Monday, September 23, 2013

                 முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர்   அல்ல.                                                                                                                                                                                                                                                                                                                                               ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு விழாவில் பேசிய ராகுல், ஏழைகளுக்காக ரத்தக் கண்ணீர் (?) வடித்திருக்கிறார்.
ஏழைகள் வசதியாக வாழ வேண்டும் என்று காங்கிரசும், பணக் காரர்கள் வசதியாக வாழ வேண்டும் என்று, பா.ஜ.,வும் நினைக் கின்றனவாம். பாவம், பெரிய கூட்டத்தை பார்த்தவுடன், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசியிருக்கிறார் ராகுல். "ஆண்டவன், ஏழைகளுக்கு, ரொட்டி வடிவில் வர வேண்டும்' என்று, 1947ல், காந்திஜி பேசினார். விடுதலை பெற்று, 66 ஆண்டுகளில், 55 ஆண்டுகள் நாட்டை ஆண்டது, காங்கிரஸ் கட்சி தான். ஆனால், ஏழைகளுக்கு உணவளிக்க, இப்போது தான் தோன்றியுள்ளது, இவர்களுக்கு. இவருடைய கொள்ளுத் தாத்தாவான நேருவிடம், இந்தியா, உணவு உற்பத்தியில் உயர்ந்து, உலகிற்கே சோறு போடக் கூடிய நிலையில் இருக்க வேண்டுமென்று தான், 500 கோடி ரூபாயில், கங்கை - காவிரி இணைப்பு திட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை, நேரு, குப்பைக் கூடையில் போட்டு, இந்தியா நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், கனரக தொழில்கள் வளர வேண்டும் என்று சொல்லி, டாடா, பிர்லா போன்றவர்களை ஊக்குவித்தார். இதன் பலனே, தற்போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது. இவருடைய கொள்ளு தாத்தா செய்த கொடுமையின் பலனை, இன்று அனுபவிக்கிறோம். ஏன் ராகுலிடமே, சில மாதங்களுக்கு முன், "குறைந்த பட்சம், தென்னக நதிகளையாவது இணைத்து, நீரின்றி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்றுங்களேன்' என்று கேட்டதற்கு, "அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று சொன்னார். ஆனால், இப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில், ஏழைகள் வாழ
வேண்டும் என்று, பேசியிருப்பது, முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர் அல்ல.

No comments:

Post a Comment