Friday, March 22, 2013

2070 தமிழகம் பாலைவனமாகும்:

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது. 

நீரின்றி அமையாது உலகு........... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

 பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்:

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

கடலில் கலக்கும் வெள்ளநீர்:

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

2025 ல் தண்ணீர் பிரச்சினை:

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள்:

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா??????

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
2070 தமிழகம் பாலைவனமாகும்:

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு........... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்:

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

கடலில் கலக்கும் வெள்ளநீர்:

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

2025 ல் தண்ணீர் பிரச்சினை:

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள்:

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா??????

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளத

No comments:

Post a Comment