Monday, February 11, 2013

நிழல் தீவிரவாதிகள்

அடுத்தவரை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள் தீவிரவாதிகள் என்றால் அந்த தீவிரவாதிகளுக்கு துனைபோகும் அல்லது ஆதரவு தரும் நபர்களை என்ன வாதிகள் என்று அழைப்பது ?

தீவிரவாதிகளாவது தங்கள் செயலை வெளிப்படையாக செய்து பிடிபட்டால் சிறை தண்டனையும் மரண தண்டனையும் பெறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அமைதியாய் ஆதரவு தரும் நிழல் தீவிரவாதிகளுக்கு என்ன கிடைக்கிறது.

உதாரணத்திற்கு முகப்புத்தகத்தில், அப்சல் குரு என்ற கேடு கெட்ட இழிச்செயலை புரிந்த ஒரு தீவிரவாதிக்கு, பல நிழல் தீவிரவாதிகள் ஆதரவு தருகிறார்கள். அவன் நல்லவனாம், வல்லவனாம், படித்தவனாம், பன்புள்ளவனாம்.

கருத்து சுதந்திரத்தை கேடயமாக பயன்படுத்தி கொண்டு, ஜனநாயக நாடுகளில் இந்த நிழல் தீவிரவாதிகள் கொடூரமான‌ கொலைகாரர்களை தியாகிகள் போல சித்தரிக்கிறார்கள். ஒரு தீவிரவாதி பிடிபட்டு போனால் அவன் சுயசரிதையை எல்லாம் எழுதி அவனை பெரிய மகானை போல் சித்தரிக்கிறார்கள். தீவிர விசாரனைக்கு பிறகு 2006 ம் ஆண்டே, உச்ச நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு என்ற‌ கொடுங்கோலனுக்கு அந்த தண்டனையை தருவதற்கு 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது இந்த மத்திய அரசாங்கம். தண்டனை வழங்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் இத்தனை தயக்கம் காட்டும் அளவிற்கு பின்புலமாய் செயல்படுகிறார்கள் இந்த நிழல் தீவிரவாதிகள்.

இந்த நிழல் தீவிரவாதிகள் யார் ? பெரும்பாலும் இவர்கள் சாதாரண மக்களின் சாயலிலேயே இருக்கிறார்கள். வேலைக்கு செல்பவராய், சுய தொழில் புரிபவராய், மாணவர்களாய் என நம்மை போலவே இவர்கள் இருந்தாலும், மதவெறி எனும் நஞ்சு இவர்கள் அடிமனதில் ஆழ பதிந்துள்ளது. தன் மதத்தை சார்ந்தவன் எத்தனை ஈனச் செயல் புரிந்திருந்தாலும், அதை ஏதாவது காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவது, நிழல் தீவிரவாதிகளின் சுபாவம். இந்த நிழல் தீவிரவாதிகள் இன்னும் ஒரு படி மேலே போய், போராடவும் செய்கிறார்கள். அப்சல் குருவின் தூக்கிற்கு போராட்டம் நடத்த போவதாய் சில இயக்கங்கள் அறிவித்துள்ளது ஒரு சிறந்த உதாரணம்.

ஜனநாயகத்தில் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலையை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஒரு ஜனநாயகம் நமக்கு தேவையா ? ஒரு அரசாங்கத்தை தன் கடமையை செய்ய கூட தடுக்கும் அளவிற்கு இவர்கள் அச்சுறுத்துகிறார்கள் என்றால் சாமானியர்களின் கதி என்ன ?

தீவிரவாதிகள் இரயிலை கொளுத்தினால் நாம் பேசாமல் இருக்க வேண்டும், கோவிலை தரைமட்டமாக்கினால் அமைதி காக்க வேண்டும், அமேரிக்காவில் முஹம்மது நபியை இழிவு படுத்தினால் இங்கே வாகனங்கள் கொளுத்தப்படும் நாம் மௌனம் காக்க வேண்டும், பர்மாவில் முஸ்லீம்களுக்கு ஏதாவது என்றால் இங்கே வடக்கிழக்கு மக்கள் அடித்து விரட்டபடுகின்றனர், நாம் வேடிக்கை பார்க்க வேண்டும். போரில் இறந்த நம் ஜவான்களின் நினைவிடம் பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்படுகிறது. திரைப்படம் எடுப்பவர்கள் இவர்களை கேட்டுதான் எல்லாம் செய்யவேண்டும் என்று ஆர்பாட்டம். இப்படி எதற்கெடுத்தாலும் வெறியோடு தரிகெட்டு திரிகின்றனர் இந்த நிழல் தீவிரவாதிகள்.

தீவிரவாத செயல்களை புரிபவர்கள்தான் தீவிரவாதிகள் என்றில்லை, மனதளவில் அத்தகைய எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, அத்தகைய செயல்களை புரிபவர்களுக்கு பக்கபலமாய் இருக்கும் இந்த நிழல் தீவிரவாதிகளும், தீவிரவாதிகள் தான். இவர்களை அரசாங்கம் ஓட்டு வங்கியாக பார்க்காமல் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் நம் நாடு கூடிய விரைவில் பாகிஸ்தானை போல உள்நாட்டு போரிலேயே காலத்தை கழிக்க வேண்டி வரும்

No comments:

Post a Comment