Wednesday, February 27, 2013

வேதம் படிக்க தாழ்ந்த ஜாதியினருக்கு உரிமையில்லை என்று ஏதாவது வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
-------------
யதேயதாம் வாசம் கல்யாணீமாவதானி ஜனேவ்ய:
ப்ரஹ்ம ராஜன்யாப்யாம் சூத்ராய சார்யாய ச ஸ்வாய சாரணாய (யஜøர் வேதம், மந்திர சாரிகை 26.2)
வேதத்தின் மீது எல்லோருக்கும் சம உரிமை உள்ளது.தாழ்ந்தவன் முதல் அனைவருக்கும் வேதத்தின்மீது உரிமை உள்ளது.வேதம் படிக்க தாழ்ந்த ஜாதியினருக்கு உரிமையில்லை என்று ஏதாவதுவேதத்தில் கூறப்பட்டுள்ளதா?அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா?புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் தான் கூறப்பட்டுள்ளது.ஸ்மிருதிகள்,புராணங்கள்,தந்திரங்கள் போன்றவை வேதத்துடன் ஒத்துப்போகாவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.வேதங்களே அத்தாட்சி.

மனிதன் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக சில புராணங்களில் சொல்லப்படுகிறது.ஆனால் வேதங்களோ சதாயுர்வை புருஷ: மனிதன் நூற்றாண்டுகளே வாழ்பவன் என்கின்றன.புராண கட்டுக்கதைகளை விட்டுவிடவேண்டும்.வேதங்களைப்படிக்காமல் புராணங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததே நமது மதத்தின் சீரழிவிற்கு காரணம்.

------சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment