Friday, February 22, 2013

இந்து தீவிரவாதம் பற்றி பேச்சு: ஷிண்டே வருத்தம் தெரிவித்தார்

ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இந்து தீவிரவாதம் குறித்து பேசினார். அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஷிண்டே வருத்தம் தெரிவித்து அக்கருத்தை வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் அவரை செயல்பட விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா கூறியிருந்தது.
 
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நான் இந்து தீவிரவாதம் குறித்து நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த மதத்துடனும், தீவிரவாதத்தை தொடர்பு படுத்தும் உள்நோக்கம் என்னிடமில்லை.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
பாரதீய ஜனதா பாராளுமன்ற தலைவர் சுஷ்மா சுவராஜுடன், மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேச்சுவார்த்தை நடத்த கதவு திறந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் தீக்‌ஷித் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கத

No comments:

Post a Comment