Monday, February 25, 2013

இன்று இவர் நினைவு தினம்!!

தேசத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே இழந்த தியாகத் திரு உரு!

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் அடைக்கப் பெற்று பல சித்திரவதைக்கு ஆளானவர் !

தன் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கரையே அதே அந்தமான் சிறையில் இருந்த போதும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமளவு தனி அறையில் அடக்கப் ப்பெற்று சித்தரவதைக்கு ஆளானவர்.

வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருந்த போதும் எழுதப் படிக்க எதுவும் தரப்பாடமல் மறுக்கப் பட்ட போதும் சிறை சுவற்றில் எழுதி எழுதி வரிகளை மனப்பாடம் செய்தவர்.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரைப் போல் அங்கே தேங்காய் நார் உரித்து கை விரல்கள் வீங்கி ரத்தம் கொட்டப் புண்ணாகி உண்ணவும் முடியமல் கஷடப்பட்ட போதும் ‘என் தாய் நாட்டுக்காக என்னால் செய்ய முடிந்தது இவ்வளவுதான்’ என நினைத்தவர்.

“MY TRANSPORTATION FOR LIFE" என்ற இவர் புத்தகம் சிறைக் கொடுமைகளை சித்தரிக்கும்.
படிக்கும்போதே மனது பதைபதைக்கும்.

நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து விடுதலை அடைந்து மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து தேசிய சிந்தனை எழுச்சியை வளர்ப்பதற்கு பாடுபட்டவர்.

சுதந்திரம் பெற்ற நாடு அரசியல் தந்திர சூழ்ச்சியால் சீரழுவதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் நொந்து உண்ணாமலேயே இருந்து உயிரை நீத்தவர்.

இவர்தான் சுதந்திர வீர சாவர்க்கர் !!
(6 photos)

No comments:

Post a Comment