Thursday, January 31, 2013

நான்காவது முறையாக, குஜராத் முதல்வராகியுள்ள மோடி, "அரசியல்வாதிகள், போலித்தனமான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வரக் கூடாது' என, பகிரங்கமாகவே முழங்குகிறார். தேர்தலில் வென்ற மோடி, தன்னை எதிர்த்த, கேசுபாய் படேல் வீட்டிற்கு, முதலில் சென்று ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இவரிடம் தோற்ற, காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட, மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். என்ன அற்புதமான ஜனநாயக பண்பாடு. இதுபோல், தமிழகத்தில், கனவில் கூட வரமாட்டேங்குதே! "தவறு செய்திருந்தால், மன்னியுங்கள்' என, மக்களிடம் வேண்டுகிறார் மோடி.

மின்சாரத்தில் உபரி மாநிலமாம். சூரிய ஒளி மூலமும், 2,000 மெகாவாட் உற்பத்தியாகிறதாம். சேர, சோழ, பாண்டிய மன்னர் ஆண்ட தமிழகம், தண்ணீருக்கும், மின்சாரத்துக்கும் தற்போது, திருவோடு ஏந்துகிறது. ஏனிந்த அவல நிலை? எங்கே உள்ளது சூட்சுமம்? நல்ல அரசை தேர்ந்தெடுத்த நம்மிடம், நல்ல அரசியல் அறிஞர்கள் இல்லையே! குஜராத்தை போல, தமிழகமும் மாற வேண்டாமா?தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், குஜராத் மின்வாரியத்திற்கு சென்று வரலாமே! இனியாவது, தமிழகம், குஜராத்தை பின்பற்றி, உன்னத நிலை பெறுமா?

No comments:

Post a Comment