Tuesday, January 28, 2014

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது, தேவை அற்றது' என, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் கூறியுள்ளார்.இது, இன்றைய சூழலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு, பெரிதும் தேவையான அறிவுரை. மோடி குறித்து, ஊடகங்கள் பாராட்டுவது, காங்கிரஸ் தலைவர்களுக்கு, தவறாகத் தோன்றினால், அதை, அவர்கள் நாகரிகமாக எதிர் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து, 'டீ வியாபாரி, காபி வியாபாரி' என்றெல்லாம், தரக் குறைவாக, இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள், மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன.அதோடு, மோடி அலையை பார்த்து, காங்கிரஸ் பயந்து விட்டதால் தான், இப்படி பேசுகின்றனரோ என்ற எண்ணத்தையும், மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. காங்கிரஸ், மேலும் வலு இழந்து போவதற்கும் இது வழி வகுக்கும்.ஞானதேசிகனின், மேற்சுட்டிய கருத்து, மாநில தலைவர்களுக்கு மட்டும் அன்றி, தேசிய தலைவர்களுக்கும் பொருந்தும்.கொள்கைகளில் மட்டும் மாறுபட்டு, மக்கள் பணி செய்ய, முதல் ஆளாய் தோள் கொடுக்கும் தலைவர்கள் தான், நினைவில் கொள்ளப்படுவர். அவர்கள், எதிர்க்கட்சியில் இருந்தாலும், ஆளும்கட்சியில் இருந்தாலும், அதைப் பற்றி கவலை இல்லை.வெற்று விமர்சனங்கள், எந்த பயனையுமே தராது.
நன்றி ;பிரசன்னா

No comments:

Post a Comment