்குவிப்பதும் சவுதியின் பணியாகும். 1970-ல் பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்ட போது, அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்த்து சவுதி அரேபியா . இவ்வாறு அதிக அளவில் ஆதிக்க சக்தியாக திகழும் தியோபந்தி மதரஸாக்கள் இந்தியாவிலும் உருவானது.

im08ஷா வாலியுல்லா (Shah Waliullah )என்பவரால் 1762-ல் இந்தியாவில் தியோபான்ட் பள்ளிகள்(Deoband Schools ) மற்றும் ஹகி-இ-ஹதீத்( Ahl-e-Hadith) பள்ளிகளும் துவங்கினார் உத்திர பிரதேசத்தில் உள்ள ஷாரன்புர் நகரில் முகமது அபித் உசைன்(Mohammad Abid Husayn ) என்பவரால் 1867-ல் தியாபந்த மதரஸா ஏற்படுத்தப்பட்டது. 1879-ல் தியாபந்த மதரஸாவுடன் தார்-உல்-உலும் என்ற அமைப்பும் இணைந்து கொண்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தியாபாந்தி வாஹாபியின் சித்தாந்தங்கள் கட்டாயமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டும் என இமாம்கள் உத்திரவிட்டார்கள். முதலில் மதத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மதத்திற்கு பின்னர் தான் நாட்டிற்கு கட்டுப்பட வேண்டும். இரண்டாவது உம்மாக்களுக்கு கீழ்படிய வேண்டும், மூன்றாவதாக இஸ்லாமியர்களின் நலனை காக்க ஜிகாத் தொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு கட்டுப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தியோபந்தி மதரஸாக்களுக்கும், Mawdudi பள்ளிக்கும் விசுவசமாகவே நடந்தார்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பணியே தீவிரவாத இஸ்லாத்தை உருவாக்குவது, இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பரவ வேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்த்து.

இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள்

11.7.2006ந் தேதி மும்பையில் ரயிலில் தொடர் குண்டு வெடிப்பு 216 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 700க்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள். 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே, வாரனாசி, பைசாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாகத்தின் வெளியே குண்டு வெடிப்பு, 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். 1.1.2008ந் தேதி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த ராம்புர் நகரில் வெடி குண்டு தாக்குதல் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்டார்கள், பாதுகாப்பு படையினர் ஆறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். 13.5.2008ந் தேதி ஜெய்புர் கடைவீதியில் வெடி குண்டு வெடித்த்தில் 60 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 200க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். 25.7.2008ந் தேதி பெங்களுரில் எட்டு இடங்களில் வெடித்த குண்டுகளின் காரணமாக 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தாலும், இருவர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். 26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 18 இடங்களில் வைத்த குண்டுகள் வெடித்ததில் 38 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 130க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதை போலவே சூரத்திலும், டெல்லியிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் என்பது முழு உண்மையாகும். இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில், தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் அமைந்துவிடும், ஆனால் இந்தியன் முஜாஹதீன் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஊடகங்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல்களை கொடுத்து விட்டு தாக்குதல்களை நடத்தினார்கள். எனவே தாக்குதல் நடப்பதற்கு முன்பும், நடந்த பின்னரும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் உள்ள முக்கியமானவர்கள்

இந்த அமைப்பில் உள்ள அனைவரும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள். இவர்கள் 2006லிருந்து இன்று வரை நாட்டில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள். அப்துல் சுபான் குரேஷி, இவன் சப்ட்வேர் என்ஜினியர், வெடி குண்டு தயாரிப்பில் திறமையானவன். ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி (Riyaz Ismail Shahbandri ) , முப்தி அபு பஸிர் Mufti Abu Bashir என்பவன் சிமிக்கும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் தொடர்பாளர், சப்தார் நகோரி கைது செய்யப்பட்டவன், க்யுமைதீன் கப்பாடியா Qayamuddin Kapadia வதோராவில் உள்ள வியாபாரி, சாஜித் மன்சூரி Sajid Mansuri , உஸ்மான் அகர்பட்டிவாலா Usman Agarbattiwala, ஆலம்ஜிப் அப்ரிதி Alamzeb Afridi, அப்துல் ரஸாக் மன்சூரி, முஜிப் ஷேக், சாகீத் ஷேக்,அமில் பர்வோஸ் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள்.

வெளி நாட்டு தொடர்பு மற்றும் நிதி உதவி

எவ்வாறு சிமி இயக்கத்திற்கு வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி அளித்தனரோ அதே அமைப்பினர் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் நிதி உதவி செய்தார்கள். ரியாத்தில் உள்ள World Assembly of Muslim Youth என்ற அமைப்பும், குவைத்தில் உள்ள International Islamic Federation of Students Organisation அமைப்பினரும் உதவி செய்த்துடன், சிக்காகோவில் உள்ள கன்சலடிவ் கமிட்டி ஆப் இந்தியன் முஸ்லிம் அமைப்பும் ( Consultative committee of Indian Muslims ) அதிக அளவில் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். சவுதி அரேபியாவில் உள்ள சிமி ஆதரவாளர்கள், இந்தியாவில் உள்ள குறிப்பிட தக்க இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளார்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கேரளத்தை மையமாக கொண்டு செயல்படும் நேஷனல் டெமாக்கரடிக் ஃப்ரண்ட் மற்றும் இஸ்லாமிக் யுத சென்டர் அமைப்பும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு தேவையான பயிற்சிகளும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் வாங்க தேவையான நிதி உதவிக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும் இவர்களின் முக்கிய பணியாகும்.

im09பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ தான் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த்தால், அவர்களுடனான நெருக்கம் அதிக அளவில் இருந்த்து. சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான சப்தார் நகோரி என்பவர் பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றே கூறி வந்தார். ஆனால் 1996-1997-ல் Kashmir Awareness Bureau என்ற அமைப்பு நடத்திய கூட்டங்களில் நகோரி கலந்து கொண்டார், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹூரியத் மாநாட்டு கட்சியின் மீர்வாஸ் உமர் பரூக்? ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் பொறுப்பாளர் யாசின் மாலிக், போன்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். புது டெல்லியில் பாகிஸ்தான் தூதர் ரியாஸ் கோக்கர் என்பவர் கொடுத்த இப்தார் விருந்தில் நகோரி கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியில் சபி நாசன் (Saif Nachan ) அப்துல் சுபான் குரேஷி ஆகியோர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிமி இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐயுடன் உறவு கொள்ள துவங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். ஐ.எஸ்.ஐயை போலவே பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புனருடனும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். நேபாள், பங்களா தேஷ் நாடுகளிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்புடனும் உறவு கொண்டார்கள். ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் துணையோடு, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயினர்.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு அதிக அளவில் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பு என்றால் அது லஷ்கர்-இ-தொய்பாவுடன் மட்மே. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த சர்பிரிஷ் நவாஸ் (Sarfaraz Nawaz ) என்பவனை பெங்களுரில் கைது செய்யப்பட்டான். இவனிடம் விசாரனை செய்த போது, லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடி கட்டளையின் படி பெங்களுர் குண்டு வெடிப்பு நிகழந்த்து, இத்திட்டத்திற்காகவே நஸிர் (Nazeer )என்பவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவன் விசாரனையின் போது, 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்ட மஸ்காட் தொழிலதிபர் அலி அப்துல்-அஸிஸ் அல்-ஹொட்டி (AliAbdul Aziz al-Hooti )என்பவன் இந்தியாவில் உள்ள சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நிதி உதவி செய்வதும், மேற்படி நிதியானது சர்பிரிஷ் நவாஸ் மூலகமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்த்து. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 மற்றும் 17ந் தேதி ஹொட்டி மும்பைக்கு விஜயம் செய்திருப்பதாகவும், 2007-ல் பஃகீம் அன்சாரி மூலம் ஒரு கப்பல் லஷ்கர் அமைப்பினருக்கு அனுப்பியவனும் இந்த ஹொட்டி தான் என்பதும், ராம்புர் மத்திய ரிசர்வ் படையின் மீது 1.1.2008ந் தேதி தாக்குதல் நடத்தியவன் பஃகீம் அன்சாரி( Fahim Ansari) என்பதும், இவனை உத்திர பிரதேச காவல் துறையினர் பின்னர் கைது செய்த போது கிடைத்த தகவல் ஆகும். மஸ்காட்டில் பணியில் இருந்த போது அங்குள்ள மசூதியில் தொடர்ச்சியாக ஹொட்டியை சர்பிரிஸ் நவாஸ் ஜிகாதி நன்பர்கள் மூலமாக சந்திப்பு நடந்து வந்துள்ளது.

ஆகவே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முயற்சியின் காரணமாக முழுவதும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை கொண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற நீன்ட நாள் சிந்தனையில் உருவானதுதான இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பாகும். 2001-ல் சிமி மீது மத்திய அரசு தடை விதித்தவுடன், அந்த அமைப்பினரில் ஜிகாத் சிந்தனையை தூண்டி அதன் மூலம் உருவான அமைப்பாகும். இவர்களை பற்றிய தகவல்கள் இன்னும் நிறை இருப்பதால் பின்னர் ஒரு காலக் கட்டத்தில் விரிவாக அலசுவோம்.

நன்றி - - ஈரோடு ஆ.சரவணன்

மோடி டாப் :கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடத்தில் உள்ளார்.

மோடி டாப் :

இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட அரசியல் கட்சியும் பா.ஜ., தான். பா.ஜ.,வை தொடர்ந்தே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்கள் :

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்கும் எனவும் கூகுளின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து கூகுள் இணையதள ஆய்வாளர் நமான் புகாலியா தனது டுவிட்டர் பகுதியில் கூறுகையில், சமூக வலைதளங்கள் சிறிய அளவு பங்கு பெற்றாலும் மிக முக்கியமான பங்கினை லோக்சபா தேர்தலில் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். சமூக தளங்கள் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு விபரம் :

37 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும் 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க ஓட்டளிப்பது என்பது குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். 42 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் குழப்பமான நிலையிலேயே இருந்து வருகின்றனர். நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து வருவதாக நிலவும் கருத்திற்கு மாறாக கடந்த தேர்தலில் ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

Tuesday, October 8, 2013

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் புறக்கணிக்கும்படி பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் ஆதாயம்:இதுகுறித்து வெங்கய்ய நாயுடுகூறியது:மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே முதல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் வரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே சிறுபான்மையினரை அரசியல் ஆதாயத்துக்காக வசப்படுத்த முயற்சிக்கின்றனர்.சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்திவிட்டு, பெரும்பான்மை சமூகத்தை அலட்சியப்படுத்துவதே காங்கிரஸின் மதச்சார்பின்மை தத்துவமாகும்.
பாரபட்சம் காண்பது சரியல்ல:ஷிண்டே தனது சுற்றறிக்கையில் "எந்த அப்பாவி முஸ்லீமும்' என்பதற்கு பதிலாக "எந்த அப்பாவியும்' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.அவர் தற்போது எழுதியுள்ளது மத சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, முஸ்லிம்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறார்.
இதுதான் நிர்வாக முறையா? பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே பாரபட்சம் காண்பது சரியல்ல.வளர்ச்சி, நல்ல நிர்வாகத்தின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இந்தத் தேர்தல் ஊழல் கறைபடிந்த காங்கிரசுக்கும், நல்லாட்சியை அளிக்கவிருக்கும் பா.ஜ.க.,வுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றார் வெங்கய்ய நாயுடு.முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைமையிலான தே.ஜ.,கூட்டணி ஆட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் கையேட்டை வெளியிட்டார் வெங்கய்ய நாயுடு