Friday, March 22, 2013

தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் ஆர். நடராஜன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய கட்டுரை:

களங்கம், மோடிக்கு அல்ல :-

அற்பர்களின் பொறாமை ஆபத்தானது. அது கெடுதல்களைச் செய்து விட்டுக் காரணங்களைத் தேடும். சில வருடங்களாகவே அந்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சுயநலமில்லாத தொண்டே, அவரை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. சில அவமதிப்புகளை அவர் மௌனமாக எதிர்கொள்கிறார். சமீபத்திய அவமதிப்பு, ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் அழைப்பும், நிராகரிப்பும். 

அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் சர்வதேசப் புகழ் பெற்றது. அதன் பொருளாதாரத் துறை சார்பாக நரேந்திர மோடி, இம்மாதம் 23–ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச அழைக்கப்பட்டார். மோடியும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். விஸாவை மறுத்த அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசுவதா என்று நினைக்கவில்லை. இப்போது அழைப்பை விலக்கிக் கொண்டிருக்கிறது வார்ட்டன். அது வார்ட்டனின் சிறுமை. எனவே, அமெரிக்காவின் சிறுமை. ஆனால், இந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதற்கு இந்தியாவிலிருந்து முடுக்கி விடப்பட்ட எதிர்ப்பே காரணம் என்று தெரிய வருவதால், இது நமது சிறுமையும் கூட. 

சில பேராசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்களும் மோடியின் வருகையை எதிர்ப்பதனால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று வார்ட்டன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இங்கிருந்து கிளப்பப்பட்டக் காழ்ப்புணர்வு, கடல் கடந்தும் கெடுதல் செய்கிறது. நம்மவர்கள் இப்படிச்செய்வது சகஜம். ஆனால், முரண்பட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாகச் சொல்லப்படும் வார்ட்டன் கல்வி நிலையம் விருப்பு வெறுப்புகளுக்குள்ளானது கல்வி உலகின் களங்கம். மோடியின் எதிர்ப்பாளர்கள் 250 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்லும் வார்ட்டன், 500 பேர் ஆதரவாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தால் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா? 

‘மோடி, தன்னை அழையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாக அழைத்து விட்டு நிராகரிப்பது குஜராத் முதல்வருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பல்ல. இந்த தேசத்திற்கு நேர்ந்த அகௌரவம்’ என்று சொல்லியிருக்கிறார், சிவசேனைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பிரபு. இவர் ஒரு பிரபல ஆடிட்டரும் கூட. இந்த எண்ணம் ஏன் பிறருக்கு வரவில்லை? மோடி மீதான வன்மம், தேச பக்தியை மீறி விட்டது. நாடு அப்படிப்பட்டவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை. 

மோடிக்கு 2005–ல் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிறரும் கொதிக்கவில்லை. குதூகலித்தார்கள். அப்போதே இந்திய பிரதமர் அமெரிக்க தூதரை அழைத்து, இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ‘கோத்ரா சம்பவத்திற்கு மோடி பொறுப்பு என்றால் எங்கள் ஆட்சியிலும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. எங்கள் அமைச்சர்கள் அமெரிக்க விஸா பெற்றார்களே! இவருக்கு மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்?’ என்று கேட்டிருக்க வேண்டும். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் பிரதமரோ, மகாராணியோ இங்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லையே’ என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையையும், பெருந்தன்மையையும் சோனியாவின் அடிமைகளிடம் எதிர்பார்க்க முடியுமா? இங்கிலாந்து நாட்டுத் தூதர், மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததற்கே, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். 

எப்படியாவது மோடியை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏன் சிலர் அலைகிறார்கள்? மோடியின் ஆட்சி தொடர்ந்தால், அவர் தேசிய அரசியலுக்கு வந்தால், ஊழல்கள் மூலம் எதுவும் சம்பாதிக்க முடியாது. ‘பிழைக்கத் தெரியாதவன் பிழைக்காமல் இருந்து விட்டுப் போகட்டும். நம் பிழைப்பைக் கெடுப்பானேன்’ என்று ஊழல் சிகாமணிகள் நினைக்கிறார்கள். என்ன செய்வது, நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக் கொண்டு திரிகிறார் நரேந்திர மோடி.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் ஆர். நடராஜன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய கட்டுரை:

களங்கம், மோடிக்கு அல்ல :-

அற்பர்களின் பொறாமை ஆபத்தானது. அது கெடுதல்களைச் செய்து விட்டுக் காரணங்களைத் தேடும். சில வருடங்களாகவே அந்த ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சுயநலமில்லாத தொண்டே, அவரை எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. சில அவமதிப்புகளை அவர் மௌனமாக எதிர்கொள்கிறார். சமீபத்திய அவமதிப்பு, ஒரு பிரபல அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் அழைப்பும், நிராகரிப்பும்.

அமெரிக்காவில் உள்ள வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் சர்வதேசப் புகழ் பெற்றது. அதன் பொருளாதாரத் துறை சார்பாக நரேந்திர மோடி, இம்மாதம் 23–ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச அழைக்கப்பட்டார். மோடியும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். விஸாவை மறுத்த அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசுவதா என்று நினைக்கவில்லை. இப்போது அழைப்பை விலக்கிக் கொண்டிருக்கிறது வார்ட்டன். அது வார்ட்டனின் சிறுமை. எனவே, அமெரிக்காவின் சிறுமை. ஆனால், இந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டதற்கு இந்தியாவிலிருந்து முடுக்கி விடப்பட்ட எதிர்ப்பே காரணம் என்று தெரிய வருவதால், இது நமது சிறுமையும் கூட.

சில பேராசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், அமெரிக்காவில் உள்ள சில இந்தியர்களும் மோடியின் வருகையை எதிர்ப்பதனால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று வார்ட்டன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இங்கிருந்து கிளப்பப்பட்டக் காழ்ப்புணர்வு, கடல் கடந்தும் கெடுதல் செய்கிறது. நம்மவர்கள் இப்படிச்செய்வது சகஜம். ஆனால், முரண்பட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதாகச் சொல்லப்படும் வார்ட்டன் கல்வி நிலையம் விருப்பு வெறுப்புகளுக்குள்ளானது கல்வி உலகின் களங்கம். மோடியின் எதிர்ப்பாளர்கள் 250 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் கொடுத்ததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகச் சொல்லும் வார்ட்டன், 500 பேர் ஆதரவாகக் கையெழுத்திட்டுக் கொடுத்தால் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா?

‘மோடி, தன்னை அழையுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அவர்களாக அழைத்து விட்டு நிராகரிப்பது குஜராத் முதல்வருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பல்ல. இந்த தேசத்திற்கு நேர்ந்த அகௌரவம்’ என்று சொல்லியிருக்கிறார், சிவசேனைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பிரபு. இவர் ஒரு பிரபல ஆடிட்டரும் கூட. இந்த எண்ணம் ஏன் பிறருக்கு வரவில்லை? மோடி மீதான வன்மம், தேச பக்தியை மீறி விட்டது. நாடு அப்படிப்பட்டவர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை.

மோடிக்கு 2005–ல் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பிறரும் கொதிக்கவில்லை. குதூகலித்தார்கள். அப்போதே இந்திய பிரதமர் அமெரிக்க தூதரை அழைத்து, இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ‘கோத்ரா சம்பவத்திற்கு மோடி பொறுப்பு என்றால் எங்கள் ஆட்சியிலும் மதக் கலவரங்கள் நடைபெற்றன. எங்கள் அமைச்சர்கள் அமெரிக்க விஸா பெற்றார்களே! இவருக்கு மட்டும் ஏன் அதை மறுக்க வேண்டும்?’ என்று கேட்டிருக்க வேண்டும். ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் பிரதமரோ, மகாராணியோ இங்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லையே’ என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். அந்த நேர்மையையும், பெருந்தன்மையையும் சோனியாவின் அடிமைகளிடம் எதிர்பார்க்க முடியுமா? இங்கிலாந்து நாட்டுத் தூதர், மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததற்கே, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

எப்படியாவது மோடியை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏன் சிலர் அலைகிறார்கள்? மோடியின் ஆட்சி தொடர்ந்தால், அவர் தேசிய அரசியலுக்கு வந்தால், ஊழல்கள் மூலம் எதுவும் சம்பாதிக்க முடியாது. ‘பிழைக்கத் தெரியாதவன் பிழைக்காமல் இருந்து விட்டுப் போகட்டும். நம் பிழைப்பைக் கெடுப்பானேன்’ என்று ஊழல் சிகாமணிகள் நினைக்கிறார்கள். என்ன செய்வது, நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டிக் கொண்டு திரிகிறார் நரேந்திர மோட

No comments:

Post a Comment