Wednesday, February 20, 2013

வருமா நவோதயா? வட மாநிலத்தவர்கள், தமிழகத்திற்கு, புகலிடம் தேடி வந்தபடியே உள்ளனர். அவர்கள் கூச்சமின்றி, பயமின்றி அனைத்துப் பணிகளையும் திறம்பட செய்வதால், அனைத்து துறைகளிலும், இங்கு, அவர்களுக்கு வரவேற்பு உள்ளது. இந்தி தெரியாவிட்டால் இனி, தமிழகத்தில் உள்ளவர்கள், எந்த தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. போஜ்பூரி, ஒரியா போன்ற அனைத்து மொழிகளுக்கும், அடிப்படை இந்தி. இந்தி தெரிந்தால் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் குணநலன், திறன் அறிந்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. திராவிடக் கட்சிகள், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருக்கா விட்டால், தமிழக மக்கள், ஓரளவாவது இந்தி மொழி பயின்று இருப்பர். போனது போகட்டும்... இனியாவது, இந்தியை ஒரு பாடமொழியாக கற்பிக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். நவோதயா பள்ளிகளுக்காக, மத்திய அரசு, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாம். இதைப் பயன்படுத்தி, மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைத் துவக்க, தமிழக அரசு ஆயத்தம் செய்ய வேண்டும்.

மாணவர்களின் நிலை என்ன...
ந.சந்தோஷ், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நாட்டில் தற்போது, எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இது, இந்திய சமுதாயத்தையே பாதிக்கிறது. இதுகுறித்து, அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் மாணவர்கள். நம் கல்வி முறையில், வரலாற்றில் நடந்து முடிந்தவையே, பாடத்திட்டமாக வைக்கப்படுகின்றன. தற்போதைய சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகளை, அலசுவது கிடையாது. பின் எப்படி, சிறந்த குடிமகன்கள் எதிர்காலத்தில் உருவாவர்? நிறைய படித்த அறிவாளியாகத் திகழ்வரே தவிர, சிறந்த தேசபக்தனாக உருவாக மாட்டார்கள். விதிவிலக்காக, சில மாணவர்கள், நல்ல நாட்டு உணர்வு உடையவர்களாக உள்ளனர். அது, சரியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள், சமுதாயப் பிரச்னைகளைத் தெரிந்துக் கொள்வதே சிறந்தது.

No comments:

Post a Comment