Tuesday, October 15, 2013

                               மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, முஸ்லிம் அமைப்பான, ஜமாத் - இ - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா, எம்.பி.யுமான, முகமது மதானி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை, கடுமையாக சாடினார். இந்த இரு கட்சிகளுமே, தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதக் கலவரங்களை தடுப்பதில், தங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக கண்டித்துள்ளார்.

இது குறித்து மதானி பேசியதாவது:மக்களிடையே மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களின் என்னென்ன நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளன, என்ன சாதனை படைத்துள்ளன போன்றவற்றை கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். ஒரு தனிப் பட்ட நபர் (மோடி) ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, பயத்தை ஏற்படுத்தி, மக்களிடையே பிரசாரம் செய்யக் கூடாது.மதச்சார் பற்றவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், ராஜஸ்தானில் மதக் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது. சமாஜ்வாதி, முசாபர்நகர் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக மதச்சார்பின்மை பேசும் காங்., மத நல்லிணக்கத்திற்காக, என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்ய வேண்டும்.மேற்குறிப்பிட்ட இரு மாநிலங்களிலும், முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவேஉள்ளது.இவ்வாறு முகமது மதானி கூறிஉள்ளார்.

மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி, ''காங்., எப்போதும் பிரித்தாளும் கொள்கையை கையாள்வதில் விருப்பம் உடையது. அவர்கள், இந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்,'' எனக் கூறியுள்ளார்

No comments:

Post a Comment