Saturday, February 16, 2013

கோட்ஸே தீவிரவாதியா, தீர்க்கதரிசியா ?

கோட்ஸேவை குறித்து நிறைய கேள்விகள் வந்துள்ளன.

அன்றைய கோட்ஸேவின் செயலை வைத்து இன்றைய தீவிரவாதிகளை, பல நிழல் தீவிரவாதிகள் நியாயப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆனால் அவனே தீவிரவாதத்திற்கு பலியாகி, தன் சொந்தங்கள் மற்றும் சொத்துக்களை பறி கொடுத்தவன் !! அவன் ஒரு சூழ்நிலைக் கைதி.

அவனின் (காந்தியை கொன்ற) செயலை நான் நியாயப் படுத்த விரும்பவில்லை. அதை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் மனசாட்சியின் முன் வைக்கிறேன். காந்தி மிகப்பெரிய மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் யதார்தத்தை புரிந்து கொள்ளாதவராக இருந்தார். தன்னை போன்றே அனைவரும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் என்று அவர் நினைத்துவிட்டார். ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியா ?

லட்சக்கணக்கில் ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த சிந்து மாகானத்தை விட்டு வெளிவருகின்றனர் ஹிந்து மக்கள். அத்தனை வருட நாகரீகத்தையும், அற்புதமான கோவில்களையும், முன்னோர்களின் பூமியையும் விட்டுவிட்டு, எதுவுமே தெரியாத தில்லி நகரத்தில் தஞ்சம் புகுந்தார்கள் அந்த அகதிகள். தங்குவதற்கு இடம் இல்லாமல் தில்லியின் கடும் குளிரில், வேறு வழி இல்லாமல் யாரும் இல்லாத மசூதிகளில் தற்காலிகமாக குடியிருக்கிறார்கள். காந்தியோ நாதியில்லாத அவர்களை அந்த மசூதிகளில் இருந்து வெளியேறுமாறு உண்ணாவிரதம் இருக்கிறார். சொந்தபந்தங்களை, சொத்துக்களை இழந்து வந்த ஹிந்துக்களை காந்தி பொறுமை காக்க சொல்கிறார். அஹிம்சையை பேனுமாறு பரிந்துரைக்கிறார்.

கோட்ஸே சொல்கிறான் "நான் காந்தியின் அஹிம்சை நெறியை மறுக்கவில்லை, அவர் ஒரு துறவியாக இருக்கலாம் ஆனால் அவர் அரசியல்வாதியாக இருக்க அருகதை அற்றவர். அவரின் அஹிம்சை கொள்கை தற்காத்துக் கொள்வதையே தவறு என்கிறது. ஒருவன் வாழ்வுரிமைக்காக போராடுவதை கலவரம் என்று அந்த அஹிம்சை தத்துவம் கருதுகிறது. "அஹிம்சை சித்தாந்தம்" என்று அது சொல்லப்பட்டாலும், அது நமக்கு சுய அழிவையே தேடித் தரும்.

ஆக நான் யாருடைய ஆதரவும் இல்லாமல், ஒரு தனி மனிதனாய் அவரை அனைவருக்கும் முன் கொல்லப் போகிறேன். நான் அதை என் கடமையாக செய்கிறேன். தப்பித்து செல்லும் எண்ணம் எனக்கு இல்லை.

நான் காந்தியை சுடுவதற்கு நெருங்குகையில், அவர் இரண்டு பெண்களை தாங்கி பிடித்து வந்தார். நான் அப்பெண்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். காந்தியை வணங்கி விட்டு அவரை சுட்டேன். அவரிடமிருந்து "ஹா" என்ற மென்மையான ஒரு சப்தமே வந்தது. அவர் வீழ்ந்த பிறகு நான் "போலிஸ், போலீஸ் என்று கூச்சலிட்டேன். 30 விநாடிகளுக்கு பிறகுதான் ஒரு போலிஸ் அதிகாரி வந்தார், நான் அவரை என் அருகே வந்து என்னை கைது செய்யுமாறு அழைத்தேன்".

இவை எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். பின் வந்த காலம் நமக்கு கற்றுக் கொடுத்தது என்ன ?

ஒரு புறம் பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மொத்தமாய் இனப்படுகொலை அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளனர். மற்றொரு புறம் இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு, குரானுக்கு முரனானது என்று பல்கி பெருகி மீண்டும் ஒரு பிரிவினைக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலை. பங்களாதேஷில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக குடிபெயர்கிறார்கள். சௌதிய சட்டங்களும், கற்கால நடைமுறைகளும் நடைமுறை படுத்தப் படுகின்றன. தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. அதே பழைய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதை குறித்து நாம் பேசிவிட்டால் உடனே மதவாதிகள் என்று முத்திரை குத்த படுகிறோம்.

சுதந்திரத்திற்கு பின், இந்த நாடு பயங்கரவாதத்தால் பாதிக்கப்படாமல் அமைதியானதாய் திகழ்ந்திருந்தால், கோட்ஸே நிச்சயம் ஒரு தீவிரவாதி. ஆனால் நம் கண் முன் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது ?

இப்போது மனசாட்சியோடு சொல்லுங்கள் கோட்சே தீவிரவாதியா, தீர்க்கதரிசியா ?
— with Sasi Varnan and 22 others.

No comments:

Post a Comment