Wednesday, February 13, 2013

‎!!!!!!!!!!!!!!!! 14 -2- 1998 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

14 -2- 2013 அன்று காம களியாட்ட தினத்தை ஊடகங்கள் தூக்கி நிறுத்தி வெளிச்சம் போட்டு காட்டும் அதே நேரத்தில், 1998 ல், 13 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டு, 58 பேர்களின் உயிரை வாங்கிய, 200 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த ஒரு கோர‌ சம்பவத்தை இந்த நாட்டு மக்கள் நினைவில் கொள்வார்களா தெரியவில்லை. எது நடந்தாலும் அதை ஒரு பத்து நாளுக்கு உணர்ச்சி பூர்வமாக பேசிவிட்டு, மறப்பதுதான் நம் பண்பாடாயிற்றே !!

எதற்காக இந்த குண்டுவெடிப்புகள் ? "செல்வராஜ்" என்ற ஒரு போக்குவரத்து போலிஸாரோடு இஸ்லாமிய ரவுடிகள் நடத்திய வாக்குவாதத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டது, அதன் பின் ஏற்பட்ட கலவரங்களும், தங்களின் பலத்தை காட்ட "அல் உம்மா" என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வைத்த குண்டுகள்தான் இத்தனை உயிர்சேதத்தை ஏற்படுத்தின.

ஏன் எதற்கு என்று தெரியாமல், உக்கடத்திலும், பெரிய கடை வீதியிலும், ஆர் எஸ் புரத்திலும், ஒப்பணக்கார வீதியிலும், சிவான‌ந்த காலனியிலும் அப்பாவி மக்கள் சதை துண்டுகளாய் சிதறி விழுந்தனர். 70 கிலோ வெடிமருந்தோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இறைவன் கருனையால் வெடிக்காமல் இருந்ததால் பல்லாயிர கணக்கான மக்கள் தப்பித்தனர்.

அப்பொழுது ஆண்டுக் கொண்டிருந்த தி.மு.க வின் மெத்தன போக்கே இத்தகைய சம்பவத்துக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. "குட்டி பாகிஸ்தான்" என்று அழைக்கப்படும், கோட்டைமேடு பகுதியில் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடிகளை நீக்கியது, சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அவர்களிடம் கூனிக் குறுகி நின்று, எதையுமே கண்டு கொள்ளாமல் விட்டது, ஆகியவைதான் மிக முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து ஜெலட்டின் குச்சிகள் இவர்களுக்கு வந்து சேர்ந்ததை உளவுத்துறை எப்படி கவனிக்காமல் இருந்தனர் என்பதும் இன்றும் புரியாத புதிர்தான்.

செழிப்பாக சென்று கொண்டிருந்த கோவை மாவட்டம் இந்த குண்டு வெடிப்பில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் மீண்ட பாடில்லை. இரவு 11-12 மணி வரை உயிரோட்டமாக இருந்த‌ நகரம் இந்த குண்டு வெடிப்புக்கு பிறகு 9 மணி ஆனாலே இருண்டு போகிறது. மத வேறுபாடு இன்றி அனைத்து வியாபாரிகளும் இந்த தீவிரவாதிகளால் இன்றுவரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஈடு செய்ய முடியாத அளவிற்கு, பல கோடி ரூபாய் நஷ்டம் வியாபாரிகளுக்கு ஏற்பட்டது.

அது சரி, இத்தனைக்கும் காரணமான இந்த கேடு கெட்ட தீவிரவாதிகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் ? 58 அப்பாவிகளை கொன்ற இவர்களில் ஒருவருக்கு கூட‌ தூக்கு தண்டனை கிடையாதா ? இத்தகைய கொலை பாதக செயலை புரிந்து, ஒரு மாவட்டத்தின் பொருளாதாரத்தையே அசைத்து போட்ட இந்த காலிகளுக்கு தூக்கு தண்டனை இல்லையென்றால் வேறு யாருக்கு அது கொடுக்கப் பட வேண்டும் ?

அவர்களை சொல்லி தவறில்லையே, அரசாங்கத்தை சொல்லியும் தவறில்லையே, "ஹார்ட் டேர்ம் மெமரி லாஸ்" என்கிற குறுகிய காலத்திற்கே ஞாபகம் கொள்ளும், நம்மை போன்ற மானங்கெட்ட, விழிப்புணர்வு இல்லாத, தட்டி கேட்க நாதி இல்லாத‌ மக்கள் இருக்கும் வரை இவை எல்லாம் நடக்கத்தானே செய்யும் ?

No comments:

Post a Comment