Saturday, February 2, 2013

NANGAL ENTRAL RATHTHAM NINGADA THAKKALI SATTINIYA சமீபத்தில், ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரசின் சுயபுராணக் கச்சேரி, பலத்த ஜால்ராக்களின் கரகோஷத்துடன் நடந்து முடிந்தது.இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் உட்பட, அனைத்து பிரமுகர்களும், "மதவாதம்' என்று, பா.ஜ.,வை சாடியுள்ளனர். நம் நாட்டில், பல மதங்கள் இருந்தாலும், இன்னும் ஒற்றுமையாக வாழ்வதால் தான், உலகளவில், இந்தியா, தனித்து தலை நிமிர்ந்து நிற்கிறது.முல்லா பாய் வீட்டுக் கல்யாணத்திற்கு, ஆல்பர்ட் ஆட்டோவில், நல்லமணி ஐயர் போய் வந்தார் என்பது, நம் நாட்டில் மட்டுமே நடக்கும் அதிசயம். நாட்டு நடப்பு, இப்படி அமைதியாகப் போய்க் கொண்டிருப்பது, காங்கிரசிற்கு பொறுக்கவில்லை போலும். வாய்க்கு வாய், "மதவாதம், மதச் சார்பின்மை' என்று, பிதற்றிக் கொண்டே இருக்கிறது.உள்துறை அமைச்சர், ஒரு படி மேலே சென்று, "காவி பயங்கரவாதம்' என்கிறார். எதிர்ப்பு கிளம்பியதும், "நான் அப்படிப் பேசவில்லை, இப்படி பேசவில்லை' என, அசடு வழிகிறார்.ஏன் இந்த வேண்டாத வேலை?ஒட்டு மொத்த இந்தியர்களில், 75 சதவீத பேர், இந்துக்களாக இருக்கும் போது, அவர்களின் ஓட்டு இல்லாமல், ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது, காங்கிரஸ் கட்சியே அறிந்திருக்கும் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் போது, மதவாதம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?இவர்கள் மதவாதம் என்று சொல்வதெல்லாம், இந்து மதத்திற்கு எதிராகத் தானே தவிர, வேறு எந்த மதங்களையும் குறிப்பிடவில்லை. தனியாக, எங்கும் நிற்கத் துணிவு இல்லாத கம்யூனிஸ்டுகளும், மதவாதம் என்று குறிப்பிடுவது, பா.ஜ.,வைத் தான்."அரசியல் காமெடி சூப்பர் ஸ்டார்' லாலு பிரசாத் யாதவ், பா.ஜ., எதைச் செய்தாலும் எதிர்ப்பாராம். இப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி, நாட்டுக்குத் தேவையா?பா.ஜ., என்பது, இந்து மதத்தைச் சார்ந்த ஒரு அரசியல் கட்சி தானே தவிர, மதவாதக் கட்சி அல்ல."ஒரு மனிதன் மதம் மாறுவது, அவனது சுதந்திரம்; ஆனால், அவனை மதம் மாற்ற முயற்சி செய்வது குற்றம். நாட்டில், எல்லாருக்கும் சம உரிமை வேண்டும். படித்த இளைஞர்களுக்கு, தகுதிக்கேற்ப வேலை வேண்டும்; இதில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர் என்று ஏன் பிரிக்க வேண்டும்?' என்பது தானே, பா.ஜ.,வின் கொள்கை.இதில், தவறு என்ன இருக்கிறது? இதை ஏன், காங்கிரஸ், மதவாதம் என, திரிக்கிறது? சோனியா கூட, தன் மகள் பிரியங்காவிற்கு, ராபர்ட் வதேரா என்ற கிறிஸ்தவரைத் தானே மணமுடித்து வைத்திருக்கிறார். இது மதவாதமாகாதா?

No comments:

Post a Comment