Wednesday, January 29, 2014

 ராகுல் பிரபல டிவி நிருவன பேட்டி இலகணேசன் ஜி கருத்து ,,,,,,,பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, நாட்டின் பல நகரங்களில், 70க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசிவிட்டார். இன்னும் சில கூட்டங்களில் பேசிவிட்டால், அவரது வெற்றி உறுதியாகிவிடும் என, நினைத்தோம்.ஆனால், ராகுலின் தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்த பின், மோடி இனி பேசத் தேவையில்லை. ராகுல் பேசினாலே போதும். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும் என்ற எண்ணம், எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி பேட்டியில், எந்த ஒரு கேள்விக்கும், நேரடியான பதிலை ராகுல் கூறவில்லை. அவருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாளிதழ்களை படிக்கும் பழக்கம் கூடவா அவருக்கு இல்லை. கோத்ரா சம்பவம் குறித்து, நீதிமன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையை தொடர்ந்தே, கோத்ரா சம்பவத்தில், மோடிக்கு தொடர்பில்லை என, நீதிமன்றம்அறிவித்தது.ஆனால், மோடிக்கும், கோத்ரா சம்பவத்துக்கும் தொடர்புண்டு என்பது போன்ற பொய் பிரசாரத்தை, ராகுல் செய்து வருகிறார். ராகுலின் சொந்த தொகுதியான அமேதி குறித்து, சுப்ர மணியசாமி தெரிவித்த கருத்துக்கு, ராகுலால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. மாறாக, அவர் தனிமனித விமர்சனத்தை செய்ய விரும்பவில்லை. சமூக மாற்றத்துக்கானவிவாதத்தை செய்ய விரும்புகிறார் என்கின்றனர்.

பகதுார் சாஸ்திரி, 'திங்கள்கிழமை இரவு ஒரு நேரம் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்' என்றார். பல கோடி மக்கள் பின்பற்றினர். இதற்குக் காரணம், சொல்கிறவர்களுக்கு உள்ள தகுதியை மக்கள் அறிந்து கொண்டிருந்தனர். ராகுல் சார்ந்துள்ள காங்கிரசும், அவரது குடும்பம் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், சமூக மாற்றம் வேண்டும் என, ராகுல் விரும்புகிறார். அதற்கு, விவாதம் நடத்த வேண்டும் என்பதை, யாரும் கேட்கவும் மாட்டார்கள், ஏற்கவும் மாட்டார்கள்.இல.கணேசன் ஜி பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் .

No comments:

Post a Comment