Friday, March 29, 2013

ஐ.நா.,வில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், இலங்கை தமிழர்கள் மீது இனப் படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டும்' என, இந்திய அரசை வலியுறுத்திய கருணாநிதி, தன் வேண்டுகோள் ஏற்கப்படாததால், ஐ.மு., கூட்டணியில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த, 2006ல், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி, "மத்திய அரசின் கொள்கையே என் அரசின் கொள்கை' என, பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். 2009ல், இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது, போரைத் தடுத்து, தமிழர்களை காக்க முன்வராமல், மத்திய அரசின் கொள்கைகளுக்கு, ஆதரவாக செயல்பட்டு வேடிக்கை பார்த்தார். இன்று, ஆட்சியில் இல்லாத போது, இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து, மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐ.மு., கூட்டணியில் இருந்தும் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, மக்களை ஏமாற்றும் கபட நாடகம். ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும், அதன் செயல்பாடுகள் மீதும், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக, லோக்சபா தேர்தல் எப்போது நடைபெற்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி கொடுக்க, மக்கள் தயார் நிலையில் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியை புதை குழிக்கு அனுப்ப பொது மக்களும், மாணவ சமுதாயமும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி இனி தேறாது என்பதால், இனியும், காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தால், தி.மு.க.,வின் கதையும் கந்தலாகி விடும் என்பதை உணர்ந்து, தற்போது, கூட்டணியிலிருந்து விலகி, சுயநல நாடகத்தை அரங்கேற்றிஉள்ளார், கருணாநிதி. வரும் லோக்சபா தேர்தலில், வெற்றி பெறும் பொருட்டு, திட்டமிட்டு காயை நகர்த்தியுள்ள
கருணாநிதியின் எண்ணம், ஒருபோதும் ஈடேறாது; அவர் காணும் கனவும், இனி ஒரு நாளும் பலிக்காது.

No comments:

Post a Comment