Monday, January 28, 2013

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியின் தம்பியும், அகில இந்திய மண்எண்ணை வியாபாரிகள் சங்க துணை தலைவருமான பிரகலாதன் மோடி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவரை பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, கவுன்சிலர் சுடலைமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரகலாதன் மோடி விவேகானந்த கேந்திரத்துக்கு சென்று விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படக்கண்காட்சியை பார்த்தார்.

பிறகு நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். கோவிலில் அவரை தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்காளர்கள் ரமேஷ்குமார், ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

தரிசனம் முடிந்து வந்த பிரகலாதன் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது அண்ணன் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று முதல்-மந்திரியாகி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் நல்லாட்சி நடத்தியதால் அவருக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இந்த முறையும் அவர் நல்லாட்சி நடத்துவார். இந்திய மக்கள் நினைத்தால் நமது நாட்டின் பிரதமராக அவர் வருவார்.

No comments:

Post a Comment