Friday, February 15, 2013

ஆரிய – திராவிடப் பிரிவு
-------------------------
மானுடத்தின் ஒப்பற்ற மற்றும் மிக முதலானதுமான ரிக் வேதத்தில் ஒரு கடுகளவிற்குக் கூட வெளியிலிருந்து ஆதிக்கம் (invasion) அல்லது  குடிபெயர்தல் (இடமாறுதல்) என்பதோ நடந்ததாக ஒரு ஆதாரமோ அல்லது குறிப்போ காணப்படவில்லை. வேத கால ரிஷிகளோ பாரதத்திற்குள் வேறெங்கிலும் இருந்தோ நுழைந்ததாய்க் கூறவில்லை. ஆனால் இந்திய ஆய்வாளர்களும்  (Indologists) வாதிடுபவர்களும் இதே ரிக் வேதத்தையே தங்கள் பொய்க் கூற்றினை மெய்யாக்க உபயோகப் படுத்துகிறார்கள். 

 இதற்கு இவர்கள் மேற்கோள் காட்டும் ரிக் வேதத்தில் ஆங்கிரஸ பரம்பரையில் வந்த ரிஷிகள் தஸ்யுக்களை  வெல்வதற்காக இந்திரனை ஆவாஹனம் செய்த கதையைக் கூறி அப்படிப் போர் செய்ய வந்தவர்கள் ஆரியர்கள் என்றும் அவர்களால் விரட்டப்பட்ட மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்றும் அவிழ்த்து விட்டனர். இதில் தஸ்யுக்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு அழகான விவரிப்பை இங்கு காணுங்கள்.

இப்படி அவிழ்த்து விடப்பட்ட மூட்டையை அவர்கள் முதுகிலேயே மறுபடி ஏற்றுவதற்கு முன்னால் சிலவற்றைப் பார்த்து விடுவோம்.

திராவிட என்பது தமிழ் வார்த்தை அல்ல. இதன் சமஸ்க்ருத மூல வார்த்தை “திரவ” ஆகும்,  நீர் போன்ற என்ற பொருள் படும். இதில் முக்கியமாக, சங்க இலக்கியங்களில் திராவிடன், திராவிட என்ற சொல் எங்கும் கூறப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் செளந்தர்ய லஹரி 75ஆவது கவியில் திருஞான சம்பந்தரைக் குறித்து இவ்வார்த்தையைப் பிரயோகிக்கிறார்  (இது தன்னைத் தானே குறிக்க அவர் உபயோகித்த சொல் என்றும் கூறுவர்):

Tava stanyam manye dharani-dhara-kanye-hrdayatah
paya-pArAvArah parivahati sArasvata iva;
DayAvatyA dattam dravida-sisur AsvAdya tava yat
kavInAm praudhAnAm ajani kamaniyah kavayitA 
http://www.nandhi.com/soundarya_lahar%C2%ADi_sri_adi_shankara.htm

தமிழ்ச் சங்க இலக்கியங்கள் காலம்,  இறையாண்மை,  நிகழ்வுகள், போர், தொழில், இயற்கை சீற்றங்கள் போன்ற பல நிகழ்வுகளின் சந்தேகத்திற்கிடமில்லாத் தொகுப்பாகும். ஆர்யர்கள் படையெடுப்பின் மூலம் திராவிடர்களை விந்திய மலையின் தெற்கே தள்ளியிருப்பின், அவர்களில் பலரைக் கொன்றிருப்பின், நிச்சயமாகத் தமிழ் இலக்கியங்களில்  இத்தகைய கொடுஞ்செயல்கள் குறித்த பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இலக்கியங்கள் திராவிட என்ற சொல்லையே கி.பி 9ஆம் நுற்றாண்டில் அதுவும் மொழியாய்வில்  பயன்படுத்தியிருக்கின்றனர். சேந்தன் திவாகரம் (திவாகர முனிவர்) திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்று குறிக்க பயன்படுத்தியிருக்கிறார்.

ஆரிய-திராவிடப் பிரிவு ஒரு கட்டுக்கதை என்பதும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாதது என்று அறிய மேற்கூறிய உதாரணமே போதுமானது. 19ஆம் நூற்றாண்டில் தான் ராபர்ட் கால்டுவெல் என்பவர் க்றிஸ்துவ மதத்தைப் பரப்ப இங்கு வந்து “திராவிடன்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் இச்சொல் அரசியல் சாயம் பூசிக்கொண்டது. இந்தக் கதைக்கு உயிரூட்டி அதை அப்படியே வைத்திருந்தால் தான் தங்கள் கல்லா நிறையும் என்பதை நன்கு உணர்ந்தவராயினர் அரசியல் தலைவர்கள்.  

ரிக் வேதத்தில் ஆதாரமிருப்பதாகச் சொல்லப்படும் புரளி
-------------------
 இனி நாம் ஆரிய ஆதிக்கம் பற்றி முழக்கமிடும் இந்திய ஆய்வாளர்கள் எப்படி  ஆரியர்கள் மண்ணின் சொந்தக்காரர்களாகிய தஸ்யுக்களை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் என்பதையும் சில கேள்விகளையும் பார்ப்போம்.  இவர்கள் ரிக் வேதம் 10/48 ஐ சுட்டிக் காட்டுகிறார்கள். இதில் இந்திரன் தஸ்யுக்களையும் அவர்களின் பிரிவுகளையும் தன் பராக்கிரமத்தால் அழித்தும், அவர்தம் செல்வங்களை அபகரித்தும்,  தன்னுடன் இருப்பவர்கள் வீழ்வதில்லை என்று சொல்வதாகவும் உள்ளது.  ஆனால் இவர்கள் வசதியாக மறப்பதும் அல்லது புரிந்து கொள்ள இயலாமலிருப்பதும் என்னவென்றால் தாஸ்யுக்கள் மற்றும் அவர்தம் பிரிவுகளின் உருவகத்தை.  சரி, தாஸ்யுக்கள் யார்?

 ரிக் வேதம் 1/33/1-10 ஐக் காண்கையில் நமக்குத் தெளிவாகப் புரிவது என்னவென்றால் இந்திரன் அபகரிப்பதாய் சொல்லப்படும் செல்வம் “ஞானம் அல்லது அறிவு” என்பதாம். 

இந்த ரிக் வேத வரிகள் “கவம் கேதம் பரம் அவர்ஜதே நா” என்று முடிகிறது. அதாவது ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானம் என்பதாகும். அந்த முழு வாக்கியத்தின் அர்த்தமாவது “வாருங்கள்,  நாம் இந்திரனிடம் பசுக்களைக் கேட்போம். அவனே இந்த எண்ணத்தை நம்மில் அதிகரிக்கிறான். நமக்காக ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானத்தை நமக்குத் தருகிறான்” என்று பொருள் படும்.

 முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம்.  யக்ஞங்கள், ஹோமங்கள் முதலியனவற்றை செய்பவர்களை யஜ்யு என்றும் இவை யாருக்காக அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவர்கள் யஜதா என்றும் சொல்வர். ஆனால் தஸ்யுக்களின் கொள்கை யஜ்யு, சுக்ரதுக்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. தஸ்யுக்களை அயஜ்யு (யஜ்யுவிற்கு எதிர்மாறான) என்றும் சொல்வர். அஜித் என்றால் அ+ஜித், அதாவது ஜெயிக்க முடியாத என்ற பொருள் படுவது போல. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஒரு அயஜ்யு சுக்ரதுக்களை (தெய்வீக சப்தத்தைப் உணர்ந்து பாடுபவர்கள் என்று ஒருவாறாகப் பொருள் கொள்ளலாம்) முற்றிலும் வெறுப்பவர். அவர்தம் இத்தகைய குணம் ப்ரம்ஹத்விஷ் என்றழைக்கப்படுகிறது. அதாவது பரமாத்மாவைப் பற்றிய எண்ணமில்லாதவன் என்று பொருள். த்வேஷம் என்பது த்விஷ் என்ற பதத்திலிருந்து உருவானது.

முக்கியமாக, அயஜ்யு ஓர் அனாசன் (வாய் என்பதில்லாதவன்) என்றும் அமான்யமன (மனம், புத்தி போன்றவைகளில்லாத) என்றும் வழங்கப்படுகிறார். வேதம் முழுமைக்கும் தஸ்யுக்கள் பசுக்களை (நாம் மாடு என்றழைக்கும் பசுவைக் குறிப்பதல்ல, அறிவை ஞானத்தைக் குறிப்பது) கைப்பற்றியிருப்பதாயும் இவைகளை மனிதர்கள் இந்திரனின் உதவியுடன் கைக்கொள்வதாயும் வருகிறது. இன்னோரிடத்தில் பாணிகள் (தஸ்யுக்களில் ஒரு பிரிவு) இப்பசுக்களைத் திருடி ஒரு குகையில் வைத்து விடுவதாயும் இந்திரன் என்ற ஞானத்தினால் இவ்வொளி வீசும் பசுக்கள் மீட்கப்படுவதாயும் வருகிறது. ரிக் வேதம் 6/51/14 இந்திரனிடம் பாணிக்களை அழிக்குமாறும் அவர்களை ஓநாய்களுக்கும் ஒப்பிடுகிறது.

இந்திரனானவன் இந்திய ஆய்வாளர்கள் கற்பனையில் தஸ்யுக்களை அழித்து இன்னும் என்னென்னவற்றை வென்றான் என்று பார்க்கலாம்.

ரிக் வேதம் 3/34/7-10

7 வீரர்களின் இறைவன், மக்களை ஆளும் இந்திரன் கடவுளர்களுக்கு வலிமையினாலும் போரினாலும் விடுதலையளித்தான். ஞானமடைந்தவர்கள் விவாஸ்வனின் இருப்பிடத்தில் அவனின் இத்தீரச்செயல்களைப் பாடிப் புகழ்வர்.

 8 அற்புதமான, வெற்றியாளன், வெற்றியைத் தருபவன், ஒளியையும் பரம்பொருள் போன்ற தண்ணீரை வென்றவன், இப்பரந்த பூமியையும் சுவர்க்கத்தையும் வென்றவன் – இந்திரன் அவனைப் பக்தியில் காதலுற்றோர் புகழ்வர்.

 9 சூரியனையும் குதிரைகளையும் தன்னகத்தே கொண்டவன், பலருக்கும் உணவூட்டும் பசுவை வென்றான். தங்கப் புதையலை வென்றான்; தஸ்யுக்களைத் தகர்த்தான்; ஆரியர்களின் நிறங்களைக் காத்தான்.

 10 தாவரங்களையும் பகலையும் அவன் கவர்ந்தான்; காட்டிலுள்ள மரங்களையும் காற்றின் நடுப்பகுதியையும் வென்றான். இப்படிப் பல…

தஸ்யுக்கள் மனிதர்களாயும், ஆரியரில்லாதவர்களாயும் இருப்பார்களேயானால், இந்திரன் எதற்காக பகலையும் காற்றின் நடுப்பகுதியையும் சாதாரண மனிதர்களிடத்திலிருந்து கவர வேண்டும்?

தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதத்தில் தொடர்கிறது. இந்திரன் அவர்களை சுவர்க்கத்திலிருந்தும் பூமியிலிருந்தும் தன் வஜ்ராயுதத்தால் துரத்தியடிக்கிறான். அவன் பராக்கிரமம் அதிகரிக்க அதிகரிக்க தஸ்யுக்களால் அவனறியாமல் எங்கும் ஓடி ஒளிய முடியாமல் போகிறது. இந்திரன் சூரியனை மீட்க, அவன் உதயமாகி ஒளிபொருந்திய பசுக்களை அடைத்து வைத்திருந்த குகையை ஒளிமிக்கதாக்குகிறான்.

மேற்கூறியவற்றில் தஸ்யுக்கள் இந்திரனால் அழிக்கப்பட்ட திராவிடர்கள் என்ற புளுகு மூட்டைக்கு நேரெதிராக இருப்பதோடல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் இருக்கிறது.

ஏனெனில் திராவிடர்கள் பேச முடிபவர்கள், புத்திசாலிகள் மற்றும் அவர்களுக்கு மூக்கு இருக்கிறது 

 சங்க கால இலக்கியங்களில் இருக்கும் சான்றுகள்

 வாருங்கள், நாம் இனி தமிழ்நாட்டிற்குச் சென்று தமிழர் என்பவர் ஆரியர் என்பவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவரா என்றும் ஆரியர்களால் அவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளானவர்களா என்றும் பார்க்கலாம்.

 சங்க கால இலக்கியம் என்பது மிக மிக விசாலமானதாகையால் ஒரு சில முக்கியமான தொகுப்புகளிருந்து திராவிடர்கள் எதை, யாரை வணங்கினார்கள் என்று பார்க்கலாம். சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை (வனம் மற்றும் வனம் சார்ந்த), மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த) நெய்தல் (கடல் மற்றும் கடல் சார்ந்த) மற்றும் பாலை (காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்) எனப் பிரிப்பதை நாம் அறிவோம்.

தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: 

முல்லை – திருமால் (விஷ்ணு)

குறிஞ்சி – முருகன் (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்)

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை (சக்தி)

 மற்றொரு முக்கிய சங்க இலக்கியமான புறநானூறு சிவபெருமான் திரிபுரமெரித்ததைச் சொல்கிறது. இதில் சிவபிரான் மஹா மேரு மலையை வில்லாகத் தன் கையிலெடுத்ததையும் ஒரே அம்பினால் முப்புரங்களையும் தீக்கரையாக்கியதையும் சொல்கிறது. புறநானூற்றிலும் அகநானூற்றிலும் சிவகுமாரன் கந்தனாகிய குமரக்கடவுள் நன்கு அடிக்கடி காணக்கிடைக்கிறார்.

 இவை நம்மை வேதங்களின் அக்னி, கார்த்திகேயனுடன் நன்கு இணைக்கிறது. இதில் இன்னும் சிலர் சிவபெருமானை திராவிடக் கடவுளாக மட்டும் காட்ட விழைகின்றனர். நல்லவேளை “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழுப் பதம் நமக்குத் தெரியும். இதில் வேதங்களில் சொல்லப்படும் ருத்ரரை சிவனாகப் பாவிப்பதுமுண்டு.

 வேதங்களில் ரிக் வேததிலோ அல்லது யஜுர் வேதத்தில் ருத்ரம்/சமகத்திலோ நன்கு நோக்கினோமானால், ருத்ரரின் ஒரு சில பொதுவான குணங்களை எளிதாகக் காணலாம். இதில் சிவன் என்பவர் ருத்ரர்களின் ஒரு அம்சமே என்பது ருத்ரம் / சமகத்தில் சொல்லியிருப்பது. இதில் ருத்ரர் என்பது சிவன் என்பதாய் மாற்றமடைந்தாலும், வேதங்களில் சொல்லியிருக்கக் கூடிய சிவன் / ருத்ரனும் பெரிய புராணத்தில் கூறியிருக்கும் சிவனும் ஒன்றே.

 திருவண்ணாமலை, சிதம்பரம் இவற்றில் தேவாரம் ஓதுவதோடு ருத்ரம் / சமகத்தையும் ஓதுவார்கள், தமிழரின் சிவனும் வேத புராணங்களில் சொல்லப்படும் சிவனும் ஒன்றே என்பதை இது நமக்குக் காட்டுகிறது.

அனைத்திற்கும் மேலாக, யஜுர் வேதத்திலிருக்கும் தைத்ரிய சம்ஹிதை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் இன்றும் வாழும் ஒரு  மரபாகும்.

முடிவாக…

 இதன் மூலம் ரிக் வேதம், சங்க கால தமிழிலக்கியங்கள் இவற்றில் மிகச்சில குறிப்புக்களைக்  கொண்டே ஆரிய ஆதிக்கம் என்ற புரட்டு எத்துணை நகைப்புக்குரியது என்பது தெரிகிறது. இதன் மூலம் இத்திருநாடு அதன் சொந்தக் குடிமக்களாம் வேதக் குடும்பங்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பொன்னாடு என்பதும் நன்கு தெரிகிறது.

 மொழி, தோல் நிறம், அந்தந்த இடங்களின் கலாச்சார வேறுபாடு இவற்றைக் கொண்டு இந்தப் பிரிவினை விளையாட்டு 150 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி நடந்ததோ அதே போல இன்றும் நடைபெறுகிறது.

 மறுபடியும் சொல்கிறோம், இத்திருநாடு வேத தர்மத்தைப் பின்பற்றும் அதே சொந்தக் குடிமக்களால் நிரம்பியிருந்தது, நிரம்பியிருக்கிறது என்பது திண்ணம்.

 பி.கு: தமிழகத்தின் இரு கண்களாகிய சைவமும் வைணவமும் நமக்களித்த அருபெரும் சைவர்கள், வைணவர்களின் மூலம் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்களை நாம் இதில் தொடவேயில்லை. அதைப் பார்த்தாலே வேத தர்மம் முழுதும் தழைத்தோங்கிய நாடு இது என்பதும் ஆரிய திராவிடப் பிரிவு என்னும் கட்டுக்கதை ஒரு மதுபானமருந்திய மனத்திலிருந்து தோன்றிய ஒரு கற்பனை என்பதும் தெரிய வரும்.

 பி.கு1: மேலும், வேதங்களில் சொல்லப்பட்டிருப்பவை உண்மை, உண்மை என்று ஆணித்தரமாக நிரூபணமாகி வரும் இந்நாட்களில் நாம் அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும் இவ்வுண்மைகளைப்  பார்க்க உதவிய அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறோம். எங்களுக்கு யாரிடமும் பொய் சொல்லத் தேவையிருக்கவில்லை. எங்கள் முன்னோர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பொய் என்ற ஒரு துணை அவர்களுக்குத் தேவையிருக்கவில்லை
ஆரிய – திராவிடப் பிரிவு
-------------------------
மானுடத்தின் ஒப்பற்ற மற்றும் மிக முதலானதுமான ரிக் வேதத்தில் ஒரு கடுகளவிற்குக் கூட வெளியிலிருந்து ஆதிக்கம் (invasion) அல்லது குடிபெயர்தல் (இடமாறுதல்) என்பதோ நடந்ததாக ஒரு ஆதாரமோ அல்லது குறிப்போ காணப்படவில்லை. வேத கால ரிஷிகளோ பாரதத்திற்குள் வேறெங்கிலும் இருந்தோ நுழைந்ததாய்க் கூறவில்லை. ஆனால் இந்திய ஆய்வாளர்களும் (Indologists) வாதிடுபவர்களும் இதே ரிக் வேதத்தையே தங்கள் பொய்க் கூற்றினை மெய்யாக்க உபயோகப் படுத்துகிறார்கள்.

இதற்கு இவர்கள் மேற்கோள் காட்டும் ரிக் வேதத்தில் ஆங்கிரஸ பரம்பரையில் வந்த ரிஷிகள் தஸ்யுக்களை வெல்வதற்காக இந்திரனை ஆவாஹனம் செய்த கதையைக் கூறி அப்படிப் போர் செய்ய வந்தவர்கள் ஆரியர்கள் என்றும் அவர்களால் விரட்டப்பட்ட மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்றும் அவிழ்த்து விட்டனர். இதில் தஸ்யுக்கள் யார் என்பதைப் பற்றிய ஒரு அழகான விவரிப்பை இங்கு காணுங்கள்.

இப்படி அவிழ்த்து விடப்பட்ட மூட்டையை அவர்கள் முதுகிலேயே மறுபடி ஏற்றுவதற்கு முன்னால் சிலவற்றைப் பார்த்து விடுவோம்.

திராவிட என்பது தமிழ் வார்த்தை அல்ல. இதன் சமஸ்க்ருத மூல வார்த்தை “திரவ” ஆகும், நீர் போன்ற என்ற பொருள் படும். இதில் முக்கியமாக, சங்க இலக்கியங்களில் திராவிடன், திராவிட என்ற சொல் எங்கும் கூறப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆதி சங்கரர் செளந்தர்ய லஹரி 75ஆவது கவியில் திருஞான சம்பந்தரைக் குறித்து இவ்வார்த்தையைப் பிரயோகிக்கிறார் (இது தன்னைத் தானே குறிக்க அவர் உபயோகித்த சொல் என்றும் கூறுவர்):

Tava stanyam manye dharani-dhara-kanye-hrdayatah
paya-pArAvArah parivahati sArasvata iva;
DayAvatyA dattam dravida-sisur AsvAdya tava yat
kavInAm praudhAnAm ajani kamaniyah kavayitA
http://www.nandhi.com/soundarya_lahar­i_sri_adi_shankara.htm

தமிழ்ச் சங்க இலக்கியங்கள் காலம், இறையாண்மை, நிகழ்வுகள், போர், தொழில், இயற்கை சீற்றங்கள் போன்ற பல நிகழ்வுகளின் சந்தேகத்திற்கிடமில்லாத் தொகுப்பாகும். ஆர்யர்கள் படையெடுப்பின் மூலம் திராவிடர்களை விந்திய மலையின் தெற்கே தள்ளியிருப்பின், அவர்களில் பலரைக் கொன்றிருப்பின், நிச்சயமாகத் தமிழ் இலக்கியங்களில் இத்தகைய கொடுஞ்செயல்கள் குறித்த பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இலக்கியங்கள் திராவிட என்ற சொல்லையே கி.பி 9ஆம் நுற்றாண்டில் அதுவும் மொழியாய்வில் பயன்படுத்தியிருக்கின்றனர். சேந்தன் திவாகரம் (திவாகர முனிவர்) திராவிடம் என்ற சொல்லைத் தமிழ் என்று குறிக்க பயன்படுத்தியிருக்கிறார்.

ஆரிய-திராவிடப் பிரிவு ஒரு கட்டுக்கதை என்பதும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாதது என்று அறிய மேற்கூறிய உதாரணமே போதுமானது. 19ஆம் நூற்றாண்டில் தான் ராபர்ட் கால்டுவெல் என்பவர் க்றிஸ்துவ மதத்தைப் பரப்ப இங்கு வந்து “திராவிடன்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் இச்சொல் அரசியல் சாயம் பூசிக்கொண்டது. இந்தக் கதைக்கு உயிரூட்டி அதை அப்படியே வைத்திருந்தால் தான் தங்கள் கல்லா நிறையும் என்பதை நன்கு உணர்ந்தவராயினர் அரசியல் தலைவர்கள்.

ரிக் வேதத்தில் ஆதாரமிருப்பதாகச் சொல்லப்படும் புரளி
-------------------
இனி நாம் ஆரிய ஆதிக்கம் பற்றி முழக்கமிடும் இந்திய ஆய்வாளர்கள் எப்படி ஆரியர்கள் மண்ணின் சொந்தக்காரர்களாகிய தஸ்யுக்களை அழித்தார்கள் என்று சொல்கிறார்கள் என்பதையும் சில கேள்விகளையும் பார்ப்போம். இவர்கள் ரிக் வேதம் 10/48 ஐ சுட்டிக் காட்டுகிறார்கள். இதில் இந்திரன் தஸ்யுக்களையும் அவர்களின் பிரிவுகளையும் தன் பராக்கிரமத்தால் அழித்தும், அவர்தம் செல்வங்களை அபகரித்தும், தன்னுடன் இருப்பவர்கள் வீழ்வதில்லை என்று சொல்வதாகவும் உள்ளது. ஆனால் இவர்கள் வசதியாக மறப்பதும் அல்லது புரிந்து கொள்ள இயலாமலிருப்பதும் என்னவென்றால் தாஸ்யுக்கள் மற்றும் அவர்தம் பிரிவுகளின் உருவகத்தை. சரி, தாஸ்யுக்கள் யார்?

ரிக் வேதம் 1/33/1-10 ஐக் காண்கையில் நமக்குத் தெளிவாகப் புரிவது என்னவென்றால் இந்திரன் அபகரிப்பதாய் சொல்லப்படும் செல்வம் “ஞானம் அல்லது அறிவு” என்பதாம்.

இந்த ரிக் வேத வரிகள் “கவம் கேதம் பரம் அவர்ஜதே நா” என்று முடிகிறது. அதாவது ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானம் என்பதாகும். அந்த முழு வாக்கியத்தின் அர்த்தமாவது “வாருங்கள், நாம் இந்திரனிடம் பசுக்களைக் கேட்போம். அவனே இந்த எண்ணத்தை நம்மில் அதிகரிக்கிறான். நமக்காக ஒளிவீசக்கூடிய பசுக்களின் மிகவுயர்ந்த ஞானத்தை நமக்குத் தருகிறான்” என்று பொருள் படும்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம். யக்ஞங்கள், ஹோமங்கள் முதலியனவற்றை செய்பவர்களை யஜ்யு என்றும் இவை யாருக்காக அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவர்கள் யஜதா என்றும் சொல்வர். ஆனால் தஸ்யுக்களின் கொள்கை யஜ்யு, சுக்ரதுக்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. தஸ்யுக்களை அயஜ்யு (யஜ்யுவிற்கு எதிர்மாறான) என்றும் சொல்வர். அஜித் என்றால் அ+ஜித், அதாவது ஜெயிக்க முடியாத என்ற பொருள் படுவது போல. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஒரு அயஜ்யு சுக்ரதுக்களை (தெய்வீக சப்தத்தைப் உணர்ந்து பாடுபவர்கள் என்று ஒருவாறாகப் பொருள் கொள்ளலாம்) முற்றிலும் வெறுப்பவர். அவர்தம் இத்தகைய குணம் ப்ரம்ஹத்விஷ் என்றழைக்கப்படுகிறது. அதாவது பரமாத்மாவைப் பற்றிய எண்ணமில்லாதவன் என்று பொருள். த்வேஷம் என்பது த்விஷ் என்ற பதத்திலிருந்து உருவானது.

முக்கியமாக, அயஜ்யு ஓர் அனாசன் (வாய் என்பதில்லாதவன்) என்றும் அமான்யமன (மனம், புத்தி போன்றவைகளில்லாத) என்றும் வழங்கப்படுகிறார். வேதம் முழுமைக்கும் தஸ்யுக்கள் பசுக்களை (நாம் மாடு என்றழைக்கும் பசுவைக் குறிப்பதல்ல, அறிவை ஞானத்தைக் குறிப்பது) கைப்பற்றியிருப்பதாயும் இவைகளை மனிதர்கள் இந்திரனின் உதவியுடன் கைக்கொள்வதாயும் வருகிறது. இன்னோரிடத்தில் பாணிகள் (தஸ்யுக்களில் ஒரு பிரிவு) இப்பசுக்களைத் திருடி ஒரு குகையில் வைத்து விடுவதாயும் இந்திரன் என்ற ஞானத்தினால் இவ்வொளி வீசும் பசுக்கள் மீட்கப்படுவதாயும் வருகிறது. ரிக் வேதம் 6/51/14 இந்திரனிடம் பாணிக்களை அழிக்குமாறும் அவர்களை ஓநாய்களுக்கும் ஒப்பிடுகிறது.

இந்திரனானவன் இந்திய ஆய்வாளர்கள் கற்பனையில் தஸ்யுக்களை அழித்து இன்னும் என்னென்னவற்றை வென்றான் என்று பார்க்கலாம்.

ரிக் வேதம் 3/34/7-10

7 வீரர்களின் இறைவன், மக்களை ஆளும் இந்திரன் கடவுளர்களுக்கு வலிமையினாலும் போரினாலும் விடுதலையளித்தான். ஞானமடைந்தவர்கள் விவாஸ்வனின் இருப்பிடத்தில் அவனின் இத்தீரச்செயல்களைப் பாடிப் புகழ்வர்.

8 அற்புதமான, வெற்றியாளன், வெற்றியைத் தருபவன், ஒளியையும் பரம்பொருள் போன்ற தண்ணீரை வென்றவன், இப்பரந்த பூமியையும் சுவர்க்கத்தையும் வென்றவன் – இந்திரன் அவனைப் பக்தியில் காதலுற்றோர் புகழ்வர்.

9 சூரியனையும் குதிரைகளையும் தன்னகத்தே கொண்டவன், பலருக்கும் உணவூட்டும் பசுவை வென்றான். தங்கப் புதையலை வென்றான்; தஸ்யுக்களைத் தகர்த்தான்; ஆரியர்களின் நிறங்களைக் காத்தான்.

10 தாவரங்களையும் பகலையும் அவன் கவர்ந்தான்; காட்டிலுள்ள மரங்களையும் காற்றின் நடுப்பகுதியையும் வென்றான். இப்படிப் பல…

தஸ்யுக்கள் மனிதர்களாயும், ஆரியரில்லாதவர்களாயும் இருப்பார்களேயானால், இந்திரன் எதற்காக பகலையும் காற்றின் நடுப்பகுதியையும் சாதாரண மனிதர்களிடத்திலிருந்து கவர வேண்டும்?

தஸ்யுக்களைப் பற்றி ரிக் வேதத்தில் தொடர்கிறது. இந்திரன் அவர்களை சுவர்க்கத்திலிருந்தும் பூமியிலிருந்தும் தன் வஜ்ராயுதத்தால் துரத்தியடிக்கிறான். அவன் பராக்கிரமம் அதிகரிக்க அதிகரிக்க தஸ்யுக்களால் அவனறியாமல் எங்கும் ஓடி ஒளிய முடியாமல் போகிறது. இந்திரன் சூரியனை மீட்க, அவன் உதயமாகி ஒளிபொருந்திய பசுக்களை அடைத்து வைத்திருந்த குகையை ஒளிமிக்கதாக்குகிறான்.

மேற்கூறியவற்றில் தஸ்யுக்கள் இந்திரனால் அழிக்கப்பட்ட திராவிடர்கள் என்ற புளுகு மூட்டைக்கு நேரெதிராக இருப்பதோடல்லாமல் முற்றிலும் வேறுபட்டதாய் இருக்கிறது.

ஏனெனில் திராவிடர்கள் பேச முடிபவர்கள், புத்திசாலிகள் மற்றும் அவர்களுக்கு மூக்கு இருக்கிறது

சங்க கால இலக்கியங்களில் இருக்கும் சான்றுகள்

வாருங்கள், நாம் இனி தமிழ்நாட்டிற்குச் சென்று தமிழர் என்பவர் ஆரியர் என்பவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவரா என்றும் ஆரியர்களால் அவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளானவர்களா என்றும் பார்க்கலாம்.

சங்க கால இலக்கியம் என்பது மிக மிக விசாலமானதாகையால் ஒரு சில முக்கியமான தொகுப்புகளிருந்து திராவிடர்கள் எதை, யாரை வணங்கினார்கள் என்று பார்க்கலாம். சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி (மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை (வனம் மற்றும் வனம் சார்ந்த), மருதம் (வயல் மற்றும் வயல் சார்ந்த) நெய்தல் (கடல் மற்றும் கடல் சார்ந்த) மற்றும் பாலை (காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்) எனப் பிரிப்பதை நாம் அறிவோம்.

தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை:

முல்லை – திருமால் (விஷ்ணு)

குறிஞ்சி – முருகன் (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்)

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை (சக்தி)

மற்றொரு முக்கிய சங்க இலக்கியமான புறநானூறு சிவபெருமான் திரிபுரமெரித்ததைச் சொல்கிறது. இதில் சிவபிரான் மஹா மேரு மலையை வில்லாகத் தன் கையிலெடுத்ததையும் ஒரே அம்பினால் முப்புரங்களையும் தீக்கரையாக்கியதையும் சொல்கிறது. புறநானூற்றிலும் அகநானூற்றிலும் சிவகுமாரன் கந்தனாகிய குமரக்கடவுள் நன்கு அடிக்கடி காணக்கிடைக்கிறார்.

இவை நம்மை வேதங்களின் அக்னி, கார்த்திகேயனுடன் நன்கு இணைக்கிறது. இதில் இன்னும் சிலர் சிவபெருமானை திராவிடக் கடவுளாக மட்டும் காட்ட விழைகின்றனர். நல்லவேளை “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற முழுப் பதம் நமக்குத் தெரியும். இதில் வேதங்களில் சொல்லப்படும் ருத்ரரை சிவனாகப் பாவிப்பதுமுண்டு.

வேதங்களில் ரிக் வேததிலோ அல்லது யஜுர் வேதத்தில் ருத்ரம்/சமகத்திலோ நன்கு நோக்கினோமானால், ருத்ரரின் ஒரு சில பொதுவான குணங்களை எளிதாகக் காணலாம். இதில் சிவன் என்பவர் ருத்ரர்களின் ஒரு அம்சமே என்பது ருத்ரம் / சமகத்தில் சொல்லியிருப்பது. இதில் ருத்ரர் என்பது சிவன் என்பதாய் மாற்றமடைந்தாலும், வேதங்களில் சொல்லியிருக்கக் கூடிய சிவன் / ருத்ரனும் பெரிய புராணத்தில் கூறியிருக்கும் சிவனும் ஒன்றே.

திருவண்ணாமலை, சிதம்பரம் இவற்றில் தேவாரம் ஓதுவதோடு ருத்ரம் / சமகத்தையும் ஓதுவார்கள், தமிழரின் சிவனும் வேத புராணங்களில் சொல்லப்படும் சிவனும் ஒன்றே என்பதை இது நமக்குக் காட்டுகிறது.

அனைத்திற்கும் மேலாக, யஜுர் வேதத்திலிருக்கும் தைத்ரிய சம்ஹிதை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் இன்றும் வாழும் ஒரு மரபாகும்.

முடிவாக…

இதன் மூலம் ரிக் வேதம், சங்க கால தமிழிலக்கியங்கள் இவற்றில் மிகச்சில குறிப்புக்களைக் கொண்டே ஆரிய ஆதிக்கம் என்ற புரட்டு எத்துணை நகைப்புக்குரியது என்பது தெரிகிறது. இதன் மூலம் இத்திருநாடு அதன் சொந்தக் குடிமக்களாம் வேதக் குடும்பங்கள் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பொன்னாடு என்பதும் நன்கு தெரிகிறது.

மொழி, தோல் நிறம், அந்தந்த இடங்களின் கலாச்சார வேறுபாடு இவற்றைக் கொண்டு இந்தப் பிரிவினை விளையாட்டு 150 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி நடந்ததோ அதே போல இன்றும் நடைபெறுகிறது.

மறுபடியும் சொல்கிறோம், இத்திருநாடு வேத தர்மத்தைப் பின்பற்றும் அதே சொந்தக் குடிமக்களால் நிரம்பியிருந்தது, நிரம்பியிருக்கிறது என்பது திண்ணம்.

பி.கு: தமிழகத்தின் இரு கண்களாகிய சைவமும் வைணவமும் நமக்களித்த அருபெரும் சைவர்கள், வைணவர்களின் மூலம் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்களை நாம் இதில் தொடவேயில்லை. அதைப் பார்த்தாலே வேத தர்மம் முழுதும் தழைத்தோங்கிய நாடு இது என்பதும் ஆரிய திராவிடப் பிரிவு என்னும் கட்டுக்கதை ஒரு மதுபானமருந்திய மனத்திலிருந்து தோன்றிய ஒரு கற்பனை என்பதும் தெரிய வரும்.

பி.கு1: மேலும், வேதங்களில் சொல்லப்பட்டிருப்பவை உண்மை, உண்மை என்று ஆணித்தரமாக நிரூபணமாகி வரும் இந்நாட்களில் நாம் அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும் இவ்வுண்மைகளைப் பார்க்க உதவிய அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறோம். எங்களுக்கு யாரிடமும் பொய் சொல்லத் தேவையிருக்கவில்லை. எங்கள் முன்னோர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள். பொய்

No comments:

Post a Comment