Thursday, January 30, 2014

லக்னோ : பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, உ.பி., கோவிலில், சிலை அமைக்கப்பட்டு, தினமும் ஏராளமானோர் வணங்கி வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின், கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ளது பகவான்பூர் கிராமம். இங்குள்ள பழமையான சிவன் கோவிலில் தான், மோடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில், மோடி அமர்ந்திருப்பது போல், நான்கடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு, மோடி போல் தாடி, உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமான, பா.ஜ.,வினரும், மோடி ஆதரவாளர்களும் அந்த கோவிலுக்கு வந்து, 'மோடி சாலிசா' எனப்படும், மோடி புகழ் மந்திரங்களை பாடுகின்றனர். சிலர், மலர் மாலைகள் சூட்டி, வணங்கவும் செய்கின்றனர்.மேலும், அந்தக் கோவிலின் அர்ச்சகர், பிரிஜேந்திர நாராயண் மிஸ்ரா, 49, மோடி போலவே உடையணிந்து, பூஜை மேற்கொள்கிறார். மோடி சிலை அருகே, 24 மணி நேரமும், விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.இந்த தகவல், சமீபத்தில் தான், பிற பகுதியினருக்கு தெரிய வந்தது. அதையடுத்து, ஏராளமானோர், இந்த கோவிலுக்கு வந்து மோடியை தரிசித்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment