Thursday, March 21, 2013


காபா ஒரு சிவாலயம் என்ற இந்து மரபு குரு நானக்கின் காலத்தில் (பொ.பி. 1469 –1539) பரவலாக புழக்கத்தில் இருந்தது.

அதைப் பற்றிய குறிப்பு ஜனம் ஸாகி (Janam Sãkhîs) என்ற சீக்கிய புனித நூலில், மக்கே மதினே தீ கோஷாடீ (Makkê-Madinê dî Goshatî) என்ற அத்தியாயத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த மரபு இந்தக் காலகட்டத்தை விட எவ்வளவு பழமையானது என்பது ஆராயப் படவேண்டும். ஆனால் குரு நானக் கட்டாயம் இந்த மரபைக் கண்டுபிடிக்கவில்லை, அவருக்கு முன்பே அது இருந்தது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் குரு நானக்கின் பயணங்கள் பற்றிய கட்டுரையில் (Guru Nanak’s Travels in the Middle East) பேராசிரியர் சுரீந்தர் சிங் கோஹ்லி எழுதுகிறார் –

“அரேபியாவில் குரு அரபிகள் போன்றே உடையணிந்து கொண்டார். ஒரு கையில் ஒரு தடி, தோளில் தொழுகையின் போது போடும் விரிப்பு, இன்னொரு கையில் குரான் புத்தகம், பாதம் வரை தவழும் நீளமான நீலநிற அங்கி.. இந்த உடையில் ஒரு சூஃபி ஞானி போன்றே அவர் தோற்றமளித்தார். சென்ற இடமெல்லாம் அவரை ஒரு உண்மையான ஃபகீர் என்றே மக்கள் கருதினார்கள்.

ஜெட்டாவிலிருந்து மெக்காவை நோக்கி குரு கால்நடையாகவே பயணமானார். மாலை மங்கும் நேரத்தில் மெக்காவை அடைந்தார். அங்கு காபாவிற்குப் பின்புறத்தில் உள்ள இறைதூதர் ஆபிரகாமின் நினைவிடத்திற்கு அருகிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் காபா தலத்தின் மேற்பார்வையாளன் ஜிவன் கான் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். இறை இல்லத்தை நோக்கிக் காலை நீட்டிப் ப்டுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது தகாத்து என்று குருவை எச்சரித்தான்.

அப்போது மெக்காவில் இருந்த முதன்மையான இஸ்லாமிய மத அறிஞர்கள் மௌல்வி முகமது ஹசன், காஜி ருக்ன் தீன், இமாம் ஜஃபார், பீர் அப்துல் பஹாவ் ஆகியோர். அவர்கள் குருவுடன் பல ஆன்மிக விஷயங்கள் குறித்து உரையாடினர். அந்த உரையாடல்களின் விவரங்கள் ஸையத் முகமது கவுஸ் ஸலஸ் ஃபகீர் என்பவரால் பாரசீக மொழியில் அவர் எழுதிய நூலில் பதிவு செய்யப் பட்டன. கியானி கியான் சிங் கூற்றுப்படி, அந்த விவரங்களைத் தான் பாயி பானா (bhãî Bhãnã) பஞ்சாபியில் மொழியாக்கம் செய்தார்”9.

குரு நானக் பின்வருமாறு கூறினார் – “மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம்10. மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது. முன்பு பிராமணர்களால் சிறப்பாக வழிபடப் பட்டு வந்த்து. அவர்களில் ஒரு பிராமணர் முசல்மானாகி விட்டார். அதர்வ வேதத்தைத் திரித்து அதற்கு ஃபுர்கான் (Furqãn) என்று பெயரிட்டு விட்டார். அவர் பெயர் முகமது. அந்தப் பெயரும் மகாதேவரையே குறிக்கும்11.

ஆனால் அவர் மற்ற எல்லா பெயர்களும் பழுதுபட்டவை என்று கூறி விடவே, ஹிந்துப் பெயர்கள் எல்லாம் மறைந்து எங்கும் முஸ்லிம் பெயர்களே புழக்கத்துக்கு வந்து விட்டன12. அவர் கடவுளின் பெயரால் பேசினார். ஆனால் பசுக்களை அறுத்துக் கொல்வதை ஆதரித்தார். எல்லா பிராமணர்களும் தர்ம நெறியிலிருந்து தவறும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட்து, ஆயினும் அவர்கள் தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தனர்.

கடவுள் ஒருவரே என்று கலீமா கூறுகிறது, ஆனால் முகமது தனது பெயரையும் கடவுளது பெயருடன் சேர்த்துக் குழப்பிக் கலந்து விட்டார். அனைவரும் முசல்மான்களாக வேண்டும் என்று உலகம் முழுவதற்கும் அவர் ஆணை பிறப்பித்தார். மன உறுதியுள்ள பலர் அவரது ஆணையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஆசையின் வசப்பட்டவர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.

ஒரு விதமான மதக் கொள்கையை அவர் உருவாக்கி அவர்களுக்குக் கற்பித்தார். மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் அவருடன் சேர்ந்தனர். வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் அவருடன் சேரவில்லை”

No comments:

Post a Comment