Sunday, March 24, 2013

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

லால் க்ருஷ்ண அத்வானி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பிறந்த இவர், செயின்ட் பாட்ரிக் பள்ளியில் பயின்றார். பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 

1947 ல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அத்வானி, இராஜஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டார்.  பின்னர் "ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி" யால் 1951ல் தொடங்கப்பட்ட "பாரதீய ஜன சங்கத்தில்" இனைந்தார். அதில் பல பதவிகளை வகித்த அவர் 1975ல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை காலத்தில் "ஜெயப்பிரகாஷ் நாராயணன்" அவர்கள் எதிர்சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால்தான் தன்னால் எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் பங்கு கொள்ள முடியும் என்று நிபந்தனை இட்ட‌தால், ஜன சங்கத்தை கலைத்துவிட்டு, ஜனதா கட்சியில் தன்னுடைய தோழர் வாஜ்பாயுடன் சேர்ந்தார் அத்வானி.  

அவசர நிலையை பிரகடனத்தால் காங்கிரஸ் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது.  அதனால் ஆட்சியை பிடித்த‌ ஜனதா கட்சியில்,  "தகவல் மற்றும் ஒளிப்பரப்பு" துறை அமைச்சராய் அத்வானி அவர்கள் பதவி ஏற்றார்.  ஆனால் ஆர் எஸ் எஸ் ஓடு பழைய ஜன சங்கத்தவர்கள் தங்கள் தொடர்பை விலக்கி கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியினர் நிபந்தனை இட்டதை எதிர்த்து அத்வானியும் மற்ற பழைய ஜன சங்கத்தவர்களும் ஜனதா கட்சியிலிருந்து விலகி புதியதாக "பாரதிய ஜனதா கட்சியை" தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை ஓட்டு வங்கியை குறி வைத்து எடுக்கப்படும் பல திட்டங்களை அத்வானி ராஜ்ய சபையில் எதிர்த்தார்.  பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அரசியல் வாதிகள் ஜாதிவாரியாக பிரித்தாளும் சூட்சியை அத்வானி கண்டித்தார்.  ஹிந்துக்களின் அவதார புருஷனான இராமபிரானுக்கு அவர் பிறந்த இடத்தில் கூட கோவில் கட்ட முடியாத அவல நிலையை எதிர்த்து பிரச்சாரங்கள் செய்தார்.  குறிப்பாக அயோத்தியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மக்கள் இதனை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

1989ல் அத்வானி தலைமையில் "இராம ஜன்ம பூமி"  போராட்டத்தை தொடங்கியது பாரதீய ஜனதா கட்சி. 1528ல் பாபர் எனும் கொள்ளைக்காரன் வரும்வரை, இந்திய அகழ்வாராய்ச்சி துறையால் நிரூபிக்கப்பட்ட அந்த கோவிலை, மீண்டும் கட்ட வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரியது.  அதை மத்திய சுன்னி வக்ஃப் போர்ட் நிராகரித்தது.  இதனால் நாட்டின் அரசியல் சரித்திரத்தையே புரட்டி போட்ட ரத யாத்திரையை அத்வானி அவர்கள் குஜராத்தில் உள்ள சோம்ராத் கோவிலில் துவக்கினார்.  நாடேங்கும் அவரின் இந்த யாத்திரை ஹிந்துக்கள் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்வையும், ஒருமைப்பாட்டையும்  ஏற்படுத்தியது.  லட்சக்கணக்கில் கூடிய கரசேவகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.  பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அந்த அவமானச் சின்னத்தை உடைத்தெரிந்தனர் கரசேவகர்கள்.

அத்வானியை காங்கிரஸ் மற்றும் பல சிறுபான்மை ஓட்டு பொறுக்கிகள், "மதவாதி" என்றும் "மத வெறியர்" என்றும் சித்தரித்தன.  அவரின் மேல் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அனால் அவர் எதற்கும் கலங்கவில்லை.  அவ்வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டார். 1991ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க காங்கிரஸுக்கு சவால் விடும் எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.  அதன் பின்னர் 1996ல் நடந்த தேர்ந்தலில் பா ஜ க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்ற அந்த அரசில், அத்வானி அவர்கள் உள்துறை அமைச்சராகவும், துனை பிரதமாராகவும் பதவி வகித்தார்.  தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு செயல்பட்டார்.

அதன் பின் எதிர்கட்சி தலைவர் போன்ற பல பதவிகளை அவர் வகித்தாலும், பதவிகள் அவரிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.  எந்த தீய பழக்கமும் இல்லாதவர்.  அப்பழுக்கற்றவர்.  ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்மேல் சுமத்தப்பட்டால் தன் பதவியை உடனே துறந்து, அக்குற்றசாட்டுகள் உண்மை அல்ல என்று நிரூபிக்கப் பட்ட பின்னரே பதவியை மீண்டும் எடுத்துக் கொள்பவர்.  சுருங்கச் சொன்னால் ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கு அவர் முன்மாதிரியாய் திகழ்ந்தார்.  தீர்க்கமான சிந்தனையாளர்.  எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவர்.

பதவிக்கு ஆசைப்படாத மனிதர்.  வாஜ்பாயை பிரதமராக முன்மொழிந்தவரே அவர்தான்.  கட்சிக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் வந்து அவரை சிலர் விமர்சித்த போதும் அதை நாகரீகத்தோடு எடுத்துக் கொண்டவர்.  யார் மீதும் காழ்புணர்ச்சிகளை கொள்ளாதவர். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியவர் அத்வானி என்றால் அது மிகையாகாது.  

அத்வானி தன் அனுபவங்களை எழுதிய‌ "என் நாடு, என் வாழ்க்கை" என்ற புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்று சாதனைப் புரிந்தது.  மத வெறி இல்லாதவர்.  தன் குடும்பத்திற்கும் அதிக நேரம் ஒதுக்கி ஒரு சாமன்யராய் எந்தவித படோடாபங்கள் இல்லாமல் இருப்பவர். உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களை ஒன்று படச் செய்வதில் பெரும் பங்காற்றியதோடு மற்ற மதத்தவரையும் வெறுக்காத‌வர். எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் அத்வானி.  

அவர் நீடுழி வாழட்டும்.

,

அவர் நீடுழி வாழட்டும

No comments:

Post a Comment