Monday, January 28, 2013

படம் ஐந்து நாள் முன்னர் திரையிடப் படவில்லையாம் , அதனால் கமலஹாசன் தரப்பிற்கு 30 கோடி வட்டி இழப்பாம் # அது என்ன கணக்கோ எனக்குத் தெரியாது , எனினும் , 100 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப் பட்ட படம் ஐந்து நாட்கள் தள்ளி போனதால் 30 கோடி வட்டி இழப்பு என்றால் , கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ( அதாவது 35 நாட்களுக்கும் மேலாக ) முப்பது லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து தலா ஆயிரம் ரூபாய் என்று குறைந்த பட்சம் முன்னூறு கோடி ரூபாய் டி டி எச் ஒளிபரப்பு என்று சொல்லி வசூல் செய்தார்களே , அதற்கான வட்டி யாருக்குச் சென்றது ? அதன் கணக்கு எவ்வளவு ? வட்டியுடன் ஆயிரம் ரூபாயை கமல் தரப்பு திரும்பத் தரப் போகிறதா ? கமல் கட்டினால் அது வட்டி , நஷ்ட கணக்கு , முப்பது லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்தால் , அது காந்தி கணக்கா ? ( பணத்தை திரும்பத் தரப் போகிறார்களாம் , சரி , வட்டியை என்ன சார் பண்ணப் போறீங்க ? , முன்னூறு கோடி , 35 நாட்கள் வட்டியில்லாமல் அனுபவத்திதற்கான பலன் எவரை சேரும் ? ... கமல் அபிமானிகள் பதில் அளிப்பார்களா ?

No comments:

Post a Comment