Wednesday, January 29, 2014


கலைகிறது காங்., கூடாரம்: தேசிய மாநாட்டு கட்சியை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை எதிரொலிக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் பிரபுல் பட்டேல், மோடிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். குஜராத்தில் நடந்த 2002ம் ஆண்டு கலவரம் குறித்து நரேந்திரமோடிக்கு நீதிதுறை குற்றமற்றவர் என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்நிலையில், ராகுல் உள்ளிட்ட பலர், இந்த விஷயத்தை கையில் எடுத்து பேசுவது சரியல்ல. நீதிதுறை ஒரு முடிவை அறிவித்துவிட்டால், அதை மதிக்க வேண்டியது அனைவரின் கடமை எ அவர் கூறி உள்ளார். இது, காங்கிரஸ் கட்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மத்தியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியியேறி உள்ள நிலையில் மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி வருகின்றன. இதனால் மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியேறி வரும் நிலையில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் பதவி ஆசையில் காங்கிரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவற்றின் மீது ஊழல் கறை படிந்துள்ளதால், காங்கிரஸ் செய்வதறியாமல் திகைத்து வருகிறது.

No comments:

Post a Comment