Wednesday, October 9, 2013

மோடி டாப் :கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடத்தில் உள்ளார்.

மோடி டாப் :

இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட அரசியல் கட்சியும் பா.ஜ., தான். பா.ஜ.,வை தொடர்ந்தே காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்கள் :

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்கள் தான் தீர்மானிக்கும் எனவும் கூகுளின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து கூகுள் இணையதள ஆய்வாளர் நமான் புகாலியா தனது டுவிட்டர் பகுதியில் கூறுகையில், சமூக வலைதளங்கள் சிறிய அளவு பங்கு பெற்றாலும் மிக முக்கியமான பங்கினை லோக்சபா தேர்தலில் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். சமூக தளங்கள் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு விபரம் :

37 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும் 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க ஓட்டளிப்பது என்பது குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். 42 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் குழப்பமான நிலையிலேயே இருந்து வருகின்றனர். நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்து வருவதாக நிலவும் கருத்திற்கு மாறாக கடந்த தேர்தலில் ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment