Friday, February 15, 2013

எனக்கு பிடித்த நிஜ மணிதர்கள்.

ராஜேந்திர சிங்.

விஜய் தெரியும், அஜித் தெரியும், ஏன் தமனாவையும், காஜல் அகர்வாலையும் நமக்குத் தெரியும். ராஜேந்திர சிங்கை பற்றி தெரியுமா ? 

"நீரின்றி அமையாது உலகு".  இனி வரும் உலகத்தின் மிகப்பெரும் சவால் குடிநீராகத்தான் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அந்த அடிப்படை ஆதாரத்தின் மகத்துவத்தை உணர்ந்தவர்தான் ராஜேந்திர சிங்.

1959ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தார் ராஜேந்திர சிங்..

காந்தி பீஸ் பௌன்டேஷன் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்த ரமேஷ் சர்மா என்பவர் சிறுவன் ராஜேந்திர சிங்கிற்கு சேவையின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்.  அவரின் தூண்டுதலின் பேரில் சிறுவன் இராஜேந்திர சிங் கிராமங்களை சுத்தம் செய்வதிலும், குடிபோதைக்கு எதிரான பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்  அதைப்போலவே அவரின் பள்ளிக்கூடத்து ஆங்கில ஆசிரியரான பிரதாப் சிங்கும் மாணவன் இராஜேந்திர சிங்கின் மனதில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்த ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்தினார்.

படிப்பை முடித்த பிறகு இராஜேந்திர சிங் சமூகச் சேவையில் இறங்கினார்.  இராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் கல்வியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இத்தருனத்தில்தன் அவர் "தருன் பாரத் சங்கம்" என்ற இளைஞர் அமைப்பில் சேர்ந்தார்.  

அல்வார் மாவட்டத்தில் அச்சமயம் அருமையான விளைநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வறண்டு கிடந்தன.
குளங்கள் தூர்வார படாமலும், பழங்கால தண்ணீர் சேமிப்பு முறைகள் புறக்கனிக்கப் பட்டதாலும் நிலமை மோசமடைந்திருந்தது.  பல ஆண்டுகள் காடுகளை அழிக்க பட்டதாலும், சுரங்கங்கள் தோண்டப்பட்டதாலும் வறட்சி தாண்டவம் ஆடியது.  நவீன போர்வெல் குழாய்கள் நிலமையை இன்னும் மோசமடைய செய்து நிலத்தடி நீரை வெகுவாக கீழே தள்ளின.

இத்தருனத்தில்தான் "மங்குலால் படேல்" என்கிற கிராமத்து பெரியவரை இராஜேந்திர சிங் சந்தித்தார்.  பெரியவர் இராஜஸ்தானின் கிராமங்களில், படிப்பின் தேவையை விட தண்ணீரின் தேவை மிக அதிகம் என்று அறிவுறுத்தினார்.  இராஜேந்திர சிங் மற்ற படித்த நகர்புற இளைஞர்கள் போல் இல்லாமல் நேரிடையாய் குளங்கள் கட்டுவதில் ஈடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  ராஜேந்திர சிங், பழமையான தண்ணிர் சேமிப்பு மற்றும் குளம் அமைக்கும் முறைகளை அவரிடமிருந்தும் இதர‌ கிராமவாசிகளிடம் இருந்து கற்றுக் கொண்டார்.

ராஜேந்திர சிங்குக்கு பழமையான நீர்சேமிப்பு முறைகள் கைவிடப்பட்டதாலும், செக் டேம் எனச் சொல்லப்படும் சிறு குளங்களை அழித்ததாலும் தான் தண்ணீர் பற்றாக்குறை வந்தது என்பது புரிந்தது.  குளங்களை பழமையான முறையில் புதுப்பிக்க ராஜேதிர சிங் தயாரானார்.  அவரின் நகரத்து நண்பர்களோ இறங்கி வேலை செய்யத் தயங்கினார்கள்.  இது பிடிக்காமல் பலர் அவரை விட்டு விலகினார்கள்.  ஆனால் அவரோ மனம் தளராமல் கிராம இளைஞர்களை சேர்த்து "கோபாலபுரா" என்ற இடத்தில் ஒரு குளத்தை வெட்டினார். ஒரு மூன்று வருட காலத்தில் அதை மேலும் மேலும் தூர் வாறி 15 அடி ஆழத்துக்கு மேம்படுத்தினார். மழைக் காலங்களில் அக்குளம் நிரம்பியது, விரைவிலேயே நிலத்தடி நீர் மெல்ல மேலே வரத் தொடங்கியது. அந்த ஊரே செழிப்பாகத் தொடங்கியது. 

1986ல் அவர் பழைய குளங்களை புதுப்பிக்குமாறு கிராமவாசிகளை ஊக்குவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த பாதயாத்திரை தொடங்கினார்.  கோபாலபுரா செழிப்பான செய்தியும், அவரின் பாதயாத்திரையும் மேலும் விழிப்புணர்வை பரப்ப, பல கிராம வாசிகள் தங்கள் கிராமத்து குளங்களை சீரமைப்பதற்கு முன்வந்தார்கள்.   வற‌ண்டு போன ஆர்வாரி நதியில் அவர் பல சிறு சிறு குளங்களை ஏற்படுத்தினார்கள். இதனால் 1990ல் அந்நதி மீண்டும் 60 வருடங்களுக்கு பிறகு ஓடத் தொடங்கியது.

2001ம் ஆண்டு வாக்கில்  தருன் பாரத் சங்கம் கிட்டத்தட்ட 6500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் உள்ளடக்கி வறட்சியோடு போராடியது.  கிட்டத்தட்ட 4500 குளங்களை கட்டியது, பல குளங்களை சீரமைத்தது,  அதே வருடத்தில் ராஜேந்திர சிங்கிற்கு மிக உயர்ந்த விருதான "மெக்சேசே" விருது கிடைத்தது.

தளராத உழைப்பிற்கு ராஜேந்திர சிங் போன்ற‌ நிஜ ஹீரோக்கள் மிகப்பெரிய உதாரணம்.  இவரை போன்ற பல பெரிய மணிதர்களை நம் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டாதது, கொடுமை. வறட்டசியால் பல விவசாயிகள் தற்கொலை செய்து சாகும் நம் தமிழ்நாட்டிலும், ராஜேந்திர சிங் போன்றவர்கள் இருந்தால் எத்தனை அருமையாய் இருக்கும் ?

தளராத உழைப்பிற்கு ராஜேந்திர சிங் போன்ற‌ நிஜ ஹீரோக்கள் மிகப்பெரிய உதாரணம். இவரை போன்ற பல பெரிய மணிதர்களை நம் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டாதது, கொடுமை. வறட்டசியால் பல விவசாயிகள் தற்கொலை செய்து சாகும் நம் தமிழ்நாட்டிலும், ராஜேந்திர சிங் போன்றவர்கள் இருந்தால் எத்தனை அருமையாய் இருக்கும்

No comments:

Post a Comment