Tuesday, January 15, 2013

பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை பா.ஜ.க. கடுமையாக கண்டித்துள்ளது. அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன தலையை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வர முடியாவிட்டால் அந்த பக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 தலைகளையாவது இங்கு கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. கோபத்தை வெளிப்படுத்துவது நியாயம்தான். ஆனால் அது போருக்கு வழிவகுத்து விடக் கூடாது என்று அரசு தெரிவித்துள.

இந்த நிலையில் சுஷ்மாசுவராஜையும், ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லியையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுஷ்மாசுவராஜின் இல்லத்திலேயே நடைபெற்றது. அப்போது எல்லையில் நிலவும் பதட்டம் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment