Thursday, February 21, 2013

ஐ ஏ எஸ் பரிட்சை, ஐ ஏ எம் பரிட்சை, சி.ஏ, ஐ ஐ டி, போன்ற கடிணமான பரிட்சைகளை கேள்விப் பட்டிருப்பீர். ஆனால் இறைவன் பிறக்கும் போது நமக்கெல்லாம் வைப்பதாக இவர்கள் சொல்லும் பரிட்சைதான் மிக கடிணமானது.

பூர்வ ஜண்மத்தை குறித்த என் பதிவை படித்துவிட்டு, ஒரு கிறிஸ்துவர் சொல்கிறார். "எந்த குழந்தைவும் பிறக்கும் பொது அது நல்ல குழந்தை தான் என்று.

ஐயா, நீங்கள் சொல்வது எப்படி சரியாகும் ? எய்ட்ஸ் மற்றும் புற்று நோயுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், ஆரோக்கியமான அழகான செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த குழந்தையும் ஒன்றாகி விடுமா ? இறைவன் கொடுத்த அறிவை கொஞ்சமாவது பயன்படுத்துங்கள்.

அதன் பிறகு, இது இறைவனின் சித்தம், எல்லாம் அவன் நடத்தும் நாடகம், அவன் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று மனநோயாளிகளைப் போல் பேசாதீர்கள்

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை //

அடுத்து ஒரு அரேபிய அடிமையின் விளக்கம். எல்லா விரல்களும் ஒன்றாக இருப்பதில்லையே ? குழந்தைகள் பல விதமாய் பிறப்பது பாரபட்சம் இல்லையாம், அது இறைவன் நமக்கு வைக்கும் பரிட்சையாம்.

விரல்களின் உயரங்கள் எல்லாம் ஒன்றாக இருப்பதால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் ஒரு விரலில் மட்டும் ஏதாவது கோளாறு வந்து மற்றதில் வரவில்லை என்றால் நிச்சயம் ஏதோ காரணம் இருக்கிறது.

அல்லா பரிட்சிப்பதற்காக சிலரை செல்வத்துடனும், சிலரை ஏழையாகவும் படைக்கிறாராம். இதைதான் நான் முதலிலேயே சொன்னேன், மனநோயாளிகள் போல் இந்த நாடகம், பரிட்சை என்ற கட்டுக்கதைகள் எல்லாம் வேண்டாம் என்று.
ஒன்றும் செய்யாத ஒரு குழந்தையை குஷ்ட ரோகத்தில் பிறக்க வைத்து மற்றதை நன்றாக படைக்கும் அவன் இறைவனா அல்லது அரக்கனா ? அப்படி பாரபட்சம் செய்து விளையாடும் அந்த அரக்கனை வணங்குவது எத்தனை முட்டாள்தனம் ?
அவன் பரிட்சை செய்து பார்த்து தெரிந்து கொள்வ‌தற்கு நாம் என்ன சோதனைகூடத்தில் இருக்கும் எலிகளா ? அதை தெரியாமல் பரிட்சை செய்து பார்க்கும் அவன் என்ன அடி முட்டாளா ? தயவுசெய்து அரேபிய கட்டுக் கதைகளை தள்ளி வைத்து விட்டு உங்கள் அறிவை கொண்டு பதில் சொல்லுங்கள்.

மனநோயாளிகளே, ஒரு குழந்தை மோசமான நிலமையில் பிறந்தால் அது இறைவனின் பரிட்சை என்கிறீர்களே.
அப்போது ஏன் வறுமையின் பெயரில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள், வறுமை என்பது இறைவனின் பரிட்சை என்று பேசாமல் இருக்கலாம் அல்லவா ?

ஏன் மருத்துவமனைக்கு நோய்வாய் பட்ட குழந்தைகளை எடுத்து செல்கிறீர்கள் ? ஏன் குறை ப்ரசவத்தில் சாக இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவமனை செல்கிறீர்கள் ? இறைவனின் பரிட்சைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்களா ?

உங்கள் கூற்றுபடி இறைவன் ஒரு பரிட்சை நடத்துகிறான் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் அல்லவா ? அந்த அர்த்தத்தை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள் ?

இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை.

No comments:

Post a Comment