Tuesday, October 8, 2013

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் புறக்கணிக்கும்படி பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
அரசியல் ஆதாயம்:இதுகுறித்து வெங்கய்ய நாயுடுகூறியது:மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே முதல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் வரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே சிறுபான்மையினரை அரசியல் ஆதாயத்துக்காக வசப்படுத்த முயற்சிக்கின்றனர்.சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்திவிட்டு, பெரும்பான்மை சமூகத்தை அலட்சியப்படுத்துவதே காங்கிரஸின் மதச்சார்பின்மை தத்துவமாகும்.
பாரபட்சம் காண்பது சரியல்ல:ஷிண்டே தனது சுற்றறிக்கையில் "எந்த அப்பாவி முஸ்லீமும்' என்பதற்கு பதிலாக "எந்த அப்பாவியும்' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.அவர் தற்போது எழுதியுள்ளது மத சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, முஸ்லிம்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறார்.
இதுதான் நிர்வாக முறையா? பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே பாரபட்சம் காண்பது சரியல்ல.வளர்ச்சி, நல்ல நிர்வாகத்தின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இந்தத் தேர்தல் ஊழல் கறைபடிந்த காங்கிரசுக்கும், நல்லாட்சியை அளிக்கவிருக்கும் பா.ஜ.க.,வுக்கும் இடையே நடக்கும் போட்டி என்றார் வெங்கய்ய நாயுடு.முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைமையிலான தே.ஜ.,கூட்டணி ஆட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் கையேட்டை வெளியிட்டார் வெங்கய்ய நாயுடு

No comments:

Post a Comment