Monday, January 21, 2013

பெங்களூரு : இந்தியாவின் சட்டமுறை சோம்பேறித்தனமானது என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசி அருண் ஜெட்லி, சட்டமுறையில் திருத்தம் கொண்டு வர‌ வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய போது இந்தியாவின் சட்டமுறை சோம்பலாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாரும், நிலையானதுமான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும், நாட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நீதிபதிகளின் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நீதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக வாய்ப்பு உள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சிறந்த நீதிபதிகளை நியமிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் முடிவே இறுதியானது என்பதும், மற்ற நீதிபதிகளை ஐகோர்ட் நீதிபதிகள் நியமிப்பது எனதும் முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது வெற்றிகரமான சட்டமுறையை ஏற்படுத்தாது எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நீதிபதிகளை நியமிப்பதற்கு தேசிய நீதி கழகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் எனவும், நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களின் ஒழுக்கம் குறித்த நிலைப்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும் எனவும் அருண் ஜெட்லி பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment