Tuesday, October 15, 2013


தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கும் R.S.S.இயக்கம் ------------------------- அனைத்து ஹிந்துக்களையும் பூசகர்கள் ஆகும் செயல்திட்ட்த்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் திராவிட அமைப்புகளோ அல்லது ஈ.வெ.ராமசாமியோ அல்ல. சுதந்திரவீர விநாயக தமோதர சாவர்க்கரே அதற்கான செயல்திட்டத்துக்கு 1929 இல் அடிக்கல் இட்டார். தனது கோவில்களை பாதுகாக்க முடியாத ஒரு சமுதாயத்துக்கு (உயர்சாதியினருக்கு)புதிய கோவில்களைக் கட்ட உரிமை இல்லை; ஆனால் அனைத்து இந்துக்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு கோவில் நுழைவு உரிமை உண்டு என்பதை உணர்த்தவே இந்த (புதிய)கோவில் கட்டப்படுகிறது என்றார் வீர சாவர்க்கர். இன்று திராவிட இயக்கத்தவர் தாம் செய்த்தாக உரிமை கோரும் பல முற்போக்கு செயல்களை வெறுப்பு இல்லாமல் செய்த முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகள் இந்துத்துவர்களே ஆவார்கள். பிறப்படிப்படையிலான புரோகிதர்கள் தேவைப்படாத இந்து திருமண சட்டத்தை ஹிந்துத்துவரான நாராயண் பாஸ்கர் காரேயே முதலில் கொண்டு வந்தார். ஹிந்துத்துவரான ஹர்பிலாஸ் சாரதாவே குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும் காரே அவர்களே தலித்தான அக்னி போஜ் என்பவரை தமது அரசில் அமைச்சராக்கி அதனால் காங்கிரஸின் மேல்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அனைத்து ஹிந்துக்களும் இணைந்து உணவருந்தும் ஒரு விராட ஹிந்து உணவகத்தை வீர சாவர்க்கர் உருவாக்கி அதில் கட்டாயமாக ஒரு தலித் சமைக்கும் உணவை/தேநீரை தன்னை சந்திக்க வருவோர் அருந்த வேண்டும் என கூறினார். எனவே ஹிந்துத்துவத்துக்கு இவ்விஷயத்தில் திராவிட இயக்கதவர்களைக் காட்டிலும் நீண்ட சிறந்த பாரம்பரியம் உண்டு

No comments:

Post a Comment