Thursday, February 14, 2013

ULAGAM POTRUM UTHTHAMAR THALAMAI ERPPOM ......
நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்.பி. புகழாரம்

வாஷிங்டன் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சிறந்த தலைமை மற்றும் நிர்வாகத்திறன், அவர் சார்ந்த மாநிலம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளதாக அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் பாலி‌யோமவேகா கூறியுள்ளார். அமெரிக்க பிரநிநிதிகள் ச‌பையில் பேசிய பாலியோமவேகா கூறியதாவது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் நிர்வாகத் திறன், சர்வதேச நாட்டுத் தலைவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மோடி அவர்களின் செயல்பாடு, அவர் சார்ந்துள்ள மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலுவதாய் உள்ளது. மோடியின் செயல்பாடுகள், கருத்துகள் உள்ளிட்ட‌வைகள், சர்வதேச ரீதியில் உள்ளன. அவரின் செயல்பாடுகளுக்கு, அமெரிக்க அரசு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment