Thursday, February 21, 2013

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்;றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம்இ இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள். 
இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னன் ஷாஜிபான்ஸ்லே ஆவார். 
இந்த வரிசையில் மன்னன் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளான். மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவனான சிவாஜி மராட்டியர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தான்;. இதனால்தான் வரலாற்று ஆசிரியர்கள் மகாராஷ்டிர நாட்டை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும் எனக் கூறுகின்றனர். மன்னன் சிவாஜி அரசியல் நடவடிக்கைiளில் மட்டுமின்றி சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும் வலுவான படையமைப்பினையும் கொண்டிருந்ததோடு சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினான்.

    சிவாஜி சிவநேர் கோட்டையில் ஷாஜிக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்(1630). அன்னையின் அரவணைப்பிலே இளமைப்பருவத்தினைக் கழித்தாலும் இவரது கல்வி முன்னேற்றத்திற்கு தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணன் பொறுப்பாயிருந்தான். அவருடைய மேற்பார்வையின் கீழ் ஒரு சீரிய இந்துவாக உருவாகிய சிவாஜி தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறினான.;;
     
     மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிர அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது. இவன் சமகாலத்தில் ஆங்கிலேயருக்கும் மொகாலயருக்கும் சவாலாக விளங்கினான். பொதுவாக மராட்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர். பலம்மிக்க பேரரசாகக் காணப்பட்ட மொகாலயர் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடாத்தி அவர்களது ஆட்சியினைப் பலவீனப்;படுத்தியிருந்தான். மற்றையது சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பரவல் கூடுதலாகக் காணப்பட்டது. அவர்கள் இந்தியாவினுள் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதனை விரும்பாத சிவாஜி ஆங்கிலேயரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினான்.

     இவன் தைரியசாலியாகவும் துணிவு நிரம்பிய வீரனாகவும் விளங்கினான். அயல் நாட்டுக் கொடுங்கோண்மை என்று கருதியவற்றை ஒழித்துக்கட்டித் தம் நாட்டின் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் கொண்டவனாய் வாழ்ந்தான். இளமைக் காலப்பயிற்சியும் சூழ்நிலையும் இணைந்து இளமை பொருந்திய மராட்டிய வீரனான அவரிடத்தில் ஒரு சுதந்திர இராச்சியத்தை நிறுவும் பேரார்வ உணர்ச்சியை தோன்றிவித்தது.   

     சிவாஜி தன்னுடைய ஆட்சிப் பரப்பினை விஸ்தரிப்பதற்காகப் பல போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்;. அந்தவகையில் பிஜாப்பூர் சுல்தான் அடில்சாவின் தேர்னாக்கோட்டை (1646) இபரந்தா ;கோட்டை(1647), ஜாவளி (1656) போன்ற இடங்களையும் கைப்பற்றினான். அங்கே பிரதாப்கார் என்ற கோட்டையையும் தன் வழிபாட்டுக் கடவுளான பவானிக்கு ஒரு கோயிலையும் கட்டினான். மேலும் பூனா இசதாரா மாவட்டங்களுடன் பல புதிய இடங்களையும் கைப்பற்றினான்(1659). சூரத்தை கொள்ளையடித்து பெரும் பொருளீட்டினான்(1664). கோவாவின் ஒரு பகுதியை தன்னாட்சியுடன் இணைத்துக்கொண்டான்(1664). இவ்வாறு 1670இல் மொகாலயரின் பல பிரதேசங்களை தனது ஆட்சிப் பரப்புடன் இணைத்துக் கொண்ட சிவாஜியின் ஆட்சிப்பரப்பு வடக்கே ராம் நகரிலிருந்து தெற்கே கார்வார் வரையிலும் கிழக்கில் பக்லானாவிலிருந்து மேற்கில் சதாராஇ கோலாலம்பூர் முதலிய மாவட்டங்களிலும் தனது ஆட்சிப்பரப்பினை விஸ்தரித்திருந்தான்.               இருப்பினும் அதனைத்; தெளிவாகக் கூறமுடியாது. ஏனெனில் தொடர்ச்சியான போர்         நடவடிக்கைகளினால் ஆட்சிப்பரப்பு அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்தது.
     
   எனவே 1674ஆம் ஆண்டு யூன் ஆறாம் திகதி தன்னை ஒரு மகாராஜாவாக மாற்றிக் கொள்ள விரும்பிய சிவாஜி சத்ரபதி மகாராஜா என்ற பட்டத்துடன் முடிசூடிக் கொண்டான். இவன் அரசியல் உலகில் துணிச்சலோடு கண்ட பல வெற்றிகளுடன் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தினான். 
    இவனுடைய ஆட்சியில் மன்னனே முழு அதிகாரம் படைத்தவனாகக் காணப்பட்டான். மன்னருக்கு அறிவுரை கூற எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு இருந்தது. அதனை அஷ்டப்பிரதான் என அழைத்தனர். அத்தோடு அரசை மூன்று மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அரச பிரதிநிதியின் தலைமையின்கீழ் ஒப்படைத்தான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க எட்டு அதிகாரிகளைக் கொண்ட குழு இருந்தது. 

  மேலும் ஆட்சி வசதிக்காகவும் வரிவசூல் நடவடிக்கைகளுக்காகவும் ஒவ்வொரு மாகாணத்தையும் பல பர்கானாக்களாகவும் தரப்புக்களாகவும் பிரித்திருந்தான். ஆட்சியின் கடைசிப் பிரிவு கிராமமாகும். இதனை மேற்பார்வையிட படேல் என்ற அதிகாரி இருந்தார். இங்கு வரிவசூல் நடவடிக்கையானது நிலங்களைப்பிரித்து அவற்றின் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட்டது. வரியை காசாகவேனும் பொருளாகவேனும் பெற்றுக் கொண்டான். குடியானவர்களின் மொத்த நிலவருவாயில் 2ஃ5பங்கு அரசிற்குச் சார்ந்ததாகும். குடிமக்களிடமிருந்து நிலவரி அரசின் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்பட்டது. இதுதவிர்ந்த நிலவரி சவுத் சர்தேஸ்முகி எனும் இருவரிகள் வசூலிக்கப்பட்டன. இவை சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானவையாக காணப்பட்டது என வரலாற்றாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தோடு மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே வரிநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினாலும் இது தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் எழுகின்றன.

         சிவாஜியினுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டது. மராட்டியர் இயல்பாகவே வீரம் பொருந்தியவர்களாகக் காணப்பட்டனர். எப்போதும் தயார் நிலையில் இருக்கக்கூடிய நிலையான படையமைப்பு காணப்பட்டது. இது தவிர்ந்த குதிரைப்படை, காலாட்படை போன்றனவும் இராணுவத்தின் சிறந்த கூறுகளாக் காணப்பட்டது. அத்தோடு இவர்கள் கொரில்லாப் போர் முறையிலும் சிறப்புப் பெற்றிருந்தனர். போர் வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். என்று மன்னன் கட்டளையிட்டான். சபாஸத்பகர் என்ற நுலின்படி சிவாஜி சுமார் 1260 யானைகள் கொண்ட படை ஒன்றையும் வைத்திருந்ததாக அறிய முடிகிறது. எனவே இவனுடைய காலத்தில் வலுவான படையமைப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் இவனுடைய காலத்திற் மக்களிடையே சிறப்பான ஒழுக்கக் கட்டுப்பாடுகள்; விதிக்கப்பட்டிருந்த்து. குறிப்பாக இராணுவ வீரர்கள் எந்த அடிமைப் பெண்ணையோ கூத்தாடும் மகளையோ படையுடன் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பது இறுக்கமான கட்டுப்பாடாகும். அக்கட்டளையை மீறுவோரின் தலை வெட்டப்பட்டது. பசுக்களைக் கவரக்கூடாது ஆனால் எருதுகளைப் போக்கவரத்துக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிராமணர்களைத் துன்புறுத்தக்கூடாது. எந்தப்படைவீரனும் போர்ச் சமயத்தில் ஒழங்குதவறி நடந்து கௌ;ளக்கூடாது. போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

   சிறந்த அரசனாகவும் நிர்வாகியாகவும் விளங்கிய சிவாஜி 1680களில் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவன் சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய போதும் இவரைப் பற்றி விமர்சன ரீதியான கருத்துக்களும் வரலாற்று ஆசிரியர்களிடையே பேசப்படுகின்றது. அந்தவகையில் இவர் மக்களின் கல்வி நலனுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் வழிகாட்டவில்லை என்றும் இதனால் பொதுமக்களின் அறிவும் ஆற்றலும் வளரவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே மக்கள் மன்னனுடைய உயர்ச்சிகளைப் புரிந்து கொண்டு தம்மிடையே வேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையுடன் கூடிய இராச்சியத்தை உருவாக்கத் தவறிவிட்டனர் எனக் குறிப்பிடுகின்றனர்..

   மேலும் கிருஷ்ணதேவராயர், இராஜேந்திரசோழன், அக்பர், ஒளரங்கசீவ், போன்ற மாபெரும் வீரர்களோடு ஒப்பிட்டால் சிவாஜியை இரண்டாம்தரப் போர்வீரர் என்றே கூறவேண்டும். ஏனெனில் பகைவன் வலிபடைத்திருந்தால் தந்திரத்தால் சாதித்துக் கொள்வதும் இன்றேல் வெளிப்படையாகப் போருக்குச் செல்வதும் இவருடைய இயல்பாகும். உதாரணமாக ஷாயிஸ்ட்கானின் முகாமைத் தாக்கியமை, ஆப்ஸங்கானைக் கொன்றமை, ஆக்ராவிலிருந்து தப்பியது, சூரத்தை சூறையடித்தமை போன்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்;.

    சிவாஜி பற்றி கிராண்ட்டப்பு என்பவர் கூறுகையிலே, சிவாஜி புதிதாகச் சேர்த்த இராச்சியப் பகுதிகளும் செல்வங்களும் மொகாலயருக்கு அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் நடந்து காட்டிய முன்மாதிரி நிலையும் அவர் புகுத்திய பழக்கபழக்கங்களும் மராட்டிய மக்களில் பெரும்பாலானோர் உள்ளத்தில் அவர் உருவாக்கிய உணர்ச்சியும்தான் மொகாலயருக்குப் பேரிடியாகத் தோன்றியது எனக் குறிப்பிடுகின்றனர். அத்தோடு இவருடைய இராணுவ நிருவாகம் சிறப்பு வாய்ந்தது. என இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    எது எவ்வாறிருந்த போதிலும் மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும். எனவேதான் சத்திரபதி மகாராஜா எனப் போற்றப்படும் மன்னன் சிவாஜி தென்னிந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தள்ளான் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாது.
‎17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்;றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம்இ இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள்.

எது எவ்வாறிருந்த போதிலும் மராட்டிய மக்களை ஒன்றுபடுத்தி மராட்டிய பேரரசினை உருவாக்கிய பெருமை மன்னன் சிவாஜிக்கே உரியதாகும். எனவேதான் சத்திரபதி மகாராஜா எனப் போற்றப்படும் மன்னன் சிவாஜி தென்னிந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பிடித்தள்ளான் என்பதில் மாற்றுக்கருத்தக்கள் கிடையாத

No comments:

Post a Comment