Monday, February 11, 2013

மத்தியில், ஆளும் காங்., தலைமையிலான அரசு, தன் கட்டுப்பாட்டை இழந்து, வெகு நாட்களாகி விட்டது. ஒரு கமிஷன் ஏஜன்டாகவே, தற்போது செயல்பட்டு வருகிறது.மக்களின் அடிப்படை தேவைகளான, பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யாமல், அதை விற்பனை செய்பவர்கள் கையிலேயே, ஒப்படைத்து விட்டதால், பெட்ரோல், டீசல், காஸ் விலை நாள்தோறும் விலையேறிக் கொண்டிருக்கின்றன.சிலிண்டர் வினியோகத்தை, ஏஜன்சி எடுத்துள்ளவர்கள், இன்று, மெகா கோடீஸ்வரர்களாக உலா வருகின்றனர்.

காரணம், இவர்களே செயற்கையாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை கூடுதலாக கொடுத்து, நுகர்வோர் வாங்கும் சூழலை உருவாக்குகின்றனர்.இவை ஒரு புறம் இருக்க, அரசு மானிய விலையுடன், ஒரு சிலிண்டரை வீட்டில் சென்று இறக்குவதற்கு, 403 ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. அதிக பட்சம், 5 கி.மீ., தூரம் வரை, காஸ் நிறுவனம், டோர் டெலிவரிக்கு, 403 ரூபாய்க்கு ரசீது கொடுத்து, இறக்க வேண்டும்.ஆனால், நடைமுறையில், ஒவ்வொரு சிலிண்டரையும், வீடுகளில் இறக்கும் போது, 10 முதல், 50 ரூபாய் வரை, கூடுதலாக, வசூலிக்கப்படுகிறது.இந்த கூடுதல் வசூலுக்கு, ரசீது ஏதும் கொடுப்பதில்லை. இந்தத் தொகையை, ஏஜென்சியும் பங்கு போட்டுக் கொள்வதாக கேள்வி. இப்படி, மாதத்திற்கு, பல லட்ச ரூபாயையும், முறைகேடாக ஈட்டுகிறது.மேலும், காஸ் ஏஜன்சி உரிமையாளர்களும், மணல் தாதாக்களை போல், காஸ் ஏஜன்சி மாபியாக்களாக உருவாகி விட்டனர். இவர்கள், பெரும்பாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். இவர்கள் தவறு செய்தால், அவர்கள் காப்பாற்றி விடுகின்றனர்.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மானிய சிலிண்டர் ஒன்றுக்கு, 403 ரூபாய் மட்டும் கொடுத்து, ரசீது வாங்க வேண்டும்.

No comments:

Post a Comment