Monday, March 4, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.

இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.

விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.

இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.

விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபு{ஹ (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது. அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே.

கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன?

இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம்.

இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எந்த சிக்களும் வரப்போவதில்லை.

ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.

------------------------------------------------------------------------

டேய் பச்சை இலை புடுங்கிகளா சீமான்,நெடுமாறன்,வீரமணி என்ற ஈனமணி, பிரான்ஸ் நாட்டு தமிழச்சியின் கள்ள காதலன் கொளத்தூர் மணி,தமிழ் தேசியம் பேரவை, சீன மலம் தின்னி வினைவு கும்பல்கள்,திடீர் புடுக்கு சவுக்கு கோஷ்டிகள், திருடர் முன்னேற்ற கழக தலைமை திரு தட்சணாமூர்த்தி,இதர நண்டு சிண்டு தமிழ் அமைப்புகள் இதற்க்கு என்னடா சொல்ல போறீங்க !! தவுகீத் ஜமாத்தை ஆண்மையோடு எதிர்த்து பேசு இதில் ஒருத்தவனுக்காவது துணிவு இருக்கா அல்லது ஹிந்து அமைப்புகளின் மூத்திரத்தை ஒரு நாலு ஐந்து அவுன்ஸ் குடிகிரிங்களா ??? போங்கடா பொட்டை பசங்களா உங்களுக்கு எல்லாம் எதுக்கு வேட்டி சட்டை பேசாம பாவாடை தாவணிகளில் உலா வாங்கடா

No comments:

Post a Comment