Saturday, August 17, 2013

பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து பெண்ணின் கிளிட்டொரியஸ், உள் மற்றும் வெளி லாபியா மற்றும் பிறப்புறப்பின் உள் சுவர்களை சுரண்டியெடுத்துவிட்டு, பின்னர் அவளது கால்களை ஒட்டித் தைத்துவிடுவது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை.

இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமையான முறை பற்றி குரானில் சொல்லப்படாவிட்டாலும், தங்களின் பெண்கள் வீட்டுச் சுவருக்கு வெளியே சென்று தங்களின் குடும்பத்திற்கு அவமான ஏற்படுத்துவதை தவிர்க்கிறது என்ற காரணத்தினாலேயே பரவலாக நடைமுறையில் இருக்கிறது. ஒரு பழங்குடி முறையாக ஆரம்பித்த இந்தச் செயல் இன்று ஒரு மதச் சடங்காகவே மாறியிருக்கிறது.

முகம்மது நபியின் காலத்திலேயே இந்த முறை இருந்ததைச் சுட்டிக்காட்டும் இஸ்லாமிய கல்வியாளர்கள், முகம்மது நபி அதனைத் தடை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்

No comments:

Post a Comment