Tuesday, January 29, 2013

unmai velladum நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர் என்று பா.ஜ. வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். அடுத்த மக்களவை தேர்தலுக்கு தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.வும் இப்போதே வியூகம் வகுத்து தயாராகி வருகின்றன. ராகுல் காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டியளித்த ராம் ஜெத்மலானி கூறியதாவது: பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி பொருத்தமானவர். அவர் பிரதமரானால் இந்தியாவின் சிறந்த பிரதமராக இருப்பார். எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ. முன்னிறுத்த வேண்டும். எனது நிலையை யஷ்வந்த் சின்காவும் ஆதரித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர். அவரை மதவாதி என்று கூறுபவர்கள் மதச்சார்பின்மையை புரிந்து கொள்ளாதவர்கள். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேற ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தால் பா.ஜ. அவர்களை தடுக்க கூடாது. இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்.

No comments:

Post a Comment