Friday, February 22, 2013


ஐதராபாத் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைவரிசை- சாவு எண்ணிக்கை 17
ஐதராபாத் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைவரிசை-
சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்வு
ஐதராபாத், பிப். 22-

ஐதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியில் நேற்று இரவு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்சுக்நகர் பகுதியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் என இருப்பதால் எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படும். நேற்று இரவு 7.01 மணிக்கு இங்குள்ள பஸ் நிலையத்தில் முதலாவதாக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் மக்கள் சிதறி ஓடினார்கள். பலர் குண்டு வெடிப்பில் சிக்கி சின்னா பின்னமாகி கிடந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு சக்தி வாய்ந்த குண்டு கோனார்க் தியேட்டர் அருகில் ஆனந்த் டிபன் சென்டர் முன் வெடித்தது. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் ஆனது. மக்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதையும் போலீசார் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்த இரு சம்பவத்திலும் 14 பேர் உடல் சிதறி பலியானார்கள். 124 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஒரு பெண், 2 ஆண் உள்பட மேலும் 3 பேர் பலியானார்கள். சைக்கிளில் வைக்கப்பட்ட டிபன்பாக்ஸ் குண்டு மூலம் இந்த நாசவேலை நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. குண்டு வெடித்த இடத்தில் சைக்கிளுடன் டிபன் பாக்ஸ் நொறுங்கி கிடந்தது. குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடத்த டெல்லி, சென்னையில் இருந்து தேசிய பாதுகாப்பு படையினர் அனுப் பப்பட்டனர். தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் விரைந்து வந்தனர். அவர்கள் குண்டு வெடித்த இடத்தில் கிடந்த வெடிகுண்டு சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

பி.ஐ.என். ரசாயனம் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலந்து இந்த வெடிகுண்டு தயாரிக் கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஏராளமான ஆணி களும் வெடிகுண்டில் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நாசவேலையில் ஈடுபட்டது யார் என்பதை கண்டு பிடிக்கும் பணியில புலனாய்வு ஏஜென்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப், பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதிகள் பழிவாங்க திட்டமிட்டு இருந்தனர். சில அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தன. மேலும் உளவு அமைப்புகளும், தீவிரவாதிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று எச்சரித்து இருந்தது. இதுபற்றி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அனுப்பி உஷார்படுத்தியது.

தீவிரவாதிகள் டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. அதன்படி ஐதராபாத்தில் குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர். ஐதராபாத் நகரம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதற்கு முன் ஐதராபாத் தில் 4 முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. 4 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி மக்பூல் பிடிபட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் ஐதராபாத்தில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், இதற்காக 3 இடங்களை தேர்வு செய்ததாகவும் தெரிவித்து இருந்தான்.

தில்சுக் நகரும் அதில் இடம் பெற்று இருந்தது. தீவிரவாதி கைதானதால் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் கருதி இருந்தனர். ஆனால் கசாப், அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை பயன்படுத்தி உள்ளூர் தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐதராபாத் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள். இதற்காக மாநில அரசு தனிப்படை அமைத்துள்ளது.

தாக்குதல் பின்னணி பற்றி தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளது. குண்டு வெடிப்பு பற்றி தகவல் கிடைத்ததும் மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்துறை அமைச்சகத் துக்கு உத்தரவிட்டார்.

ஆந்திர முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டியுடனும் டெலிபோனில் பேசி நிலைமைகளை கேட்டறிந்தார். இன்று காலை ஷிண்டே டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் விரைந்தார். நேராக குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரிக்கும் சென்று காயம் அடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

இந்த குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்புக்கு திட்ட வட்டமான காரணம் தெரிய வில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதை அனைத்து மாநிலங்களுடன் பகிர்ந்து கொண்டோம். தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்படும

No comments:

Post a Comment